மகள் போஷிக்காவை கவனிப்பதே இல்லை.. ஊர் சுத்தும் நித்யா.. வருத்தப்படும் தாடி பாலாஜி
சென்னை: தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் தாடி பாலாஜி. இவர் திரைப்படங்களில் மட்டுமில்லாமல் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் நடுவராகவும் இருந்துள்ளார். இவர் நித்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு போஷிக்கா என்ற ஒரு மகள் இருக்கும் நிலையில் இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
பாலாஜி போதைக்கு அடிமையானவர் என்றும், தன்னையும் மகளையும் குடித்துவிட்டு மோசமாக நடத்துகிறார் என நித்யா தாடி பாலாஜி மீது அடுத்தடுத்து குற்றம்சாட்டி இருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலமாக இருவரும் ஒன்று சேர்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பிறகு, மகள் போஷிகாவை பகடைக்காயாக பயன்படுத்தி நித்யா தன்னிடம் பணம் பறிக்க முயன்று வருவதாகவும் குற்றம் சாட்டி இருந்தார். இதையடுத்து இருவரும் நீதிமன்றம் சென்று விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

தாடி பாலாஜி மீது புகார்: இந்நிலையில், நித்யா, தாடி பாலாஜி மீது ஒரு குற்றச்சாட்டை கூறி உள்ளார். அதில், விவாகரத்து பெறும் போது மகளின் படிப்புக்கு ஆகும் செலவை பாலாஜி ஏற்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் இப்போது மகள் போஷிகாவின் படிப்புச் செலவுக்கு பாலாஜி பணம் தருவதில்லை என புகார் கூறியிருந்தார். இதுகுறித்து விகடனுக்கு பேட்டி அளித்துள்ள தாடி பாலாஜி, போஷிகாவின் பள்ளி கட்டணத்தை நான் கடந்த மூன்று வருடமாக செலுத்தி வருகிறேன் அதற்கான ரசீது அனைத்தும் என்னிடம் இருக்கிறது.
நித்யா தான் காரணம்: நித்யா என் மகளை கவனித்துக்கொள்வதே இல்லை, எப்போதும் பெங்களூர், ஐதராபாத்லத்தான இருக்காங்க, இதனால் என் மகளை அவங்க அம்மா வீட்டில் விட்டு விட்டு அடிக்கடி ஊருக்கு சென்றுவிடுகிறாள். இந்த விஷயம் எனக்கு தெரிந்ததும், தீபாளிக்கு போஷிகா வீட்டுக்கு வந்ததும். இனிமே இங்கயே இரு, இந்த வருஷம் பீஸ் கட்டக் கொஞ்சம் லேட்டாகிவிட்டது. இன்னும் இரண்டு ஒரு நாளில் கட்டி விடுகிறேன் என்று சொன்னேன். அப்போ போஷிகா சரி என்று தான் சொன்னாள் அதற்குள், நித்யா என்ன சொன்னார் என்று தெரியவில்லை.
மகள் வரவே இல்லை: வீட்டுக்குப் போய் நாய்க்கு சாப்பாடு வச்சிட்டு வர்றேனு போன போஷிகா திரும்ப வரவே இல்லை. வீட்டுக்கு போனவ போனை ஆஃப் பண்ணி வச்சிட்டா, இதனால் என்ன ஆச்சு, என்ன பிரச்சனைனு தெரியாமல் தான் நான் வீட்டுக்கு போனேன். ஆனால், பூட்டி இருந்ததால், பைத்தியக்காரன் மாதிரி தெருவுல நின்னுக்கிட்டு இருந்தேன் அதுக்கு அப்புறம் தான் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் பண்ணி பேசினேன். அதுக்குள்ள நித்யா என் மேல புகார் கொடுத்துவிட்டார்.
தகப்பனாக என் கடமையை செய்வேன்: இப்போது என் மகள் போஷிகா ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாள், என் பொண்ணுக்கிட்ட என்னை பத்தி தப்புத் தப்பாச் சொல்லி இருக்கா. நித்யா எங்கே வேணும்னா போகட்டும் என்ன வேணும்னாலும் பண்ணட்டும். ஆனா என் மகள் போஷிகா வாழ்க்கையையும் மட்டும் கெடுக்க வேண்டாம். ஒரு தகப்பனா என் மகளுக்கு நான் செய்ய வேண்டியதை செய்ய நான் செய்ய தயாராக இருக்கிறேன் என்று தாடி பாலாஜி, நித்யாவின் புகார் குறித்து விளக்கமாக பதில் அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications