Vishal - மார்க் ஆண்டனி வைப்.. விஷாலுடன் இணைந்த முன்னணி இயக்குநர்கள்.. தரமான சம்பவம் இருக்கும் போலயே
சென்னை: Vishal (விஷால்) விஷாலுடன் இரண்டு முன்னணி இயக்குநர்கள் இணைந்திருப்பதை விஷால் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
செல்லமே படத்தின் மூலம் அறிமுகமான விஷால் கடந்த பல வருடங்களாகவே ஒரு ஹிட் கொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தார். இப்படிப்பட்ட சூழலில் அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்தார். டைம் ட்ராவல் ஜானரில் படம் உருவாகியிருந்தது. விஷால், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், ரிது வர்மா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

செம ரெஸ்பான்ஸ்: தமிழ் சினிமாவில் டைம் ட்ராவல் ஜானரில் வரும் படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு இருக்கும். அந்த ஜானரில் படம் வெளியானதால் எதிர்பார்ப்போடு படத்துக்கு சென்றனர் ரசிகர்கள். படத்தை பார்த்த ரசிகர்கள் தாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே படம் திருப்திப்படுத்திவிட்டதாக கூறினர். குறிப்பாக ஆதிக் ரவிச்சந்திரனை ஏகத்துக்கும் கொண்டாடினர்
எஸ்.ஜே.சூர்யா: படத்தின் ஹைலைட்டாக இருந்தது நடிப்பு அரக்கன் எஸ்.ஜே.சூர்யாதான். வயதான எஸ்.ஜே.சூர்யாவாகவும், இள வயது எஸ்.ஜே.சூர்யாவாகவும் தனது நடிப்பில் வேரியேஷன் காண்பித்து அசத்தியிருக்கிறார் படத்தில். முக்கியமாக இரண்டு எஸ்.ஜே.சூர்யாக்களும் ஃபோனில் பேசிக்கொள்ளும் காட்சியிலும், சில்க் ஸ்மிதா காட்சியிலும் சூர்யாவின் நடிப்பு அட்டகாசம். விஷாலும் தனது பங்குக்கு சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார். படம் நூறு கோடி ரூபாய்வரை வசூலித்திருக்கிறது. விஷாலின் கரியரில் ஒரு படம் நூறு கோடி வசூலிப்பது இதுவே முதன்முறை.
அடுத்த படம்: இந்தப் படத்தின் வெற்றியை அடுத்து விஷால் உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறார். அந்த சூட்டோடு ஹரி இயக்கத்தில் தனது 34ஆவது படத்தில் நடித்துவருகிறார். ஏற்கனவே ஹரி இயக்கத்தில் இவர் நடித்திருந்த தாமிரபரணி, பூஜை ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றவை. எனவே மார்க் ஆண்டனி கொடுத்த ஹிட் வைபை இந்தப் படத்திலும் விஷால் தொடர்வார் என்று நம்பப்படுகிறது.
ஷூட்டிங்; இணைந்த இயக்குநர்கள்: படத்தின் ஷூட்டிங் தூத்துக்குடி மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் இயக்குநர்களும், நடிகர்களுமான கௌதம் மேனன் மற்றும் சமுத்திரகனி ஆகியோர் இணைந்திருக்கின்றனர். அவர்களுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த விஷால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "ஒரே புகைப்படத்தில் மூன்று திறமையான இயக்குநர்களுடன் நிற்பது ரொம்பவே அரிதான ஒன்று.
Yogi Babu - காரை நிறுத்துங்க ஒன்னு கொடுக்கணும்.. யோகிபாபு செய்த செயல்.. நெகிழ்ந்து போன விஷால்
இதனை எப்போதும் உடன் வைத்திருப்பேன். இயக்குநர் ஹரி இயக்கும் விஷால் 34க்கு கௌதம் மேனனையும், சமுத்திரகனியையும் வரவேற்கிறோம். இதே ஃபோட்டோவை அடுத்த ஆண்டும் பதிவிடுவேன். ஆனால் இந்த இடத்தில் மூன்று இயக்குநர்கள் என இருப்பது நான்கு இயக்குநர்கள் என்று மாறும். அதற்காக நானும் காத்திருக்கிறேன். துப்பறிவாளன் 2படம் விரைவில்" என குறிப்பிட்டிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் ஒருவேளை துப்பறிவாளன் 2 படத்தில் இயக்குநர்கள் சங்கமம் நடந்திருப்பதைத்தான் சூசகாமாக விஷால் சொல்கிறாரோ என கேள்வி எழுப்பிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











