G.P.Muthu - வரலாறு காணாத மழை.. தூத்துக்குடி மக்களுக்கு உதவும் ஜி.பி.முத்து..பெரிய ஹீரோக்கள் கத்துக்கங்கப்பா
சென்னை: திருநெல்வேலி, தூத்துக்குடியில் வரலாறு காணாத மழை பெய்ததால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரபல யூட்யூபரும், நடிகருமான ஜி.பி.முத்து தன்னால் முடிந்த உதவிகளை செய்திருக்கிறார். அவரது இந்த செயலுக்கு ரசிகர்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்துவருகின்றனர்.
சென்னையை மிக்ஜாம் புயல் புரட்டிப்போட்டது. முழுவதும் வெள்ளக்காடாக இருந்த சென்னை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியது. அந்த வடுவே தமிழ்நாட்டு மக்களின் மனதிலிருந்து விலகாத சூழலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் சில வாரங்களுக்கு முன்பு மழை வெளுத்து வாங்கியது. மாவட்டங்களில் இருக்கும் அனைத்தும் ஊர்களிலும் வெள்ளம் சூழ்ந்தது.

களத்தில் இறங்கிய மாரி செல்வராஜ்: அந்த மழை வெள்ளத்திலிருந்து மக்களை மீட்பதற்கு தமிழ்நாடு முழுவதுமிலிருந்து உதவி கரங்கள் நீண்டன. கலைத்துறையை பொறுத்தவரை இயக்குநர் மாரி செல்வராஜ் நேரடியாக களத்தில் இறங்கி படகுகள் மூலம் மக்களை மீட்டார். அது ஒருபக்கம் வரவேற்பை பெற்றாலும் மறுபக்கம் விமர்சனத்தை பெற்றது. ஆனால் மாரி செல்வராஜ் செய்ததுதான் சரி என்பதே பெரும்பாலானோரின் கருத்து.
ஜி.பி.முத்து: மாரி செல்வராஜ் தவிர்த்து அறந்தாங்கி நிஷாவும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவினார். விரைவில் தன்னுடைய பங்கிலும் உதவி செய்யப்படும் என கலக்கப்போவது யாரு பாலா தெரிவித்திருந்தார். இந்நிலையில் பிரபல யூட்யூபரும், நடிகருமான ஜி.பி.முத்துவும் தன்னால் முடிந்த உதவிகளை செய்திருக்கிறார்.
இதனால்தான் குடும்பமே மதம் மாறியது.. நான் என்ன செய்தேன் தெரியுமா? ஏ.ஆர்.ரஹ்மான் அக்கா சொன்ன சீக்ரெட்
முத்துவின் பேட்டி: அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "வரலாறு காணாத மழையால் நான் இருக்கும் உடன்குடி அதிகம் பாதிக்கப்படவில்லை. அதனை சுற்றியுள்ள இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நான் காரில் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்த்தேன். ஆத்தூர், ஏரல் ஆகிய இடங்கள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன என்பது வேதனையான விஷயம்.
சிக்கிக்கொண்டது: நான் ஸ்ரீவைகுண்டம், கருங்களம் பகுதிக்கு சென்றபோது குழிக்குள் என்னுடைய கார் மாட்டிக்கொண்டது. 4,5 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலமே இல்லை. நான் என்னால் முடிந்த அளவுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் ஆகிய பொருட்களை வாங்கி கொடுத்திருக்கிறேன். என்னுடைய வீடு ஓட்டு வீடுதான் அதனால் அங்கே கொஞ்சம் ஒழுகத்தான் செய்யும். இருந்தாலும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.
தற்கொலைக்கு முடிவு: கொரோனா காலத்தில் நான் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தேன். நான் எப்படி வளர்ந்தேன் என எல்லோருக்கும் தெரியும். மருத்துவமனையில் சில சிகிச்சைகள் எடுத்துக்கொண்ட பிறகுதான் எனது வாழ்க்கையில் மாற்றமே ஏற்பட்டது. அந்த சமயத்தில் கஷ்டப்பட்டவர்களுக்கு என்னால் முடிந்த அளவு உதவிகளை செய்தேன். அப்போதிருந்தே உதவிகள் செய்துவருகிறேன்.
குழந்தைகளும்: நான் மட்டுமின்றி என்னுடைய குழந்தைகளையும் உதவி செய்ய அழைத்து சென்றேன். அவர்களும் அதனை செய்ய வேண்டும் என நான் நினைத்ததால்தான் அதனை செய்தேன். சென்னையில் ஏற்பட்ட மழை பாதிப்பை டிவியில் பார்த்தேன். ஆனால் நேரில் சென்று உதவ முடியாத சூழல் இருந்தது. மேலும் எனக்கு சென்னையை பற்றி பெரிதாக எதுவும் தெரியாது.
மகிழ்ச்சி: பாலா, அறந்தாங்கி நிஷா எல்லாம் உதவி செய்தார்கள். மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது நம் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால் நானும் உதவி செய்தேன். உதவி செய்ததற்காக பாலா, நிஷா ஆகியோர் நன்றாக இருக்க வேண்டும்"" என்றார். இதனை பார்த்த ரசிகர்கள் பெரிய ஹீரோக்கள் அமைதியாக இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் ஜி.பி.முத்து, பாலா, நிஷா போன்றோரை பார்த்து உதவி செய்வது என்றால் என்ன என்று கற்றுக்கொள்ள வேண்டும் என கமெண்ட்ஸ் செய்து முத்துவுக்கு பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











