கட்டா குஸ்தி 2 வெற்றி.. ஹீரோவுக்கு கார்.. இயக்குநருக்கு 10 சவரன் செயின்.. அள்ளி தந்த ஐசரி கணேஷ்
சென்னை: விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்திருக்கும் கட்டா குஸ்தி 2 திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சூப்பர் ரெஸ்பான்ஸை பெற்று மெகா ஹிட்டாகியிருக்கிறது. ஆறு நாட்களில் மொத்தம் 20 கோடி ரூபாய் வரை வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ஹீரோவுக்கும், இயக்குநருக்கும் பரிசு கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.
கட்டா குஸ்தி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாவது பாகமான கட்டா குஸ்தி 2 திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் செல்லா அய்யாவு. முதல் பாகத்தில் நடித்தவர்கள் அனைவரும் இதில் நடித்திருக்கிறார். கூடுதலாக ரமம்யாகிருஷ்ணன், மோக்ஷா, குழந்தை நட்சத்திரம் சாரா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். விஷ்ணு விஷாலும், ஐசரி கணேஷும் சேர்ந்து இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார்கள். சில நாட்கள் முன்பு தியேட்டர்களில் ரிலீஸானது படம்.

மெகா ஹிட்: முதல் பாகத்தை போன்றே இரண்டாவது பாகமும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் படம் பார்க்க சென்றார்கள். இயக்குநர் அவர்களை ஏமாற்றவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.கணவன் - மனைவி இடையே இருக்கும் உறவு சிக்கல்களையும், பெண்ணின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் ஆணை பற்றியும் கமர்ஷியலாக இயக்குநர் சொல்ல; ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துவிட்டார்கள். குறிப்பாக குடும்ப ரசிகர்கள் மத்தியில் படத்துக்கு வரவேற்பு பலமாக இருக்கிறது.
படத்தின் சக்சஸ் மீட்: இதன் காரணமாக படத்துக்கு வசூலும் சூப்பராக வந்துகொண்டிருக்கிறது. நேற்று வரை இந்தப் படம் மொத்தம் 20 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறதாம். இதே போக்கில் சென்றால் கண்டிப்பாக விரைவிலேயே 50 கோடி ரூபாயை படம் வசூலித்துவிடும் என தெரிகிறது. இந்நிலையில் இன்று சென்னையில் படத்தின் சக்சஸ் மீட் கொண்டாடப்பட்டது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பரிசு: இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பிஎம்டபிள்யூ காரை பரிசாக கொடுத்தார். அதேபோல் இயக்குநர் செல்லா அய்யாவுக்கு பத்து சவரனில் செயினும், பிரேஸ்லட்டையும் கொடுத்தார். அதனை இரண்டு பேரும் மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டார்கள். முன்னதாக, பட வெளியீட்டுக்கு முன்பே இயக்குநர் செல்லா அய்யாவுக்கு விஷ்ணு விஷால் கார் ஒன்றை பரிசாக கொடுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதீத நம்பிக்கை: அதாவது படத்தின் அனைத்து பணிகளும் முடித்துவிட்டு; ஃபைனல் அவுட்புட்டை பார்க்கும்போது இந்தப் படம் கண்டிப்பாக ஹிட்டடித்துவிடும் என்கிற அதீத நம்பிக்கையில் காரை பரிசளித்தார். அவரது நம்பிக்கையும் காப்பாற்றப்பட்டது. படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட்டில் பேசியபோது, 'செல்லா அய்யாவுக்கு நான் கார் பரிசு கொடுத்துவிட்டேன். எனக்கு நீங்கள் ரிலீஸுக்கு பிறகு கார் கொடுக்க வேண்டும்' ஐசரி கணேஷிடம் விஷ்ணு விஷால் கோரிக்கை வைத்திருந்ததும் நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications
