விஜய்யின் அரசியல் பற்றி பிரபலத்திடம் விவாதித்த ரஜினி?.. தலைவரோட ஸ்டாண்ட் என்னவா இருக்கும்?
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்திருக்கிறார் விஜய். அவரது தாக்கம் இந்த தேர்தலில் என்னவாக இருக்கப்போகிறது என்பதுதான் பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது. அவருக்கு திரைத்துறையிலிருந்து சிலரின் ஆதரவுகள் கிடைத்தாலும் இன்னும் வலுவான அடித்தளம் அமைக்க வேண்டும் என்றே கருதப்படுகிறது. எப்படியாவது அவரை கோட்டைக்கு அனுப்பிட வேண்டும் என அவரது ரசிகர்களும், தொண்டர்களும் துடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
விஜய்யின் அரசியல் பிரவேசம்தான் தமிழ்நாடு அரசியல் களத்தில் ஹெட்லைன்ஸாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. கரூர் துயர சம்பவம், ஜனநாயகன் பட ரிலீஸ் தாமதம், சிபிஐ விசாரணை வளையத்தில் விஜய் என பரபரப்பாக இருக்கிறது. இது ஒருபக்கம் இருக்க அவருக்கு விசில் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம். அது ஒருவகையில் தவெக தொண்டர்களுக்கு மகிழ்ச்சியான மனநிலையை கொடுத்திருக்கிறது. இதற்கிடையே அவருக்கு திரைத்துறையிலிருந்து ஆதரவுகள் கொஞ்சம் கிடைத்திருந்தாலும் பெரிய தலைக்கட்டுக்களின் ஆதரவு கிடைக்குமா என்பது சந்தேகமே.

வைரமுத்துவுடன் சந்திப்பு: முக்கியமாக ரஜினியின் ஸ்டாண்ட் இதில் என்னவாக இருக்கும் என்றுதான் பலரும் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். இதுவரை அவரும் விஜய்யின் அரசியல் பிரவேசம் பற்றி ஓபன் ஸ்டேட்மென்ட் எதுவும் கொடுக்கவில்லை. இந்நிலையில் தன்னை ரஜினி சந்தித்தபோது பேசியதாக வைரமுத்து குறிப்பிட்டிருக்கும் விஷயங்கள் சில கேள்விகளை எழுப்பியிருக்கின்றன. குறிப்பாக தமிழ்நாட்டின் நிகழ்கால வெப்ப அரசியல் பற்றி விவாதித்தோம் என அவர் கூறியுள்ளதை அடுத்து, 'தமிழ்நாட்டு அரசியல் களத்தில் விஜய்யும் வந்துவிட்டார். எனவே அவர் பற்றியும் நிச்சயம் பேசியிருக்க வேண்டும். விஜய்யின் அரசியல் பிரவேசம் பற்றி என்ன மாதிரியான விஷயங்களை எல்லாம் பேசியிருப்பார் ரஜினி?' என இணையத்தில் பதிவுகளை பார்க்க முடிகின்றன.
Mohan G: நேற்று ஒரு வீடியோ போட்டேன்.. இன்னைக்கு திரௌபதி 2 ஹவுஸ் ஃபுல்.. சந்தோஷத்தில் மோகன் ஜி!
வைரமுத்து ட்வீட்: ரஜினியுடனான சந்திப்பு குறித்து வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில்,
"சூப்பர் ஸ்டார்
ரஜினிகாந்த் அவர்கள்
நேற்று எனது இல்லத்திற்கு
வருகை தந்தார்
'பாசமுள்ள மனிதனப்பா - நான்
மீசவச்ச குழந்தையப்பா'
என்ற வரிகளுக்கு
இப்போதும் அவர்தான்
இலக்கியமாக இலங்குகிறார்
வியப்புக்குரிய மனிதர்தான்
அடித்துக்கொண்டோடும்
அரசியல் வெள்ளம்,
சாய்த்துவிட்டோடும்
சமூகப் புயல் இரண்டையும்
அரைநூற்றாண்டாய்க் கடந்து
தன்னிடத்தை ஒருவர்
தக்கவைத்துக் கொள்வது
ஜாதகத்தால் ஆவதல்ல;
சாமர்த்தியத்தால் ஆவது
உணவு முறை
உடல் நிலை குறித்து
ஊடாடிய எங்கள் உரையாடல்
ஊர் சுற்றக் கிளம்பியது
எங்கள் நூறு நிமிட
உரையாடலை
'கிரீன் டீ' கூடக் கெடுக்கவில்லை
தமிழ்நாட்டின் நிகழ்கால
வெப்ப அரசியல் குறித்து
விவாதித்தோம்
ஒவ்வொரு தரவிலும்
அவருக்குள்ள
ஆழமும் தெளிவும் உண்மையும்
என் ஆர்வத்தைத் தூண்டின
வடநாட்டு அரசியல் குறித்தும்
அங்கு
நேரப்போவதாக நம்பப்படும்
ஒரு திருப்பம் குறித்தும்
அவர் சொன்னபொழுது
நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன்
அடுத்த
இரண்டு ஆண்டுகளுக்கான
அவரது கலைப்பயணத்தின்
திட்டங்களை விவரித்தார்
2027 ரஜினி ரசிகர்களுக்குக்
கொண்டாட்ட ஆண்டாக இருக்கும்;
குறித்துக்கொள்ளுங்கள்
அவரிடம்
முதிர்ச்சி தெரிகிறது;
முதுமை தெரியவில்லை
'இளமை இனிமேல் போகாது
முதுமை எனக்கு வாராது'
என் தமிழ்
பொய்யாகவில்லை" என தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











