திகில் படத்தில் சுந்தர் சி. யுடன் நடிக்கும் தன்ஷிகா
சென்னை: சுந்தர் சி யுடன் திகில் படத்தில் தன்ஷிகா நடிக்கிறார்.
இயக்குனர் சுந்தர் சி தற்போது சிம்பு, மேகா ஆகாஷ் மற்றும் கேத்ரீன் தெரசா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிந்துள்ளது. அடுத்ததாக ஹைதராபாத்தில் ஷூட்டிங் தொடங்க உள்ளனர்.

சுந்தர் சி சிம்பு திரைப்படத்தை முடித்த பிறகு விஷால் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இப்படி இயக்குனராக பிசியாக இருந்தாலும் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
துரை இயக்கும் இருட்டு என்ற திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக சுந்தர் சி நடிக்கிறார். முகவரி, தொட்டி ஜெயா, நேபாளி, 6 மெழுகுவர்த்திகள் என நல்ல படங்களை கொடுத்தவர் இயக்குனர் துரை. சமீபத்தில் இவருடைய இயக்கத்தில் வெளியான ஏமாளி திரைப்படம் சரியாக போகவில்லை. அதன் பிறகு இப்போது இருட்டு திரைப்படத்தை எடுத்து வருகிறார்.
[ குடும்பத்து பெயரை கெடுக்காதே, நடிப்பை நிறுத்து: வாரிசு நடிகரை அறைந்த பெண் ]
திகில் படமாக தயாராகி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. நாற்பது நாட்கள் ஊட்டியில் படப்பிடிப்பு நடத்திய இயக்குனர் துரை மீதமுள்ள காட்சிகளை சூரத் மற்றும் ஹைதராபாத்தில் ஷூட் செய்ய திட்டமிட்டுள்ளார். இப்படத்தில் தன்ஷிகா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இது பேய் இல்லாமல் உருவாகும் ஒரு திகில் படம் என இயக்குனர் துரை தெரிவித்துள்ளார்.
இருட்டு திரைப்படத்திற்கு திகில் கதைக்கு பெயர்பெற்ற எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் வசனம் எழுதுகிறார். இப்படத்தில் சாக்ஷி சௌத்ரி, விடிவி. கணேஷ், யோகிபாபு மற்றும் பலர் நடிக்கின்றனர். கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்கிறார். கிரிஷ் இசையமைக்கிறார்.


Click it and Unblock the Notifications











