Vishwanath And Sons First Review - சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் முதல் விமர்சனம்.. கண்டிப்பாக ப்ளாக் பஸ்டராம்
சென்னை: சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் விஸ்வநாத் & சன்ஸ். இதில் மமிதா பைஜு ஹீரோயினாக நடிக்க; ராதிகா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தை ஏற்றிருக்கிறார்கள். ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாகவிருக்கிறது.கருப்பு மாதிரியே இதுவும் ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கும் சூழலில்; அதன் தயாரிப்பாளர் நாக வம்சி படம் பார்த்துவிட்டு முதல் விமர்சனத்தை பகிர்ந்திருக்கிறார்.
கங்குவா, ரெட்ரோ ஆகிய இரண்டு படங்களும் சூர்யாவின் கரியரில் பெரிய தோல்வியை சந்தித்த படங்கள். அந்தப் படங்களுக்கு பிறகு நம்பிக்கையுடன் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு படத்தில் நடித்தார். இதில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்க; இந்திரன்ஸ், சுவாசிகா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். சாய் அபயங்கர் இசையமைத்திருந்த கருப்பு மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி மொத்தம் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து கெத்து காண்பித்தது.

அடுத்த படம்: இந்தப் படத்துக்கு பிறகு சூர்யாவின் நடிப்பில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இதனை வாத்தி, லக்கி பாஸ்கர் படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கியிருக்கிறார். இப்போதைக்கு சென்சேஷனல் ஹீரோயினாக இருக்கும் மமிதா பைஜூ ஹீரோயினாக நடித்திருக்கிறார். நாக வம்சி தயாரிக்க; ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். படமானது ஆகஸ்ட் 14ஆம் தேதி தியேட்டர்களில் கோலாகலமாக ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஹிட்டாகுமா?: கருப்பு படத்தின் வெற்றி மாதிரியே இந்தப் படமும் வெற்றி பெற வேண்டும் என சூர்யாவின் ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள். இதற்கு முன்னதாக வெங்கி இயக்கிய லக்கி பாஸ்கர் மெகா ஹிட். எனவே அந்த வைபை இதிலும் தக்க வைக்கும்படியாகத்தான் அவர் வேலை செய்திருப்பார்; எனவே கண்டிப்பாக ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையிலும் இருக்கிறார்கள். சமீபத்தில் படத்திலிருந்து வெளியான பட்டாம்பூச்சி முதல் சிங்கிள் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
எங்கும் ரிலீஸ்: சோஷியல் மீடியாக்களில் உச்சக்கட்ட ட்ரெண்டிங்கில் இருக்கும் அந்தப் பாடலுக்கு பலரும் நடனம் ஆடி ரீல்ஸாக வெளியிடுகிறார்கள். பாடலில் மமிதாவின் ஃபயர் டான்ஸும், க்யூட் எக்ஸ்பிரெஷன்களும் ரசிகர்களை மீண்டும் மீண்டும் அந்தப் பாடலை ரசிக்க வைக்கிறது. இந்நிலையில் படத்தை பார்த்துவிட்ட தயாரிப்பாளர் நாக வம்சி தன்னுடைய விமர்சனத்தை சமீபத்திய பேட்டியின்போது பகிர்ந்திருக்கிறார்.
எப்படி இருக்கு படம்?: அவர் படம் குறித்து பேசுகையில், "நான் விஸ்வநாத் அண்ட் சான்ஸ் படத்தை பார்த்துவிட்டேன். இந்தப் படம் 200 சதவீதம் ப்ளாக் பஸ்டர் ஆகும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. முழு நம்பிக்கை இருக்கிறது. திரையர்னக்குகளில் இந்தப் படத்தை பார்க்கும் அனைத்து ரசிகர்களும் ரிச்சயம் ரசிப்பார்கள். இது உறுதியான வெற்றிப்படம். குடும்பத்துடன் அனைவரும் ரசிக்கக்கூடிய ஒரு சிறந்த படமாக இருக்கும். பிரமாண்டமாக ரிலீஸாகவிருக்கிறது" என்றிருக்கிறார். தயாரிப்பாளரின் முதல் விமர்சனம் படத்தின் மீது மேற்கொண்டு ஹைப்பை ஏற்றிவிட்டிருக்கிறது. பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்பதை.


Click it and Unblock the Notifications
