»   »  ஃபேஷன் ஷோவில் கலக்கல் - ஆளே மாறிய தாடி பாலாஜி மனைவி!

ஃபேஷன் ஷோவில் கலக்கல் - ஆளே மாறிய தாடி பாலாஜி மனைவி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஃபேஷன் ஷோவில் கலக்கல் - ஆளே மாறிய தாடி பாலாஜி மனைவி!

சென்னை : சமீபத்தில் குடும்ப வாழ்க்கை பிரச்னையால் போலீஸ் நிலையம் சென்றவர் காமெடி நடிகர் தாடி பாலாஜி. இவருடைய மனைவி நித்யா, தனது கணவர் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகவும், குழந்தையைக் கொடுமைப் படுத்துவதாகவும் போலீஸில் புகார் அளித்திருந்தார்.

குடும்பத்தில் நிறைய சிக்கல்கள் நிலவியதை அடுத்து தற்போது அவர்கள் இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். சில நாட்களாக எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் இருந்துவந்த பாலாஜி இப்போது தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறார்.

Dhaadi balaji's wife at fashion show

இந்த நிலையில் பெண் தொழில் முனைவோர் தினத்தை முன்னிட்டு கடந்த 19-ம் தேதி சென்னையில் ஃபேஷன் ஷோ ஒன்று நடைபெற்றது. அந்த ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் தாடி பாலாஜியின் மனைவி நித்யா கலந்துகொண்டுள்ளார்.

ஃபேஷன் ஷோவில் ஒய்யாரமாக நடைபோட்ட நித்யாவை பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். நித்யாவுக்குள் இப்படியும் ஒரு திறமை இருக்கிறதா என்று ஆச்சரியத்துடன் பார்த்துள்ளனர்.

நித்யா, 'Women Endeavor' எனும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கான NGO அமைப்பைத் தொடங்கியிருக்கிறார். பழைய பிரச்னைகளிலிருந்து ஒதுங்கி வாழ முடிவெடுத்திருக்கும் நித்யா தனது பெயரை 'தேஜு' என மாற்றிக்கொண்டுள்ளாராம்.

English summary
Recently, comedian Dhaadi Balaji has gone to the police station by family affair. His wife, Nithya, had complained to the police that her husband had beaten her and tortured. Now both are living separately. A fashion show was held in Chennai for the entrepreneurial day on Nov 19th. Balaji's wife Nithya has participated in this fashion show.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil