For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாவ் ரஜினி.. சூப்பர் எமி.. வெறித்தனமான அக்‌ஷய்.. #2.0. மினி விமர்சனம்!

|
2.0 படம் எப்படி இருக்கு?- வீடியோ

சென்னை: ரஜினியின் 2.0 படத்தைப் பார்த்த விமர்சகரின் விமர்சனம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இயக்குநர் சங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் 2.0. நாளை உலகம் முழுவதும் இப்படம் ரிலீசாக இருக்கிறது. இப்படத்தின் டிரெய்லர், போஸ்டர் போன்றவற்றின் மூலம் ஏற்கனவே எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது.

இதனால், இப்படம் எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

விமர்சனம்:

விமர்சனம்:

இந்நிலையில், 2.0 படத்தின் முதல் விமர்சனம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் சென்சார் போர்டில் இடம் பெற்று இருந்த யுஏஈவைச் சேர்ந்த உமைர் சந்து தான் இந்த விமர்சனத்தை எழுதியுள்ளார். அங்கு வெளியாகும் முக்கிய தமிழ்ப் படங்களைப் பார்த்ததும் அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் அப்படத்தைப் பற்றிய விமர்சனத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் உமைர். அந்த வகையில் 2.0 பற்றிய விமர்சனத்தை அவர் வேளியிட்டிருக்கிறார்.

பாராட்டு:

அதில் அவர், ‘நடிகர் ரஜினிகாந்த்தைப் போல வேறு எந்த நடிகராலும், ஏன் எந்த பாலிவுட் நடிகராலும் நடிக்க முடியாது, அந்தளவிற்கு 2.0 படத்தில் நடித்துள்ளார். எமி ஜாக்சன் மிகவும் திருப்திகரமாக நடித்திருக்கிறார். நடிகர் அக்‌ஷய் குமார் மிரட்டும் தொனியில், வெறித்தனமாக நடித்துள்ளார்.

நல்ல கதைக்கரு:

படம் நிச்சயம் மக்களைக் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. நல்ல ஆக்சன், திரைக்கதை, ஆண்ட்ராய்டு போனை வைத்து நல்ல கதைக்கரு. பிரமாதமான கிராபிக்ஸ் காட்சிகள். இந்தப் படம் அக்‌ஷய் மற்றும் ரஜினிகாந்துக்கு மீண்டும் ஒரு மைல்கல்லாக அமையும்.

மைல்கல்:

மைல்கல்:

இந்தப் படத்தின் கதாபாத்திரத்திற்காக அக்‌ஷய் குமார் மிகவும் கடினமாக உழைத்துள்ளார். இதற்காக அவர் அணிந்து இருக்கும் வேடம் பிரமிக்க வைக்கிறது. படம் முழுவதும் அவரது நடிப்பு வியக்க வைக்கிறது.

வசூலில் மைல்கல்:

ரஜினி, அக்‌ஷய் குமாரின் பாத்திரப்படைப்புகளும், இப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள இன்னும் சில கேரக்டர்களும் நம் மனதை விட்டு அகல பல ஆண்டுகள் ஆகும். வசூலிலும் இப்படம் இந்திய சினிமாவில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

2.0 ஒரு பாடப் புத்தகம்:

இப்படத்தின் திரைக்கதை முதல் காட்சியிலிருந்தே பார்வையாளர்களைக் கட்டிப்போட்டுவிடுகிறது. இறுதிக்காட்சி வரை தொய்வு என்ற ஒன்றுக்கே இடம் இல்லாமல் இக்கதையை பின்னியிருப்பது ஷங்கரின் சாமர்த்தியம். இன்னொரு பக்கம் இதுவரை உருவான இந்திய சயின்ஸ் ஃபிக்சன்களிலேயே பெஸ்ட் என்று மிக உறுதியாக இப்படத்தை சொல்லமுடியும். இனி உருவாகவிருக்கும் சயின்ஸ் ஃபிக்சனுக்கெல்லாம் ‘2.0' ஒரு பாடப்புத்தகம்.

திரில்லர்:

இவர்களைப் போல சங்கரும் மீண்டும் இந்தியாவிலேயே சிறந்த இயக்குனர்களில் ஒருவர் என்பதை உறுதிபடுத்தியுள்ளார். இந்தப் படம் சிறந்த சைன்ஸ் பிக்ஷன் படம். ஆண்ட்ராய்டு புரட்சியை ஒரு பரபரப்பாக்கி, அதில் வைத்திருக்கும் சதி, கற்பனை திரைக்கதை, அதிர்ச்சியூட்டும் விளைவுகள் என்று படம் த்ரில்லர் செல்கிறது" என இவ்வாறு அவர் தனது விமர்சனத்தில் பாராட்டியுள்ளார்.

3டி தொழில்நுட்பம்:

3டி தொழில்நுட்பம்:

2.0 படம் முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ளது. செல்போன் தொழில்நுட்பம் குறித்த தகவல்களும், அதன் பலன்கள் பாதிப்புகளும் இந்தப் படத்தில் இடம் பெற்று இருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

English summary
According to the noted film journalist Umair Sandu, 2.0 is a sure shot blockbuster and bears testimony to Rajinikanth's star power. He further added that he no other actor could have pulled off the film with such ease.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more