பக்கத்து வீட்டு பிரச்சனை.. பாஜகவில் சேரப்போகிறேன்.. அதிரடி முடிவெடுத்த தாடி பாலாஜி மனைவி !

சென்னை : பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட பிரச்சனையால் கைதாகி வெளியே வந்துள்ள தாடி பாலாஜியின் மனைவி நித்யா, பாஜகவில் இணையப்போவதாக தெரிவித்துள்ளார்.

சின்னத்திரை, வெள்ளித்திரையில் காமெடியனாக நடித்து பாப்புலரான தாடி பாலாஜி, பிக் பாஸ் இரண்டாவது சீசனிலும் போட்டியாளராக கலந்துகொண்டார்.

குடும்ப பிரச்சனைக் காரணமாக அவரது மனைவி நித்யாவை பிரிந்து வாழ்ந்து வந்தார். பாலாஜி போதைக்கு அடிமையானவர் என்றும், தன்னையும் மகளையும் குடித்துவிட்டு மோசமாக நடத்துவதாக தாடி பாலாஜி மீது குற்றம்சாட்டி இருந்தார்.

கணவரை பிரிந்தார்

கணவரை பிரிந்தார்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் நித்யாவும், தாடி பாலாஜியும் கலந்து கொண்டனர். வீட்டிற்குள் இருக்கும் வரைக்கும் இருவரும் நன்றாக பேசிக்கொண்டனர். இதனால், இருவரும் சேர்த்துவிடுவார்கள் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பிறகும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக ஒருவரை ஒருவர் மாறி மாறி அசிங்கப்படுத்திக் கொண்டனர்.

காவல் நிலையத்தில் புகார்

காவல் நிலையத்தில் புகார்

தாடி பாலாஜியின் மனைவி நித்யா சென்னையை அடுத்த மாதவரத்தில் தனது மகளுடன் வசித்து வருகிறார். இவரின் எதிர் வீட்டில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் அவ்வப்போது சண்டை ஏற்பட்டு வந்த நிலையில்,கடந்த சனிக்கிழமை, எதிர்வீட்டு உரிமையாளர், நித்யா தங்களது காரை தாக்கியதாக சிசிடிவி ஆதாரத்துடன் மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து நித்யாவை கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.

வேண்டுமென்றே வழக்கு

வேண்டுமென்றே வழக்கு

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய தாடி பாலாஜியின் மனைவி நித்யா, எதிர்வீட்டுக்காரர் மணி, நான் போகும் போதும், வரும் போதும் கெட்ட கெட்ட வார்த்தையால் திட்டுவதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார். இந்த விஷயம் இவ்வளவு பெரிய விஷயமாக காரணம், ஏற்கனவே நான் போலீசார் மீது கூறி குற்றச்சாட்டுதான். அந்த சிசிடிவியில் நான் கல்லை எடுப்பது போலவோ, கண்ணாடி உடைத்தது போலவோ எந்த காட்சியும் இல்லை. இந்த வழக்கை வேண்டும் என்றே போட்டுள்ளார்கள்.

நேர்மையான முறையில் சம்பாதிக்க மாட்டோமா?

நேர்மையான முறையில் சம்பாதிக்க மாட்டோமா?

தனியாக இந்த சமூதாயத்தில் வாழும் பெண்கள் குறித்து நிறைய கேள்விகள் எழுகிறது. அவங்க எப்படி சம்பாதிக்கிறார்கள்...என்ன தொழில் செய்ற, உனக்கு எப்படி இவ்வளவு காசு வருதுனு பல கேள்விகள் வருகிறது. நாங்கள் எல்லாம் நேர்மையான முறையில் சம்பாதிக்க மாட்டோமா? தவறான முறையில் தான் சம்பாதிப்போமா? அதனால் பெண்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தான் நான் பேசுகிறேன்.

பாஜகவில் சேரப்போகிறேன்

பாஜகவில் சேரப்போகிறேன்

நான் தனிப்பட்ட முறையில் நிறைய கஷ்டங்களைச் சந்தித்ததால், இனி வரும் பெண்கள் அதைச் சந்திக்கக்கூடாது என்ற நோக்கில் அவர்கள் மேம்பட வேண்டும் என ஆசைப்படுகிறேன். மேலும், பெண்கள் மேம்பட மற்றும் குழந்தைகள் நலனுக்காக பாஜகவில் இணையவுள்ளேன் என்று தாடி பாலாஜியின் மனைவி நித்யா செய்தியாளர்களிடம் பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X