முரளியுடன் சேர்ந்து நடித்த இனிய நினைவுகள்.. இதயம் முரளி பற்றி சின்னி ஜெயந்த் எமோஷனல்

சென்னை: ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா, கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன், தமன், பரிதாபங்கள் சுதாகர், டிராவிட் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் கயாடு லோஹர். இதில் சின்னி ஜெயந்த்தும் ஒரு கேரக்டரை ஏற்றிருக்கிறார். படம் கடந்த வாரத்தில் வெளியாகி ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சின்னி ஜெயந்த் தனது முகநூலில் நெகிழ்ச்சியோடு பதிவிட்டிருக்கிறார்.

பராசக்தி உள்ளிட்ட படங்களை தயாரித்த ஆகாஷ் பாஸ்கரன் இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கும் திரைப்படம் இதயம் முரளி. இதில் அதர்வா ஹீரோவாக நடிக்க; கயாடு லோஹரும், ப்ரீத்தி முகுந்தனும் ஹீரோயின்களாக நடித்திருக்கிறார்கள். மேலும் பல நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். கடந்த வருடத்தில் எதிர்பார்ப்புடன் வெளியானது படம். ரசிகர்களும் ஆர்வத்துடன் சென்று படத்தை பார்த்தார்கள். அவர்களுக்கு படம் பெரும்பாலும் பிடிக்கவே செய்திருந்தது.

Chinni Jayanth Gets Emotional Over Idhayam Murali Success Murali s Memories Came Alive Again
Photo Credit:

என்ன ஸ்பெஷல்?: படத்தின் டைட்டிலே நாஸ்டாலஜியா மெமரியை நம்முள் தூண்டும் வகையில் வைக்கப்பட்டதே இதன் முதல் ப்ளஸ். அந்த டோனை படம் முழுவதும் ஆகாஷ் கொண்டு சென்றிருப்பது அனைவரையும் கனெக்ட் செய்துவிட்டது. குறிப்பாக 90ஸ் கிட்ஸ் மத்தியில் படத்துக்கு ஏகோபித்த ஆதரவு கிடைத்திருக்கிறது. விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட படம், வசூலிலும் டீசன்ட்டான இடத்தை பெற்றிருப்பதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Also Read
பெண்ணாக மாறிய உணர்வு.. அனைத்துக்கும் அந்தப் படம்தான் காரணம்.. விஷால் ஓபன்
பெண்ணாக மாறிய உணர்வு.. அனைத்துக்கும் அந்தப் படம்தான் காரணம்.. விஷால் ஓபன்

சக்சஸ் மீட்: படம் ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்துவிட்டதால் படக்குழு தரப்பில் சில நாட்களுக்கு முன்பு சக்சஸ் மீட் நடத்தப்பட்டது. அதில் படக்குழுவினர் கலந்துகொண்டார்கள். இந்நிலையில் இதயம் முரளி படத்தில் நடித்தது தொடர்பாக சின்னி ஜெயந்த் தன்னுடைய முகநூல் பக்கத்தில், "சில தருணங்களுக்கு நீண்ட திரை நேரம் தேவையில்லை.. இதயத்தைத் தொடும் உணர்வு இருந்தாலே போதும். 35 ஆண்டுகளுக்கு முன்பு இதயம் திரைப்படத்தில் அன்புக்குரிய முரளியுடன் இணைந்து நடித்தேன்.

Recommended For You
கல்யாணத்துக்கு முன்னாடியே ஜாலி டூரா? வி.ஜே பார்வதி - கம்ருதீனின் கொடைக்கானலில் செம ரொமான்ஸ்!
கல்யாணத்துக்கு முன்னாடியே ஜாலி டூரா? வி.ஜே பார்வதி - கம்ருதீனின் கொடைக்கானலில் செம ரொமான்ஸ்!

உயிர்ப்பித்துள்ளது: இன்று இதயம் முரளி திரைப்படம் அந்த இனிய நினைவுகளை மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறது. என்னுடைய தோற்றம் சில நிமிடங்களே என்றாலும், அதர்வாவுடன் நடித்த அந்தத் தருணம். முரளியுடன் இணைந்து மீண்டும் இணைந்தது போன்ற ஒரு உணர்வை கொடுத்தது. இரண்டு திரைப்படங்களையும் ரசிகர்கள் இணைத்து ரசித்தது இந்தத் தருணத்தை இன்னும் சிறப்பாக்கியது. மேலும் இதயம் முரளி படத்தின் வெற்றி விழாவில் இன்றைய இளம் நடிகர்கள் மற்றும் படக்குழுவினருடன் மேடையை பகிர்ந்தது மிகுந்த மகிழ்ச்சி. முரளியிலிருந்து அதர்வா வரை. இதயம் முதல் இதயம் முரளி வாரை. சில மரபுகளின் துடிப்பு என்றென்றும் நிற்காது" என்று குறிப்பிட்டுள்ளார்.

முரளியுடன் பல படங்களில்: முன்னதாக, சின்னி ஜெயந்த் தமிழ் சினிமாவில் 90களில் அறிமுகமாகி பிஸியான நடிகராக வலம் வந்தவர். பலருடன் அவர் சேர்ந்து நடித்திருந்தாலும் முரளியுடன் மட்டும் கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவரது மகன் இப்போது ஐஏஎஸ் ஆஃபிஸராக தலைமை செயலகத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X