நயன் – விக்கி சிவன் திருமண விருந்தின் மெனு, வந்தவர்களுக்கு வழங்கப்பட்ட கிஃப்ட் பற்றி தெரியுமா?

சென்னை : ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண வைபவம், மெஹந்தி விழாவுடன் ஜுன் 8 ம் தேதி மாலை தொடங்கியது. இதில், நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என சுமார் 100 பேர் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

மாமல்லபுரம் அருகே கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் விசேஷ கண்ணாடி மாளிகை போன்று அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட திருமண அரங்கில் திருமண நிகழ்வுகள் நடைபெற்றன. முக்கிய கோயில்களைச் சேர்ந்த 20 சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க காலை 10.20 மணிக்கு இந்து பாரம்பரிய முறைப்படி நயன்தாராவின் கழுத்தில் தாலி கட்டினார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

முதலில் திருப்பதியில் நடைபெறுவதாக இருந்த இவர்களின் திருமணம், பிறகு மாமல்லபுரத்திற்கு மாற்றப்பட்டது. திருப்பதியில் திருமணம் நடத்தினால் விஐபி.,க்கள் அழைத்து செல்வது உள்ளிட்ட விஷயங்களில் இருந்த நடைமுறை சிக்கல்களை தவிர்ப்பதற்காகவே மாமல்லபுரத்திற்கு திருமணத்தை மாற்றியதாக கூறப்பட்டது.

விதிமீறி போட்டோஷுட்.. நயன்தாரா -விக்னேஷ் சிவன் மீது நடவடிக்கை எடுக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு!

200 பேருக்கு மட்டுமே அழைப்பு

200 பேருக்கு மட்டுமே அழைப்பு

திருமண நிகழ்ச்சிக்கு முக்கிய பிரபலங்கள் 200 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, திருமண விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், கார்த்தி, அஜித்-தின் மனைவி ஷாலினி உள்ளிட்ட முக்கிய நடிகர், நடிகைகளும், மணிரத்னம், ஹரி, கே.எஸ்.ரவிக்குமார், அட்லி, நெல்சன் உள்ளிட்ட முக்கிய இயக்குநர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலர் திருமணத்திற்கு சென்று மணமக்களை வாழ்த்தினர்.

Recommended Video

Nayanthara Wedding | மணமக்களை வாழ்த்திய Celebrities and Families *Celebrity | Filmibeat Tamil
ரஜினி, சரத்குமார் மட்டுமே தப்பினார்கள்

ரஜினி, சரத்குமார் மட்டுமே தப்பினார்கள்

திருமணத்தின் போட்டோக்கள், வீடியோக்கள் வெளியில் கசிந்து விடக்கூடாது என்பதற்காக திருமணத்தில் கலந்து கொள்பவர்களின் மொபைல் போன்கள் வாசலிலேயே வாங்கி வைக்கப்பட்டன. க்யூஆர் கோடு சரி பார்த்த பிறகே அனைவரும் அனுமதிக்கப்பட்டனர். விருந்தினர்கள் அனைவரும் விவிஐபி, விஐபி என தரம்பிரித்தே உள்ளே அனுப்பப்பட்டனர். ரஜினி, சரத்குமார் மட்டுமே மொபைல் போன் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

மெனு லிஸ்ட் என்னனுதெரியுமா

மெனு லிஸ்ட் என்னனுதெரியுமா

நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் அசைவ பிரியர்களாக இருந்தாலும் அவர்களது திருமணத்தில் சுத்தமான சைவ உணவுகள் மட்டுமே பரிமாறப்பட்டன. செட்டிநாடு ஸ்டைலில் 20 வகையான உணவுகள் மெனு லிஸ்டில் இடம் பெற்றிருந்தன. பலாப்பழ பிரியாணி, பன்னீர் பட்டாணிக்கறி, பொன்னி அரிசி சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம், பூண்டு மிளகு ரசம், மோர் மற்றும் புளிக்குழம்பு, மிக்கன், செட்டிநாடு கறி, பருப்புக் கறி, அவியல், சேனைகிழங்கு வருவல், சேப்பங்கிழங்கு புளிக் குழம்பு, காளான் மிளகு வறுவல், பாதாம் அல்வா, இளநீர் பாயாசம், கேரட் ஐஸ்கிரீம் போன்ற உணவுகள் இடம்பெற்றிருந்தன.

சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த நயன்–விக்கி

சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த நயன்–விக்கி

தமிழக்கத்தில் திருமண விழாக்களில் கலந்து கொள்பவர்களுக்கு தேங்காய் உள்ளிட்ட பொருட்களை தாம்புழப்பை கொடுப்பது வழக்கம். ஆனால் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஆகியோர் தங்கள் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றை பரிசாக வழங்கியுள்ளனர். அவர்கள் திருமண விழாவில் ஷாருக்கான், ரஜினிகாந்த், சூர்யா உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மணமக்களுக்கு என்ன பரிசு வழங்கினார்கள் என்பது பற்றிய தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X