பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் " பிரண்ட்ஷிப் "
சென்னை : ஷேண்டோ ஸ்டுடியோ & சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இயக்கத்தில் உருவாகி வரும் "பிரண்ட்ஷிப் "படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கிறார் .
ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இதற்கு முன்பு அக்னிதேவி திரைப்படத்தை இணைந்து இயக்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் முதல்முறையாக கதாநாயகனாக நடிக்கும் படம் இதுவே . பிரண்ட்ஷிப் திரைப்படத்தின் டைட்டில் போஸ்ட்டரை ஹர்பஜன் சிங் இன்று வெளியிட்டார் . இதர கதாபாத்திரங்கள் & தொழில்நுட்பக்குழு விவரங்கள் வருகின்ற நாட்களில் வெளிவர இருக்கிறது .

இதற்கு முன் இந்திய கிரிக்கெட் வீரரான ஶ்ரீசாந்த் மலையாளத்தில் டீம் 5 எங்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். மேலும் இவர் கன்னடத்தில் கெம்பே கௌடா 2 என்ற படத்தில் நடித்து இருக்கிறார் மற்றும் ஹிந்தியில் இரு படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார் .

என்ன.. தர்ஷன் அண்ணா.. மீரா அண்ணியா.. ஆண்டவன் அல்ரெடி முடிச்சு போட்டுட்டான்.. தீயாய் பரவும் வீடியோ!
மற்றொரு கிரிக்கெட் வீரரான இர்ஃபான் பதானும் தமிழ் படமான கோப்ரா படத்தில் சீயான் விக்ரமுடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் .இந்த படத்தை டிமாண்டி காலனி மற்றும் இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார் .இந்த படத்திற்கு இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருவது குறிப்பிடதக்கது .
தோனி மற்றும் சச்சின் வாழ்க்கையை மிகவும் அழகாக நேர்த்தியாக படமாக்கப்பட்டது நாம் எல்லோரும் அறிந்ததே. இன்னும் நிறைய வர இருக்கின்றன காத்திருப்போம்.


Click it and Unblock the Notifications











