அதே புடவை.. அந்தப் பாட்டு.. கட்டா குஸ்தி 2வில் விஜய் - திரிஷாவை கலாய்த்தார்களா?.. என்னங்க இது?

சென்னை: தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால்.அவரது நடிப்பில் இப்போது வெளியாகியிருக்கும் கட்டா குஸ்தி 2. செல்லா அய்யாவு இயக்கத்தில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படத்துக்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில் படத்தில் ஒரு சீனில் விஜய்யையும், திரிஷாவையும் கலாய்த்திருப்பதாக பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.

நடிகர் விஷ்ணு விஷால் வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதனையடுத்து அவர் நடித்த பல படங்கள் கதை ரீதியாக சூப்பர் படம்தான். சில படங்கள் வெற்றியடைந்திருக்கின்றன; சில படங்கள் தோல்வியடைந்திருக்கின்றன. சில வருடங்களுக்கு முன்பு வெளியான கட்டா குஸ்தி திரைப்படமும் ஹிட் லிஸ்ட்டில்தான் சேர்ந்தது. சாதாரண ஹிட் இல்லை; மெகா ஹிட் என்பது நினைவுகூரத்தக்கது.

Gatta Kusthi 2 Scene Sparks Vijay Trisha Reference Debate Among Netizens
Photo Credit:

கட்டா குஸ்தி 2: இப்போது மீண்டும் செல்லா அய்யாவு இயக்கத்தில் கட்டா குஸ்தி 2 திரைப்படத்தில் நடித்திருக்கிறார். முதல் பாகத்தில் நடித்தவர்களும் இதில் நடிக்க; மலையாள நடிகை மோக்‌ஷாவும் உள்ளே வந்திருக்கிறார். ரம்யா கிருஷ்ணன் கெஸ்ட் ரோல் செய்திருக்கிறார். பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு காட்சியில் படத்துக்கு ஏகபோக வரவேற்பு கிடைத்தது. அதே ஹைப்போடு இன்று தியேட்டர்களில் படம் ரிலீஸானது.

Also Read
மகள் வாங்கிய உயரிய விருது.. ஆஸ்கர் மாதிரியாம்.. பெருமை பொங்க மனம் திறந்த ரோஜா
மகள் வாங்கிய உயரிய விருது.. ஆஸ்கர் மாதிரியாம்.. பெருமை பொங்க மனம் திறந்த ரோஜா

எப்படி இருக்கு படம்?: படம் பார்த்த ரசிகர்களும் தங்காளது அமோக ரெஸ்பான்ஸையே கொடுத்திருக்கிறார்கள். கணவன் - மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்தப் படம் உதாரணம் என ரசிகர்கள் சொல்கிறார்கள். நிச்சயம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இது அமைந்துவிட்டது என்றும்; க்ளீனான ஒரு கமர்ஷியல் படத்தை இயக்குநர் கொடுத்திருக்கிறார் என்றும் அனைவருமே சோஷியல் மீடியாவில் சொல்ல தொடங்கிவிட்டார்கள். இதன் காரணமாக படம் கண்டிப்பாக ஹிட்டாகிவிடும் என்பது உறுதியாகிவிட்டது.

விஜய் பாடல்: சூழல் இப்படி இருக்க படத்தில் விஜய்யின் ரெஃபரன்ஸும் வைக்கப்பட்டிருக்கிறது. அதாவது கில்லி படத்தில் இடம்பெற்றிருக்கும், 'அப்படி போடு பாடலை' ஒரு சீனுக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். முக்கியமாக அந்த சீனில் மோஷாவை ஒரு பக்கம் தூக்கி வைத்திருப்பார் விஷ்ணு விஷால். அதனை ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் பார்த்து அதிர்ச்சியடைவார்கள்.அந்த சீன் தியேட்டரில் வரும்போது ரசிகர்களின் கைத்தட்டல்களும், ஆராவாரமும் விண்ண முட்டின என்றுதான் சொல்ல வேண்டும்.

திரிஷா உடுத்தியிருந்த புடவை: ஆனால் அதை வைத்து ஒரு தரப்பினர் பிரச்னையையும் கிளப்பியிருக்கிறார்கள். அதாவது, அந்த சீனில் மோக்‌ஷா கட்டியிருந்த புடவையின் நிறமும், ஏஜிஎஸ் வீட்டு திருமணத்துக்கு விஜய்யுடன் திரிஷா சென்றபோது அவர் அணிந்திருந்த புடவை நிறம் மாதிரியே இருந்தது. இதை பார்த்த விஜய் ரசிகர்களும், திரிஷா ரசிகர்களும், 'இந்த குறியீடு மூலம் படத்தில் இரண்டு பேரையும் கலாய்த்திருக்கிறார்கள். அனைத்து புள்ளிகளையும் இணைத்து பார்த்தால்; அவர் விஜய்யையோ, திரிஷாவையோ கொண்டாடுவதற்கு அந்த சீனை வைக்கவில்லை; மாறாக ஊர் பேசும் புரளியை அப்படியே வைத்திருக்கிறார்கள்' என்பது புலப்படும் என சிஐடி ரேஞ்சுக்கு இறங்கி அடிக்கிறார்கள்.

ஏற்கனவே, ஒரு பேட்டியின்போது விஜய்யை சார் என்றோ தளபதி என்றோ ஏன் அழைக்கவில்லை என விஜய் ரசிகர்கள் விஷ்ணு விஷாலை வாட்டி வதைத்தார்கள். இப்போது இதை வேறு கையில் எடுத்துக்கொண்டு பேச தொடங்கியிருக்கிறார்கள். இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ?. பொறுத்திருந்து பார்ப்போம்.

Read more about: vijay trisha விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X