OM - தனுஷ் நடிக்கும் ஓம்.. டைட்டில் மாஸ்.. சிவகார்த்திகேயனுக்கு அமரன் அமைந்தது மாதிரி அமையுமா?
சென்னை: அமரன் படத்தின் மெகா வெற்றிக்கு பிறகு ராஜ்குமார் பெரியசாமி; நடிகர் தனுஷை வைத்து படம் இயக்குகிறார். இதில் தனுஷுடன் மம்மூட்டி, சாய் பல்லவி உள்ளிட்டோர் நடிக்க; சாய் அபயங்கர் இசையமைத்துவருகிறார். பெரிய எதிர்பார்ப்பை இந்தப் படம் சந்தித்திருக்கிறது. இந்நிலையில் இன்று படத்தின் அப்டேட் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு; அதன்படி வெளியாகியிருக்கிறது.
சிவகார்த்திகேயனை வைத்து கடந்த 2024ஆம் ஆண்டு ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய திரைப்படம் அமரன். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்திருந்த அப்படம் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை அள்ளியது. அந்தப் படத்தின் வெற்றி ராஜ்குமார் பெரியசாமியின் மார்க்கெட்டை உச்சத்துக்கு கொண்டு போனது என்றே சொல்லலாம்.

தனுஷுடன் கூட்டணி: அமரன் படத்துடைய வெற்றிக்கு பிறகு ராஜ்குமார் யாரை வைத்து இயக்குவார் என்ற கேள்வி எழுந்த சூழலில்; பெரிய சர்ப்ரைஸாக தனுஷை வைத்து இயக்க திட்டமிட்டிருக்கிறார். இதில் தனுஷுடன் சாய் பல்லவி, மம்மூட்டி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இப்போதைய சென்சேஷனல் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இப்போதே படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.
ஷூட்டிங் நிலவரம்: இந்தப் படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன்புதான் தொடங்கியது. சென்னையில் பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு; அங்கிருந்து இந்தியாவின் பல இடங்களில் ஷிஃப்ட் ஆகி நடந்ததாக தெரிகிறது. சென்னையை பொறுத்தவரை புழல், ஈசிஆர் ஆகிய இடங்களில் அந்தப் படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்தது. தனுஷும் ஆர்வத்துடன் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.
தனுஷுக்கு முக்கியமான படம்: தனுஷின் கரியரை பொறுத்தவரை இந்தப் படம் முக்கியமானதாகவே கருதப்படுகிறது. ஏனெனில் இதற்கு முன் அவர் நடித்து வெளியான கர திரைப்படம் மோசமான விமர்சனத்தை பெற்றது. எனவே இந்தப் படத்தை வெற்றி படமாக கொடுத்து பெரிய அளவில் மார்க்கெட்டை வளர்க்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறாராம் D. அதற்கு தகுந்தபடி ராஜ்குமார் பெரியசாமியும் வெறித்தனமாக படத்துக்காக உழைக்கிறார்; கண்டிப்பாக இதுவும் அமரன் மாதிரி ஹிட்டடிக்கும் என படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
D 55 அப்டேட்: இந்நிலையில் படத்திலிருந்து முதல் அப்டேட் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, படத்துக்கு ஓம் என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதுதொடர்பாக வீடியோவும் வெளியாகியிருக்கிறது. அந்த வீடியோவை பார்க்கையில் செம்மரம் கடத்தியதாக ஆந்திராவில் கொல்லப்பட்ட தமிழர்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து படம் உருவாகியிருப்பது தெரிகிறது. சிவகார்த்திகேயனை வைத்து ராஜ்குமார் இயக்கிய அமரன் படமும் உண்மை கதைதான். இப்போது அதே ஃபார்முலாவை தனுஷுக்கும் கொடுத்திருப்பதால் அமரன் மாதிரி ஓம் ஹிட்டடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications
