Gatta Kusthi 2 Day 2 Box Office - கட்டா குஸ்தி 2வது நாள் வசூல் தெரியுமா?.. பட்டாசான பாக்ஸ் ஆஃபிஸ்

சென்னை: செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், முனீஸ்காந்த், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் கட்டா குஸ்தி 2. முதல் பாகம் போன்றே இரண்டாவது பாகமும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த ரெஸ்பான்ஸ் பாக்ஸ் ஆஃபிஸிலும் எதிரொலிக்க தொடங்கியிருக்கிறது. இதனால் படக்குழு உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறது.

செல்லா அய்யாவு இயக்கிய கட்டா குஸ்தி படத்தின் முதல் பாகம் அனைவரிடமும் பரவலான வரவேற்பை பெற்றது. விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமியின் கரியரிலும் இந்தப் படம் முக்கியமான இடத்தை பிடித்திருக்கிறது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஏற்ற பூங்குழலி கதாபாத்திரத்தைவிடவும்; இந்தப் படத்தில் அவர் ஏற்றிருந்த கீர்த்தி கேரக்டர் பிரகாச ஜோதியாக எரிந்து அவருக்கும் வெளிச்சம் பெற்றுக்கொடுத்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

Gatta Kusthi 2 Box Office Collection Day 2 - Vishnu Vishal s Film Earns 7 45 Crore in Two Days
Photo Credit:

கட்டா குஸ்தி 2: முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகத்தை உருவாக்கினார்கள். கதையின் மீது இருந்த நம்பிக்கையால் விஷ்ணுவே இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார். முதல் பாகத்தில் நடிக்காத மோக்‌ஷா, ரம்யா கிருஷ்ணன் இரண்டாவது பாகத்துக்குள் வந்திருக்கிறார்கள். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். நேற்று முன்தினம் இந்தப் படமானது தியேட்டர்களில் ஜோராக ரிலீஸானது. அதற்கும் முன்னதாகவே பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு காட்சியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற தொடங்கிவிட்டது.

Also Read
அப்படியே அந்தக்கால சாவித்திரி மாதிரி இருக்காங்களே.. விண்டேஜ் லுக்கில் சினேகா!
அப்படியே அந்தக்கால சாவித்திரி மாதிரி இருக்காங்களே.. விண்டேஜ் லுக்கில் சினேகா!

ரசிகர்களிடமும் அதேதான்: தியேட்டருக்கு வந்த பிறகு ரசிகர்களிடமும் அதே மாதிரியான ஒரு ரெஸ்பான்ஸைத்தான் பெற்றிருக்கிறது படம். குறிப்பாக பெண்கள் மற்றும் குடும்பத்தினரிடையே படத்துக்கான மவுசு அதிகரித்திருக்கிறது. கணவன் - மனைவிக்குள் இருக்கும் ஒற்றுமை, சண்டை, டைவர்ஸ் வரைக்கும் செல்வது உள்ளிட்ட விஷயங்களை கமர்ஷியலாகவும் அதேசமயம் அனைவரையும் கவரும் வகையிலும் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

கலக்கிய குழந்தை நட்சத்திரம்: படத்தின் இன்னொரு ப்ளஸ்ஸாக இருப்பது குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் சாரா. விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யாவுக்கு மகளாக நடித்திருக்கும் சாராவை பாராட்டாதவர்களே இல்லை. எதிர்காலத்தில் அந்தக் குழந்தை தென்னிந்திய சினிமாவில் முக்கியமான இடத்தை பிடிக்கலாம் என்றும் இப்போதிருந்தே ஆரூடம் கூற தொடங்கியிருக்கிறார்கள். இப்படி படத்துக்கு அனைத்து ஏரியாக்களிலும் ரசிகர்களிடமிருந்து பாசிட்டிவ் ரிவ்யூக்களே வருகின்றன. இந்நிலையில் படத்தின் வசூல் குறித்த தகவலை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது.

பட்டையை கிளப்பும் வசூல்: அதன்படி முதல் நாள் அந்தப் படம் இரண்டு கோடியே 70 லட்சம் ரூபாய் வசூலித்தது. படத்துக்கு முதல் நாளின் முடிவில் நிறைய பாசிட்டிவ் பேச்சுக்கள் இருந்ததாலும்; நேற்று விடுமுறை என்பதாலும் குடும்பத்தினர் படம் பார்க்க படையெடுத்தனர். அதனால் இரண்டாவது நாள் வசூல் ஜெட் வேகத்தில் உயர்ந்திருக்கிறது. நேற்று மட்டும் அப்படம் 4 கோடியே 75 லட்சம் ரூபாயை 2,177 ஷோக்களில் அள்ளியிருக்கிறதாம்.

இந்தியாவில் மட்டும் இரண்டு நாட்களில் அந்தப் படம் 7 கோடியே 45 லட்சத்தை வசூலித்து பாக்ஸ் ஆஃபிஸில் பட்டாசாக பெர்ஃபார்மன்ஸ் செய்துவாருகிறது. இன்றும் விடுமுறைதான் என்பதால் வசூல் மேற்கொண்டு உயரும் எனவும் தெரிகிறது. ஆகமொத்தம், இந்தப் படம் ஹிட்டாகும் என்று ரிலீஸுக்கு முன்னதாகவே இயக்குநருக்கு கார் பரிசளித்த விஷ்ணு விஷாலின் நம்பிக்கை வீண் போகவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X