அவர்களின் தலைவன்னு தனுஷ் பெருமையா சொல்வார்.. அரசியல் பேச்சுக்கு சலங்கை கட்டிய சகோதரி
சென்னை: தனுஷ் இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனையொட்டி பலரும் அவருக்கு தங்களுடைய வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள். சில நாட்களுக்கு முன்புகூட திருவள்ளூரில் ரத்த தான முகாம் நடைபெற்றது. அதில் தனுஷ் கலந்துகொண்டு பேசியதிலிருந்து; அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்று எல்லோருமே சொல்ல தொடங்கிவிட்டார்கள். இப்போது அவரது சகோதரியின் பேச்சும் அதற்கு சலங்கை கட்டிவிட்டிருக்கிறது.
இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவரான தனுஷ் இப்போது ஓம் படத்தில் நடித்திருக்கிறர். அக்டோபரில் படம் ரிலீஸாகவிருக்கிறது. இதற்கிடையே ராயன், கேப்டன் மில்லர் ஆகிய படங்களுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது விமர்சனத்தை சந்தித்தது. சூழல் இப்படி இருக்க அவரது 43வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை ஒட்டி; சில நாட்களுக்கு முன்பு தனுஷ் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக திருவள்ளூரில் ரத்த தான முகாமும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடைபெற்றது.

தனுஷின் பேச்சு: அந்த விழாவில் பேசிய தனுஷ், "புதுப்பேட்டை, மயக்கம் என்ன, 3, வடசென்னை, கர்ணன் உள்ளிட்ட படங்களுக்கு எல்லாம் தேசிய விருது கொடுக்கவில்லை. அப்போது ஏன் கொடுக்கவில்லை என்று யாரும் கேட்கவில்லை. இப்போது கேட்கிறார்கள். தட்டிவிடாதீர்கள்; தட்டிக்கொடுங்கள். அஜித் சொல்வது மாதிரி,'நீயா தோத்துட்டன்னு ஒத்துக்கும் வரைக்கும் உன்னை யாரும் தோற்கடிக்க முடியாது. நாம் சும்மா ஆடியோ லான்ச்சில்,இதுபோன்ற விழாக்களில் சந்தித்தோம்; கலைந்தோம் என்று மட்டும் இருக்கக்கூடாது.
அந்தக் கூட்டம் நாம் இல்லை: இந்தக் கூட்டத்துக்கு ஒரு நோக்கம் இருக்கிறது என்பதை உணர்த்த வேண்டும். நம்மிடம் இருக்கும் பசங்க சும்மா இணையத்தில் நெகட்டிவிட்டியையும், அவதூறையும் பரப்பும் கூட்டம் இல்லை என்பதையும் காண்பிக்க வேண்டும்" என பேசினார். அவரது இந்தப் பேச்சை பார்த்த பலரும், தனுஷ் அரசியலுக்கு வரப்போகிறார் அதனால்தான் இப்படியெல்லாம் நரம்பு புடைக்க பேசுகிறார் என்ற கருத்துக்கள் எழுந்திருக்கின்றன.
சகோதரி பேச்சு: இந்நிலையில் அதே விழாவில் தனுஷ் சகோதரி பேசியதும்; அவரது அரசியல் பிரவேச பேச்சுக்களுக்கு சலங்கை கட்டிவிட்டிருக்கிறது. சகோதரி பேசுகையில், "அனைவருக்கும் வணக்கம். இத்தனை பேர் என் தம்பி பின் நிற்கிறீர்கள் என்பதை மேடையில் இருந்து பார்ப்பதற்கு சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கூட்டம் கூடுவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. தானத்திலேயே பெரிய தானம் ரத்த தானம். அதற்காக இவ்வளவு கூட்டம் கூடியிருக்கிறீர்கள். அதை பார்க்கையில் அவர் மீது வைத்திருக்கும் அன்பையும், மரியாதையையும் காட்டுகிறது.
அதற்காக என் குடும்பம் சார்பாகவும், தம்பி சார்பாகவும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இப்படிப்பட்ட ரசிகர்களை பார்க்கும்போது, இவர்களுக்கு நான் தலைவன் என்று என் தம்பி பெருமையாக சொல்லிக்கொள்வார். ஒவ்வொருவருக்கும் நன்றி. உங்களை அனுப்பி வைத்த குடும்பத்துக்கும் ந்னறி" என்றார். இன்னொரு சகோதரி பேசுகையில், "ஒரு மருத்துவராக இந்த நிகழ்ச்சியில் நிற்பது சந்தோஷமாக இருக்கிறது.
தனுஷுக்கு ஒது ஒன்றும் புதிது இல்லை. அவருடைய ரசிகர்களுக்கும் இது புதிது இல்லை. சென்னை வெள்ளத்தின்போது கிட்டத்தட்ட 25,000 பேருக்கு மருத்துவ முகாம் நடத்தினோம். அப்போது தனுஷ் ரசிகர்கள் இல்லையென்றால் அதை செய்திருக்கவே முடியாது. ஒவ்வொரு முறையும் நிறைய சேவைகள் செய்கிறீர்கள். அது பெருமையாக இருக்கிறது. அவரை நம்பி நீங்கள் ரத்தம் கொடுக்கிறீர்கள். ஒவ்வொரு சொட்டு ரத்தமும் ஒரு உயிரை காப்பாற்றும். மருத்துவர்கள் சார்பாகவும் நன்றி சொல்லிக்கொள்கிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications

