#2.0... ரஜினி, ஷங்கர், அக்ஷய்குமார்... ஆர்வத்தை தூண்டும் ஐந்து விஷயங்கள்!

ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள #2.0 படத்தை காண நிறைய காரணங்கள் இருக்கின்றன.

Recommended Video

ஆர்வத்தை தூண்டும் விஷயங்கள்... இதற்காகவே 2.0 பார்க்கலாம்- வீடியோ

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நாயகனாக நடித்துள்ள 2.0 படம் இன்று ரிலீசாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு சுமார் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றது. தமிழ் சினிமாவில் அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் என்ற பெருமையுடன் உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேலான தியேட்டர்களில் இப்படம் ரிலீசாகியுள்ளது.

இப்படத்தைக் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில், இப்படத்தை மக்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்க இதோ சில காரணங்கள்...

ரஜினி:

ரஜினி:

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதுப் பிரிவிலும் ரஜினிக்கென்று ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வது போல் தன் படம் இருக்க வேண்டும் என ரஜினி கவனமாக படங்களைத் தேர்வு செய்கிறார். அந்தவகையில் ரஜினி எனும் பெயருக்காகவே இப்படத்தைப் பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

[வாவ் ரஜினி.. சூப்பர் எமி.. வெறித்தனமான அக்‌ஷய்.. #2.0. மினி விமர்சனம்! ]

ஷங்கர்:

ஷங்கர்:

பிரமாண்டத்திற்குப் பேர் போன இயக்குநர் என பெயரெடுத்தவர் ஷங்கர். தனது ஒவ்வொரு படங்களிலும் ஏதாவது ஒரு சமூகப் பிரச்சினையை முன்னெடுத்து கதைக்களம் அமைத்து வருபவர். அதோடு ஹாலிவுட் படங்களுக்கு இணையாக தமிழ்ப் படங்களும் உருவாக வேண்டும் என்ற எண்ணத்தில், ஓவ்வொரு படத்திலும் தொழில்நுட்ப புதுமைகளை அறிமுகம் செய்து வருபவர். அந்தவகையில், இப்படத்திலும் பல புதிய விசயங்கள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

அக்‌ஷய்குமார்:

அக்‌ஷய்குமார்:

பிரபல பாலிவுட் நடிகரான அக்‌ஷய்குமார் தமிழில் இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். சிறந்த நடிகர் எனப் பெயரெடுத்த அவர், இப்படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்திருக்கிறார். இப்பட வெற்றியைத் தொடர்ந்து தமிழில் அவருக்கு நிச்சயம் பட வாய்ப்புகள் அமையும் என எதிர்பார்க்கலாம்.

பிரமாண்டம்:

பிரமாண்டம்:

ஷங்கர் படம் என்றாலே பிரமாண்டத்திற்கு குறைவிருக்காது. ஒவ்வொரு காட்சியிலும், ஒவ்வொரு ஷாட்டிலும் பிரமாண்டத்தால் மிரட்டியிருப்பார். இப்படத்திலும் அதுபோன்ற காட்சிகள் இருப்பது டிரெய்லரில் உறுதியாகியுள்ளது. டிரெய்லரிலேயே இத்தனை மிரட்டல் என்றால் படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது.

பட்ஜெட்:

பட்ஜெட்:

லைகா தயாரித்துள்ள இப்படத்தின் செலவு ரூ. 500 கோடி எனக் கூறப்படுகிறது. இப்படம் முதல் நாளில் ரூ. 100 கோடி வசூலைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியில் மட்டும் முதல் நாளில் ரூ. 35 கோடி வசூலாகலாம் எனக் கூறப்படுகிறது. இதன்மூலம் பாகுபலி 2வின் சாதனை முறியடிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X