தர்மன் ஷூட்டிங்.. கால் நடுங்கும் சார்.. ரஜினியிடம் கொட்டி தீர்த்த அஷ்வத் மாரிமுத்து

சென்னை: ரஜினிகாந்த்தை வைக்கும் கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். படத்துக்கு தர்மன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் தொடங்கியிருக்கும் ஷூட்டிங்கில் ரஜினிகாந்த் ஆர்வத்துடன் கலந்துகொண்டிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அஷ்வத் மாரிமுத்து; தர்மன் பட ஷூட்டிங்கில் நடந்ததை பகிர்ந்திருக்கிறார்.

ரஜினியும், கமலும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்கள். அதற்கும் முன்னதாக ரஜினியை வைத்து கமல் ஒரு படத்தை தயாரிக்க முடிவெடுத்தார்.முதலில் அந்தப் படத்துக்கு கே.எஸ்.ரவிக்குமாரை இயக்குநராக போட நினைத்தார்கள். ஆனால் அது ஒத்துவராததால் சுந்தர்.சி உள்ளே வந்தார். அறிவிப்பும் வெளியானது. இருப்பினும் அவரும் வெளியேற; சிபி சக்கரவர்த்தி உள்ளே வந்து வெளியே சென்றுவிட்டார். இப்படி இயக்குநர்கள் உள்ளே வருவதும், போவதுமாக இருப்பதால் இந்தப் படத்தின் கதி என்னாகுமோ என்ற அச்சம் இருந்தது.

Rajinikanth is Full Of Energy in Dharman Sets Says Directro Ashwath Marimuthu
Photo Credit:

அஷ்வத் மாரிமுத்து இயக்கம்: ஒருவழியாக அஷ்வத் மாரிமுத்துவை ஃபிக்ஸ் செய்துவிட்டார்கள். டிராகன் படம் வெற்றியடைந்தபோது ரஜினியை சந்திக்கையில் சொன்ன லைனைத்தான் அஷ்வத் டெவலப் செய்திருக்கிறாராம். படத்துக்கு அனிருத் இசையமைக்க; சிம்ரன், ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். மேலும் மீனாட்சி சௌத்ரியும் இதில் கமிட்டாகியிருப்பதாக தெரிகிறது.

Also Read
கர்ப்பமாக இருந்தாலும் ரெஸ்ட் எடுக்காத சமந்தா.. ஓடிடியில் களமிறங்குறாங்களே.. சூப்பர் சர்ப்ரைஸ்
கர்ப்பமாக இருந்தாலும் ரெஸ்ட் எடுக்காத சமந்தா.. ஓடிடியில் களமிறங்குறாங்களே.. சூப்பர் சர்ப்ரைஸ்

என்ன கதை?: இந்தப் படத்தில் ரஜினிகாந்த் மருத்துவராக நடிப்பது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கையில் உறுதியானது. அதேசமயம் ஹாலிவுட்டில் வெளியான தி குட் டாக்டர் என்ற வெப் சீரிஸின் ரீமேக்தான் இந்தப் படம் என்றும் தகவல் பரவியது. ஆனால் அதனை அஷ்வத் மாரிமுத்து திட்டவட்டமாக மறுத்துவிட்டார். மேலும், படையப்பா மற்றும் வேட்டையாடு விளையாடு படங்கள் கலந்த கலவையாக இது இருக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார். எனவே தர்மன் மாஸ் ப்ளஸ் க்ளாஸாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடங்கிய ஷூட்டிங்: இரண்டு ஜாம்பவான்களுக்கு படம் செய்வதால்; இதனை ரொம்பவே ஜாக்கிரதையாக கையாள்கிறாராம் இயக்குநர். இதற்கு முன்பு அவர் இரண்டு ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும்; இந்தப் படத்தை முதல் படம் மாதிரி நினைத்து வேலை செய்கிறாராம். சில நாட்களுக்கு முன்புதான் சென்னையில் ஷூட்டிங் தொடங்கியது. அதில் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் நடித்த காட்சிகளை அஷ்வத் ஷூட் செய்திருக்கிறார்.

அஷ்வத் மாரிமுத்து சொன்னது: இந்நிலையில் தனியார் ஊடகத்தின் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அஷ்வத்; தர்மன் ஷூட்டிங் ஸ்பாட் அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார். அவர் பேசுகையில், "தர்மன் திரைப்படம் எனக்கு மிகப்பெரிய பொறுப்பு. நேற்று செட்டில் ரஜினி சாரிடம், 'இதை பற்றி ரொம்ப யோசித்தால் கால் நடுங்கும் சார். அதனால்தான் எதையும் யோசிக்காமல் ஜாலியாக படம் செய்கிறேன்' என சொன்னேன். அவரோடு ஜாலியாக இருக்கிறது. அவருக்கு வயது ஆன மாதிரியே தெரியவில்லை.

துள்ளி குதிக்கிறார்: ஷூட்டிங் ஸ்பாட்டில் துள்ளி குதிக்கிறார். செம எனர்ஜியாக இருக்கிறார். தர்மன் ரொம்ப நேர்த்தியான படமாக இருக்கும். ரஜினியிடம் இருக்கும் அத்தனை விஷயங்களும், என்னுடைய ஸ்டைலும் சேர்ந்து இந்தப் படம் வரும். பலர் ரஜினி, கமலோடு படம் செய்ய வேண்டும் என இருக்கிறார்கள். அவர்கள் சார்பாக இந்தப் படத்தை நான் செய்கிறேன் என்றுதான் பார்க்கிறேன்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X