மகளுக்கு பணம் தரல.. மோசமாக திட்டி மெசேஜ் பண்றாரு.. தாடி பாலாஜி மனைவி நித்யா பேட்டி!
சென்னை : இப்போதும் என்னை மோசமாக திட்டி மெசேஜ் செய்கிறார் என்று தாடி பாலாஜியின் மனைவி நித்யா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சின்னத்திரை, வெள்ளித்திரையில் நடித்து பிரபலமான தாடி பாலாஜி, பிக் பாஸ் சீசன் 2ல் போட்டியாளராக கலந்துகொண்டார்.
குடும்ப பிரச்சனைக் காரணமாக அவரது மனைவி நித்யாவை பிரிந்து வாழ்ந்து வந்த தாடி பாலாஜி, தன்னையும் மகளையும் குடித்துவிட்டு மோசமாக நடத்துவதாக தாடி பாலாஜி மீது அவரது மனைவி நித்யா குற்றம்சாட்டி இருந்தார்.

தாடி பாலாஜி மனைவி நித்யா
தாடி பாலாஜியின் மனைவி நித்யா சென்னையை அடுத்த மாதவரத்தில் தனது மகளுடன் தனியாக வசித்து வருகிறார். நித்யாவுக்கும் எதிர்வீட்டு காரருக்கும் அவ்வப்போது சண்டை ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த மாதம், நித்யா தங்களது காரை தாக்கியதாக சிசிடிவி ஆதாரத்துடன் மாதவாரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து நித்யாவை விடுவித்தனர்.

கார் கண்ணாடி உடைப்பு வழக்கு
இதையடுத்து, ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த தாடி பாலாஜியின் மனைவி நித்யா, இது ஒரு சின்ன பிரச்சனை தான், இதற்கு தேவையில்லாமல் காவல் நிலையம் வரை சென்றுவிட்டனர். எதிர்வீட்டுக்காரர் ஆதாரமாக கொடுத்த சிசிடிவியில் நான் கல்லை எடுத்து கார் கண்ணாடியை உடைந்தது போல எந்த காட்சியும் இல்லை. இது வேண்டும் என்று போடப்பட்ட வழக்கு என்றார்.

சந்தேகம் இருக்கு
அந்த வீடு என் அப்பா எனக்காக கொடுத்தது, அந்த வீட்டில் நானும் பாலாஜியும் இருந்த போது, அங்கு இருக்கும் பலரிடம் பாலாஜி பேசுவார் இப்போதும், அங்கு இருப்பவர்களிடம் என்னைப்பற்றி விசாரித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் எதிர்வீட்டுக்காரரிடம் பாலாஜிக்கு நல்ல பழக்கம் உண்டு. இதனால் இந்த காரை கண்ணாடி உடைப்பு வழக்கின் பின்னணியில் கூட அவர் இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தது என்றார்.

மகளுக்கு பணம் தரவில்லை
மேலும், தாடி பாலாஜி மீது நான் போட்ட வழக்கில் அவர் செய்த தவறு உறுதியானதால், மகிளா நீதிமன்றம் 50லட்சம் தரவேண்டும் என்றும், மாதா மாதம் மகளுக்கு 50 ஆயிரம் தரவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால், பாலாஜி இதுவரைக்கும் மகளுக்காக எந்த பணத்தையும் தரவில்லை. பாலாஜி தவறு செய்தார் என்பதை நிரூபிக்கத்தான் போராடினே தவிர பணத்திற்காக இல்லை.

இப்போதும் மோசமா திட்டுகிறார்
மேலும், பாலாஜி மகளுடன் பேசலாம், வெளியில் அழைத்துப் போகலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், மகளுக்கு என்று தனி செல்போன் கொடுத்து இருக்கிறேன். ஆனால், பாலாஜி ஒரு முறைக்கூட மகளுடன் பேசியது இல்லை, வெளியில் அழைத்துச் சென்றதும் இல்லை. இப்போதும் கூட என்னை மோசமாக திட்டி திட்டி மெசேஜ் அனுப்புவதால், நான் அவருடைய நம்பரை பிளாக் செய்துவிட்டேன் என்றார்.


Click it and Unblock the Notifications











