ஜூஸ் குடிங்க போலீஸ்.. தண்ணீர் பாட்டில் மற்றும் ஜூஸ் உடன் ஓடோடி உதவிய தர்ஷா குப்தா.. தங்கம்யா!

சென்னை: இந்த கொரோனா காலத்தில் பசியால் வாடி வரும் பலருக்கும் தொடர்ந்து தன்னால் இயன்ற உதவியை நடிகை தர்ஷா குப்தா செய்து வருகிறார்.

ஒரு நாள் இல்லை.. இரண்டு நாள் இல்லை தொடர்ந்து பல நாட்களாக தனது சேவை கரத்தை சில தொண்டு நிறுவனங்களுடனும், நல்ல உள்ளங்களுடனும் இணைந்து செய்து வருகிறார் குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா

ஒரே நாளில் 1 மில்லியன் வியூஸ்... சாந்தனுவின் முருங்கைக்காய் சிப்ஸ் படம் சாதனை .

கொரோனா போரில் முன்களப் பணியாளர்களாக கடும் வெயில் மற்றும் தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வரும் காவல்துறையினருக்கு ஜூஸ் மற்றும் தண்ணீர் பாட்டில்களை வழங்கி பாராட்டுக்களை அள்ளி உள்ளார்.

பயமில்லை

பயமில்லை

எங்கே நமக்கு கொரோனா பரவிவிடுமோ என பயந்து வெளியே வராமல் மற்றவர்களை போல வீட்டுக்குள்ளே இருந்து கொண்டு இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோக்களை போட்டு வந்தாலே தர்ஷாவுக்கு லைக்குகள் குவிந்து இருக்கும். ஆனால், இந்த இக்கட்டான சூழலை புரிந்து கொண்டு தன்னலமின்றி பயமில்லாமல் மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார் தர்ஷா குப்தா.

கடவுளின் மறு உருவமே

கடவுளின் மறு உருவமே

"பசியோடு இருப்பவர்களுக்கு உணவு கொடுத்து பாருங்கள்.. நீங்கள் இறந்தபின் காணும் சொர்க்கத்தை ஒரு நொடிப் பொழுதில் காணமுடியும்" என கேப்ஷன் போட்டு தர்ஷா குப்தா தொடர்ந்து தனது பசியாற்றும் சேவையை சென்னையின் பல இடங்களில் செய்து வருவதை பார்த்த அவரது ரசிகர்கள் கடவுளின் மறு உருவமே தர்ஷா என பாராட்டி உள்ளனர்.

திருநங்கைகளுக்கு உதவி

திருநங்கைகளுக்கு உதவி

"கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் திருநங்கைகள் சமுதாயத்தை சார்ந்தவர்களுக்கு, தாம்பரம் அருகில் அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று நிவாரண பொருட்களை வழங்கினோம்.. எங்களுடன் இணையுங்கள்" என தர்ஷா குப்தா பதிவிட்டுள்ள ட்வீட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.

ஜூஸ் குடிங்க போலீஸ்

ஜூஸ் குடிங்க போலீஸ்

லாக்டவுன் காலத்தில் ஓய்வின்றி மக்களின் பாதுகாப்பாக பணியாற்றி வரும் கொரோனா முன்களப் பணியாளர்களான காவலர்கள் வெயிலில் வாடி வரும் நிலையில், அவர்களுக்கும் ஜூஸ் மற்றும் தண்ணீர் பாட்டில்களை கொடுக்க வேண்டும் என நினைத்த நல்ல மனசுக்கே தர்ஷாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

உயிரை பற்றி கவலைப்படாமல்

உயிரை பற்றி கவலைப்படாமல்

"கொரோனா பேரிடர் காலத்தில் தங்களது உயிரைப் பற்றி கவலைப்படாமல் மக்களுக்காக சேவையாற்றும் காவல் துறையினருக்கு என்னுடன் இணைந்து உதவிய இவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்" என நாஞ்சில் விஜயன் உடன் இணைந்து போலீசாருக்கு ஜூஸ் மற்றும் தண்ணீர் பாட்டில்களை கொடுத்து உதவி உள்ளார் தர்ஷா குப்தா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X