Gatta Kusthi 2 Day 7 Box Office - கட்டா குஸ்தி 2 ஏழாவது நாள் வசூல் இதுவா?.. பாக்ஸ் ஆஃபிஸ் கொஞ்சம் டல்
சென்னை: செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் கட்டா குஸ்தி 2. இதன் முதல் பாகம் அமோக வெற்றி பெற்றதால் இதன் மீதும் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு இருந்தது. எதிர்பார்த்தபடியே படத்துக்கு சூப்பர் வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் வசூலிலும் சக்கைப்போடு போடுகிறது. இந்நிலையில் நேற்றோடு படம் ரிலீஸாகி ஒரு வாரம் நிறைவடைகிறது. எனவே அதன் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் கட்டா குஸ்தி. அந்தப் படம் மெகா ஹிட்டானதால் அதன் சீக்வலை இயக்க இயக்குநர் செல்லா அய்யாவு பிளான் செய்து; அதன்படி கட்டா குஸ்தி 2 திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். முதல் பாகம் போன்றே இதனையும் தரமான ஹிட்டாக்கிட வேண்டும் என்ற முனைப்பில் கதை எழுத தொடங்கியதிலிருந்து; ஷூட்டிங்கின் கடைசி நாளில் பூசணிக்காய் உடைக்கும்வரை கடுமையாக உழைத்தார் அவர்.

கை மேல் பலன்: அதன் பலனாக ப்ரிவ்யூ ஷோவிலேயே படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வர தொடங்கிவிட்டன. அதனையடுத்து தியேட்டர்களில் கடந்த வாரத்தில் ரிலீஸானது படம். எதிர்பார்த்தபடியே மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றது படம். முக்கியமாக ஐஸ்வர்யாவின் ஆக்ஷன், குழந்தை நட்சத்திரம் சாராவின் நடிப்பு உள்ளிட்ட விஷயங்களை ரசிகர்கள் அமோகமாக பாராட்டினார்கள். மேலும் குடும்பம் குடும்பமாக சென்று படத்தை பார்த்து ரசித்துவிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சக்சஸ் மீட்: படம் சூப்பரான ஹிட்டை பெற்றிருப்பதால் நேற்று சென்னையில் படக்குழு தரப்பில் சக்சஸ் மீட் கொண்டாடப்பட்டது. அதில் விஷ்ணு விஷாலுக்கு சொகுசு காரும், இயக்குநர் செல்லா அய்யாவுக்கு பத்து சவரனில் செயினும், பிரேஸ்லட்டும் பரிசாக கொடுத்தார் ஐசரி கணேஷ். ஏற்கனவே ரிலீஸுக்கு முன்னதாக இயக்குநருக்கு விஷ்ணு விஷால் ஒரு காரை பரிசாக கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. விழாவில் பேசிய ஐஸ்வர்யா லட்சுமி, "ஒவ்வொரு நாளும் நான் இந்தப் படத்தின் ஷூட்டிங்கிற்கு செல்லும்போது; எங்களால் முடிந்த அளவு சிறந்ததை கொடுக்க வேண்டும் என்றுதான் கனவு காண்போம். இந்தப் படத்தில் ஏதோ ஒரு குறை இருக்கிறது என ரசிகர்கள் ஒருபோதும் நினைத்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் உழைக்கிறோம். இப்படிப்பட்ட வெற்றி எப்போதாவது ஒருமுறைதான் கிடைக்கும்.
நம்பவே முடியவில்லை: படம் வெளியான ஐந்தாவது நாளிலேயே நாம் வெற்றி விழாவை கொண்டாடுகிறோம் என்பதை இன்னும் என்னால் நம்பவே முடியவில்லை. அதேபோல் படத்தில் நடித்த சாராவுக்கு சிறப்பான நன்றி. இவ்வளவு உணர்வுப்பூர்வமான அனுபவத்தை நான் பெறுவேன் என்று நினைக்கவே இல்லை. அவர் என்னை ரொம்பவே நெகிழ்ச்சியடைய செய்துவிட்டார்" என சொல்லி ஆனந்த கண்ணீர் வடித்தார்.
வசூல் நிலவரம்: இந்நிலையில் படம் ரிலீஸாகி நேற்றோடு ஒரு வாரம் நிறைவடைகிறது. சூழல் இப்படி இருக்க தன் வசூல் குறித்த விவரங்களை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி நேற்று இப்படம் மொத்தம் 2,074 ஷோக்கள் திரையிடப்பட்டு; ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் வசூலித்தததாம். இதுவரை மொத்தம் ஏழு நாட்களில் 22.10 கோடி ரூபாயை அள்ளியிருக்கிறது. இருப்பினும் ஐந்தாவது நாளுக்கு பிறகான கடைசி இரண்டு நாட்களில் படத்தின் வசூல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவருவது படக்குழுவுக்கு கொஞ்சம் அப்செட்டை கொடுத்திருக்கும் என கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications
