திரையரங்குகளுக்கு போனஸ் தீபாவளி கொடுத்த அரசு! புதிய அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி!
கூடுதல் காட்சி திரையிட திரையரங்குகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தீபாவளியையொட்டி நான்கு நாட்களுக்கு கூடுதல் காட்சி திரையிட திரையரங்குகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
பொதுவாகவே பண்டிகைக் காலங்கள் என்றால் பொழுதுபோக்கிற்கு பஞ்சமிருக்காது. தீபாவளி போன்ற நாட்களில் முக்கிய நடிகர்களின் படங்கள் ரிலீஸாகும் என்பதால் கூட்டம் அலை மோதும்.

டிக்கட் கிடைக்காமல் சிரமம் ஏற்படுதல், பண்டிகைக் கால கொண்டாட்டம் போன்றவற்றை கருத்தில் கொண்டு தீபாவளியன்று கூடுதலாக ஒரு காட்சி திரையிட திரையரங்கங்களுக்கு அரசு அனுமதியளித்திருந்தது.
தற்போது தீபாவளி தினமான 6ஆம் தேடி மட்டுமல்லாமல், நவம்பர் 7,8 மற்றும் 9 ஆகிய தேதிகளிலும் கூடுதலாக ஒரு காட்சி திரையிட திரையரங்குகளுக்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
[நாளையே ரிலீஸாகும் சர்கார்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!]
தமிழ்நாடு விநியோகஸ்தர்களின் கோரிக்கையை ஏற்று அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இதனால் திரையரங்க உரிமையாளர்களும் ரசிகர்களும் போனஸ் கிடைத்தது போன்று மகிழ்ச்சியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











