தனுஷின் மருமகன் நடிக்கும் படம்.. பாடல் பாடிய மிஷ்கின்.. சூப்பர் திருத்தம் சொல்லிருக்காரு பாருங்க

சென்னை: தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் மிஷ்கின். இப்போது விஜய் சேதுபதியை வைத்து ட்ரெய்ன் படத்தை இயக்கியிருக்கும் அவர்; நடிப்பிலும் பிஸியாக இருக்கிறார். இதற்கிடையே இசையின் மீது ஆர்வம் உடைய அவர் டெவில் படத்துக்கு இசையும் அமைத்திருந்தார். இந்நிலையில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் நடித்திருக்கும் லவ் ஓ லவ் படத்தில் ஒரு பாடலை பாடியது மட்டுமில்லாமல்; அழகான திருத்தத்தையும் செய்திருக்கிறார்.

சித்திரம் பேசுதடி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் மிஷ்கின். முதல் படமே அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. தொடர்ந்து அஞ்சாதே, நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, சைக்கோ என தனித்துவமான படங்களை இயக்கினார். அவர் இயக்கிய ஒவ்வொரு படமும் ஒவ்வொரு புது அனுபவத்தை கொடுத்ததன் காரணமாக தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்கள் லிஸ்ட்டில் அவரை சேர்த்தார்கள் ரசிகர்கள்.

Director Mysskin Changed Controversial Lyrics While Singing For Dhanush Relative Pavish s Love Oh Love
Photo Credit:

ட்ரெய்னில் மிஷ்கின்: பிசாசு 2 படத்தை இயக்கி முடித்துவிட்டாலும்; அந்தப் படம் இன்னும் ரிலீஸாகவில்லை. அடுத்ததாக விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோரை வைத்து கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ட்ரெய்ன் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். விரைவில் அந்தப் படம் ரிலீஸாகவிருக்கிறது. பெரிய ஹைப்பை இப்படம் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இயக்குநராக கண்டிப்பாக அவர் கம்பேக் கொடுப்பார் என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read
தர்மன் ஷூட்டிங்.. கால் நடுங்கும் சார்.. ரஜினியிடம் கொட்டி தீர்த்த அஷ்வத் மாரிமுத்து
தர்மன் ஷூட்டிங்.. கால் நடுங்கும் சார்.. ரஜினியிடம் கொட்டி தீர்த்த அஷ்வத் மாரிமுத்து

நடிகராக மிஷ்கின்: இதற்கிடையே இயக்கம் மட்டுமின்றி பாடல்களையும் சிறப்பாக பாடும் திறமையை கொண்டிருக்கும் மிஷ்கின்; நடிகராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். மாவீரன், லியோ, வணங்கான், டிராகன் என எக்கச்சக்க படங்களில் நடித்திருக்கிறார். அவர் நடித்த டிராகன் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி நடிகராக அவருக்கு பெரிய அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. அடுத்ததாக அவர் சத்தியவான் சாவித்திரி திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அதில் கீர்த்தி சுரேஷ் லீடு ரோலை ஏற்றிருக்கிறார்.

நடிப்பு, இயக்கம் மட்டுமில்லை: மிஷ்கின் நடிப்பு, இயக்கம் மட்டுமின்றி இசையிலும் ஆர்வம் உடையவர். முறையாக இசை கற்றுக்கொண்டு டெவில் படத்துக்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றியது நினைவுகூரத்தக்கது. அதற்கும் முன்னதாக அவர் பாடல்களும் பாடியிருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு நடுவராகவும் செயல்பட்டிருக்கிறார்.

ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் தனுஷின் மருமகனான பவிஷ் நடித்திருக்கும் லவ் ஓ லவ் திரைப்படத்தில் ஒரு பாடலை பாடியிருக்கிறார். வாடி பொட்ட புள்ள பாடலை மீண்டும் அந்தப் படத்துக்காக க்ரியேட் செய்திருக்கிறார்கள். அந்தப் பாடலை பாடும்போது, 'பொட்ட புள்ள' என்பது ரொம்ப கடுமையாக இருக்கிறது. எனவே, வாடி செல்லக்குட்டி வெளியே என்று வைத்துக்கொள்ளலாம் என சொல்லி; அதன்படியே பாடினார். பெண்களை மட்டமாக குறிப்பிடும் அந்த சொல்லை தவிர்த்த மிஷ்கினுக்கு பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X