Gatta Kusthi 2 Day 4 Box Office - கட்டா குஸ்தி 2 நான்காவது நாள் வசூல் என்ன?.. பாக்ஸ் ஆஃபிஸ் சம்பவம்

சென்னை: கட்டா குஸ்தி 2 திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. படத்துக்கு ரசிகர்களிடையே பெரிய ஆதரவு கிடைத்திருக்கிறது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூலிலும் சம்பவம் செய்துவருகிறது. அந்தவகையில் படத்தின் மொத்த வசூல் குறித்தும், நான்காவது நாளான நேற்று செய்த வசூல் குறித்தும் தகவல்கள் வந்திருக்கின்றன.

தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். தன்னுடைய படத்தின் கதைகளை தேர்ந்தெடுப்பதில் ரொம்பவே கவனமாக இருக்கும் அவருக்கு; கடந்த வருடத்தில் வெளியான ஆர்யன் திரைப்படம் மோசமான தோல்வியை சந்தித்தது. அதனையடுத்து செல்லா அய்யாவு இயக்கத்தில் கட்டா குஸ்தி 2 படத்தில் ஹீரோவாக நடித்து; படத்தை தயாரிக்கவும் செய்திருந்தார் விஷ்ணு விஷால். இதில் ஐஸ்வர்யா லட்சுமி ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

Gatta Kusthi 2 Day 4 Box Office Collection - Vishnu Vishal s Film Earns 15 95 Crore in 4 Days
Photo Credit:

திரையரங்குகளில் வெளியான படம்: இவர்கள் தவிர்த்து ரம்யா கிருஷ்ணன்,மோக்‌ஷா, குழந்தை நட்சத்திரம் சாரா உள்ளிட்டோரும் முதல் பாகத்தில் நடித்த கருணாஸ், முனீஸ்காந்த் உள்ளிட்டோரும் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார்கள். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். திரைத்துறையினர், பத்திரிகையாளர்களிடம் ரிலீஸுக்கு முன்னதாகவே சூப்பர் பெயர் எடுத்த இந்தப் படம்; அதே பெயரை ரசிகர்களிடமும் பெற வேண்டும் என்ற ஹைப்போடு திரையரங்குகளில் சில நாட்கள் முன் வெளியானது.

Also Read
Vishwanath And Sons First Review - சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் முதல் விமர்சனம்.. கண்டிப்பாக ப்ளாக் பஸ்டராம்
Vishwanath And Sons First Review - சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் முதல் விமர்சனம்.. கண்டிப்பாக ப்ளாக் பஸ்டராம்

எதிர்பார்த்தபடியே: படக்குழு எதிர்பார்த்தபடியே ரசிகர்களிடமும் படம் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகிவிட்டது. முதல் பாகத்தை போன்றே இந்த பாகமும் காமெடி, எமோஷன், ஆக்‌ஷன் என சரியான பேக்கேஜ்களோடு படம் உருவாக; மக்கள் கொண்டாடிவிட்டார்கள். முக்கியமாக கணவன் - மனைவி இடையே நடக்கும் பிரச்னைகள்தான் கதை என்பதால் குடும்பத்தினர் கொண்டாடும் படமாக மாறியிருக்கிறது கட்டா குஸ்தி 2. எப்போதுமே ஒரு படம் குடும்ப ரசிகர்களை கவர்ந்துவிட்டால் போது; மற்றவைகள் எல்லாம் தானாகவே நடக்கும்.

குறையாத கூட்டம்: வெள்ளிகிழமை ரிலீஸான படம் முதல் நாளிலிருந்தே வெற்றிநடைதான் போடுகிறது. இதோடு சேர்த்து சனி, ஞாயிறு விடுமுறையும் வந்தது. அதன் காரணமாக குடும்பத்தினர் பலரும் தியேட்டர்களுக்கு சென்று படத்தை பார்த்தார்கள். மேக்கிங், நட்சத்திரங்களின் நடிப்பு என அனைத்தையும் கொண்டாடி; வசூலிலும் நல்ல நிலைக்கு செல்ல அந்தப் படத்துக்கு உதவியிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். இந்நிலையில் நேற்றைய வசூல் குறித்த தகவலை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது.

வசூல் எவ்வளவு?: அதன்படி நேற்று மட்டும் அந்தப் படம் இந்தியாவில் 2,094 ஷோக்கள் திரையிடப்பட்டு இரண்டு கோடியே 10 லட்சம் ரூபாயை வசூலித்ததாம். நேற்று வேலை நாள் என்பதால் அதற்கு முந்தைய நாட்கள் வசூலைவிட இது குறைவுதான். இருந்தாலும் வசூலானது கோடிகளிலிருந்து குறையவில்லை என்பதால் பாக்ஸ் ஆஃபிஸில் இன்னும் தரமான சம்பவத்தை படம் செய்யும் என நம்பலம். இதுவரை நான்கு நாட்களில் இந்தியாவில் மட்டும் அந்தப் படம் 15.95 கோடி ரூபாயை அள்ளியிருப்பதாக அந்த இணையதளம் தெரிவித்திருக்கிறது.

கட்டா குஸ்தி 3?: முதல் பாகம் போன்றே இரண்டாவது பாகமும் மெகா ஹிட்டாகிவிட்டது. எனவே இதன் மூன்றாம் பாகம் வருமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது. படம் பார்த்த பெரும்பாலானோ சொல்வது என்னவென்றால்; மூன்றாவது பாகத்துக்கான விஷயங்களையும் இயக்குநர் இதில் வைத்திருக்கிறார்தான். விரைவில் அதுவும் வர வேண்டும் என்பதுதான். மூன்றாவது பாகத்தை எடுப்பாரா செல்லா அய்யாவு; பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X