ரன் கதையை கேட்டுவிட்டு விஜய் அப்பா சொன்னது.. பல காலம் கழித்து உடைத்த லிங்குசாமி
சென்னை: இயக்குநர் லிங்குசாமி ஒருகாலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்தார். தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்த அவருக்கு; அஞ்சான் தீராத வடுவை கொடுத்துவிட்டது. அந்தப் படத்தின் ரிலீஸுக்கு முன்னதாக லிங்குசாமி கொடுத்த பேட்டிதான் அத்தனை இடருக்கும் காரணம். இந்நிலையில் விஜய்க்கு சொன்ன ரன் கதையை பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கிறார் லிங்குசாமி.
ஆனந்தம் திரைப்படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் லிங்குசாமி. தன் வாழ்க்கையிலிருந்தே கதையை எடுத்து அந்தப் படத்தை இயக்கியிருந்தார். மம்மூட்டி, முரளி, தேவயானி, ரம்பா, அப்பாஸ், ஸ்ரீவித்யா, டெல்லி கணேஷ் என பலர் நடித்திருந்த அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. நிச்சயம், குடும்பங்கள் கொண்டாடும் படமாக கொடுக்கக்கூடிய இயக்குநராக இனிமேல் வலம் வருவார் என்றுதான் எல்லோரும் லிங்குசாமி மீது அதீத எதிர்பார்ப்பை வைத்திருந்தார்கள்.

கமர்ஷியல் டைரக்டர்: ஆனால் அவரோ இரண்டாவது படத்திலேயே கமர்ஷியல் ரூட்டை பிடித்துவிட்டார். மாதவன், மீரா ஜாஸ்மின், அதுல் குல்கர்னி, விவேக், ரகுவரன் என பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து அவர் இயக்கிய ரன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதனையடுத்து அவர் இயக்கிய சண்டக்கோழி உள்ளிட்ட படங்களும் கமர்ஷியல் ஹிட்டடிக்க; அவர் முழுக்க முழுக்க கமர்ஷியல் இயக்குநராகவே மாறிவிட்டார்.
படுதோல்வியடைந்த அஞ்சான்: இப்படிப்பட்ட நிலைமையில்தான் சூர்யாவை வைத்து அஞ்சான் படத்தை இயக்கினார் அவர். சூர்யாவின் கெட்டப் எல்லாம் அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸானபோது படு வைரலானது. எங்கும் அந்தப் படம் பற்றிய பேச்சாகவே இருந்தது. லிங்குசாமி வேறு ரிலீஸுக்கு முன்னதாக, இந்தப் படத்தில் கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் இறக்கியிருப்பதாக பெருமையுடன் சொல்லியிருந்தார். ஆனால் அந்தப் படம் படுதோல்வியடைந்தது.
கடுமையான ட்ரோல்: லிங்குசாமி கொடுத்த பில்டப்புக்கும், படத்துக்கும் ஒன்றுமே சம்பந்தம் இல்லை என்பதால் ரசிகர்கள் உச்சக்கட்ட காண்டாகினார்கள். அப்போதுதான் சோஷியல் மீடியா பெரிதாக வளர்ந்துகொண்டிருந்த காலகட்டம். சரியாக அஞ்சான் படமும் தோல்வியை சந்தித்ததால் லிங்குசாமியை வைத்து செய்துவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். இன்றுவரை லிங்குசாமிக்குள் அந்த ட்ரோல்களின் காயம் இருக்கத்தான் செய்கிறது.
லிங்குசாமி பேட்டி: இந்நிலையில் சமீபத்தில் அவர் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில், "ரன் திரைப்படம் முதலில் விஜய்க்காகத்தான் உருவாக்கப்பட்டது. அதை ஏவிஎம் நிறுவனம்தான் தயாரிப்பதாகவும் இருந்தது. அந்தக் கதையை விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடமும் சொன்னேன். அவரோ கதையை கேட்ட பிறகு, 'ரன் ஒரு ஆக்ஷன் கலந்த காதல் படம். அந்த நேரத்தில் விஜய் ஏற்கனவே தமிழன் படத்தில் நடித்துக்கொண்டிருந்தார்.
கில்லியில் நடித்தார்: எனவே தமிழன் படத்துடன் ஒப்பிடும்போது ரன் சிறிய அளவிலான படமாக தோன்றும் என எஸ்.ஏ.சி கூறினார். அதன் காரணமாக அந்தப் படம் விஜய்யை வைத்து நடக்கவில்லை. அதற்கு பிறகு தெலுங்கில் வெளியான ஒக்டு படத்தின் ரீமேக்காக கில்லி படத்தில் நடித்தார்" என்றார். முன்னதாக, ரன் போன்றே சண்டக்கோழி படத்தையும் விஜய்க்காகத்தான் லிங்கு உருவாக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
