தளபதி 69ஐ அந்த இயக்குநர் இயக்க வேண்டுமாம்.. GOAT படத்தின் தயாரிப்பாளர் ஆசையை பாருங்க
சென்னை: விஜய் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. அப்படம் விமர்சன ரீதியாக அடி வாங்கி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிப்பதற்கு கமிட்டானார். படத்துக்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் ரஷ்யாவில் இப்போது நடந்துவருகிறது. நேற்று படத்திலிருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே சுமாரான வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
விஜய் நடிப்பில் வெளியான லியோ விமர்சன ரீதியாக அடிவாங்கியது. எனவே அதனை சரிசெய்யும் பொறுப்பில் இருக்கிறார் அவர். அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் அவர். வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக வெளியான கஸ்டடி படம் படுதோல்வியை சந்தித்தது. இருந்தாலும் எப்படி விஜய் அவர் இயக்கத்தில் நடிக்க எப்படி ஒத்துக்கொண்டார் என்ற சந்தேகம் விஜய் ரசிகர்களிடையே எழுந்தது. ஆனால் கஸ்டடி ரிலீஸுக்கு முன்னதாகவே விஜய்யிடம் கதை சொல்லி வெங்கட் பிரபு ஓகே வாங்கிவிட்டாராம்.

GOAT: படத்துக்கு GOAT (Greatest Of All Time)என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், அஜ்மல், ஜெயராம், பிரேம்ஜி, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். பிரசாந்த் நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழில் ரீ எண்ட்ரி கொடுப்பதாலும், விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி முதன்முறையாக இணைந்திருப்பதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருக்கிறது. படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் இப்போது ரஷ்யாவில் நடந்துவருகிறது. நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஃபர்ஸ்ட் சிங்கிளும் வெளியிடப்பட்டது. படம் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகிறது.
அய்யய்யோ GOAT ஃபர்ஸ்ட் சிங்கிளை இப்படி கலாய்ச்சிட்டாரே.. ப்ளூ சட்டை என்ன சொல்லிருக்காரு பாருங்க
தமிழக வெற்றி கழகம்: சூழல் இப்படி இருக்க சமீபத்தில் விஜய் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டு, தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்குவதாக தெரிவித்தார். மேலும் மக்கள் பணியில் ஈடுபடவிருப்பதால் இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடிப்பேன் என்றும், 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடும் என்றும் அறிவித்திருந்தார். விஜய்யின் அரசியல் எண்ட்ரி அவரது ரசிகர்களிடையே சந்தோஷத்தை கொடுத்தாலும் படம் நடிக்கமாட்டேன் என்று அவர் கூறியது கொஞ்சம் வருத்தத்தை கொடுத்திருக்கிறது.
கடைசி படம்: விஜய்யின் கடைசி படம் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. அதன்படி அந்தப் படத்தை வெற்றிமாறன், அட்லீ, ஆகிய இரண்டு பேரில் ஒருவர் இயக்குவார் என்றும்; அநேகமாக அந்த வாய்ப்பை வெற்றிமாறன் தட்டி செல்ல வாய்ப்புகள் அதிகம் என்றும் கோலிவுட்டில் பேச்சு ஒன்று கடந்த சில நாட்களாகவே ஓடியது. அதற்கு கார்த்திக் சுப்புராஜ், ஆர்.ஜே.பாலாஜி பெயர்கள் அடிபட்ட சூழலில் இப்போது ஹெச்.வினோத் பெயர் அடிபடுகிறது.
சினிமாக்காரர்களுக்கு ஜக்கி வாசுதேவ் பணம் கொடுக்குறார் போல?.. நல்லவேளை ரஜினி போகல.. அந்தணன் ஷேரிங்ஸ்
GOAT பட தயாரிப்பாளரின் ஆசை: இந்நிலையில் தளபதி 69 குறித்து GOAT படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சமீபத்திய பேட்டியில் பேசுகையில், “தளபதி 69 படத்தை மணிரத்னம் இயக்கினால் நன்றாக இருக்கும். அந்தப் படத்தையும் நாங்களே தயாரிக்க வேண்டும் என்பது எனது ஆசை. ஆனால் அந்தப் படத்தின் இயக்குநர் யார் என்று எனக்கு தெரியும். அதனை நான் இப்போது சொல்லமாட்டேன்” என்றார்.


Click it and Unblock the Notifications











