அப்பா அடித்துவிட்டார்: பிரபல நடிகர் மீது மகள் போலீசில் புகார்

By Siva

பெங்களூரு: கன்னட நடிகர் துனியா விஜய் தன்னை தாக்கியதாக அவரின் மகள் மோனிகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கன்னட நடிகர் துனியா விஜய்யின் முதல் மனைவி நாகரத்னா. அவர்களுக்கு மோனிகா(18), மோனிஷா, சாம்ராட் என்று மூன்று குழந்தைகள் உள்ளனர். விஜய், நாகரத்னா இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

இதையடுத்து விஜய் கடந்த 2016ம் ஆண்டு வேறு கீர்த்தி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

['பெத்த உசுரு ரத்த உசுரு'... அம்மாவை பிடிக்கும் எல்லோருக்கும் இந்த பாடல் பிடிக்கும்!]

புகார்

புகார்

அப்பா விஜய் தன்னை தாக்கியதாக மோனிகா கிரிநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது உடை, ஓட்டுநர் உரிமம் மற்றும் சில ஆவணங்களை எடுக்க விஜய்யின் வீட்டிற்கு சென்ற இடத்தில் அவர் தனது இரண்டாவது மனைவி மற்றும் 3 பேருடன் சேர்ந்து தன்னை திட்டி, தாக்கியதாக மோனிகா புகார் அளித்துள்ளார்.

மருத்துவமனை

மருத்துவமனை

நான் வீட்டிற்குள் நுழைந்ததும் விஜய், கீர்த்தி, ஹேமந்த், வினோத், அப்பாவின் டிரைவர் முகமது ஆகியோர் என்னை திட்டினார்கள். என் தலையை பிடித்து சுவரில் முட்டினார்கள் என்கிறார் மோனிகா. விஜய் உள்ளிட்டோர் தாக்கியதில் காயம் அடைந்த மோனிகா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வழக்கு

வழக்கு

மோனிகா அளித்த புகாரின்பேரில் போலீசார் துனியா விஜய் மற்றும் அவரின் நண்பர்கள் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் மோனிகாவின் புகாரை ஏற்க மறுத்துள்ளார் விஜய். மோனிகாவை யாரும் திட்டவோ, தாக்கவோ இல்லை. அவர் என் வீட்டிற்கு வந்த இடத்தில் பூட்டை உடைக்கப் பார்த்தார். நான் அவருடன் பேசவே இல்லை என்று விஜய் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தாக்குதல்

தாக்குதல்

தாக்குதல் வழக்கில் துனியா விஜய் சிக்கியுள்ளது இது முதல் முறை அன்று. முன்னதாக ஜிம் டிரெய்னர் மாருதி கவுடாவை தாக்கிய வழக்கில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார் விஜய். பின்னர் அக்டோபர் 1ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் மீண்டும் பிரச்சனையில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X