என்னது நயன்தாராவுடன் பிரிவா?.. ஒரே போஸ்ட்டில் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விக்னேஷ் சிவன்
சென்னை: நடிகை நயன்தாரா கோலிவுட்டின் டாப் நடிகையாக திகழ்கிறார். ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அவர் கடைசியாக அன்னபூரணி படத்தில் நடித்திருந்தார். அவருக்கு அந்தப் படம் 75ஆவது படம். ரொம்பவே எதிர்பார்த்திருந்த நயனுக்கு அன்னபூரணி ஏமாற்றத்தையே கொடுத்தது. தற்போது மண்ணாங்கட்டி உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.
நயன்தாரா பல போராட்டங்கள், தனிமனித தாக்குதல்களை சந்தித்து தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் அவரை கிளாமருக்காக மட்டுமே திரையுலகம் பயன்படுத்திக்கொண்டிருந்தது. இருந்தாலும் முட்டி மோதி தன்னுடைய திறமையை காண்பிக்கும் படங்களில் நடிக்க முயன்றுகொண்டே இருந்தார். ஒருகட்டத்தில் முன்னணி நடிகையாக வளர்ந்த அவர் இரண்டு காதல் தோல்விகளை சந்தித்தார். பிரபுதேவாவை காதலித்தபோது சினிமாவிலிருந்து ஒதுங்கினார். பிறகு மீண்டும் சினிமாவுக்குள் வந்த அவர் இரண்டாவது இன்னிங்ஸில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்தார்.

நானும் ரௌடிதான்: அந்தவகையில் அவருக்கு கிடைத்த படம்தான் நானும் ரௌடிதான் மற்றும் அறம். இந்த இரண்டு படங்களுமே மெகா ஹிட்டாகின. குறிப்பாக நயனின் திறமையை வெளிச்சம் போட்டு காட்டியது. அறம் படம் வெளியானதிலிருந்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழிக்கு சொந்தமானார் நயன். அதேபோல் இயக்குநர் விக்னேஷ் சிவனையும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
குடும்ப வாழ்க்கை, நடிப்பு: திருமணம் செய்துகொண்ட நயன் வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொண்டார். உயிர், உலக் என அவர்களுக்கு பெயர் வைத்திருக்கிறார். திருமணமாகி குழந்தை பெற்றுக்கொண்டாலே நடிப்புக்கு மூட்டை கட்டும் பெரும்பாலான நடிகைகளுக்கு மத்தியில் நயன்தாரா தொடர்ந்து நடித்துவருகிறார். அந்தவகையில் ஹிந்தியிலும் என்ட்ரி கொடுத்து மாஸ் காட்டியிருக்கிறார் அவர்.
குடும்பத்தை பற்றி தவறான பேச்சு.. மன உளைச்சலில் அருண் விஜய்.. நடந்தது என்ன?
தமிழில்: ஹிந்தி மட்டுமின்றி தமிழிலும் தீவிர கவனம் செலுத்திவரும் அவர் தற்போது அன்னபூரணி படத்தில் நடித்திருக்கிறார். நிலேஷ் கிருஷ்ணா இயக்கியிருக்கும் இப்படம் நயனுக்கு 75ஆவது படமாகும். தமன் இசையமைக்க கே.எஸ்.ரவிக்குமார், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். சமையல் கலைஞராக நயன் இதில் நடித்திருந்தார். படத்துக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. தற்போது அவர் மண்ணாங்கட்டி உள்ளிட்ட படங்களில் கமிட்டாகியிருக்கிறார்.
நிம்மதியான நயன்: அவர் பிஸியாக படங்களில் நடித்துவந்தாலும் குடும்பத்துடன் நேரம் செலவிடுவதில் கவனமாக இருக்கிறார். அதிலும் தனது மகன்கள் மீது ரொம்பவே பிரியமாக இருக்கும் அவர் அவ்வப்போது அவர்களுடன் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துவருகிறார். சமீபத்தில்கூட கார் ஒன்றில் தனது இரண்டு மகன்களில் ஒரு மகனை கையில் ஏந்தியபடி இருந்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.
சினிமாவில் களமிறங்குகிறாரா தனுஷ் மகன்?.. ஆனால் வேற டிப்பார்ட்மெண்ட்.. என்ன படம் தெரியுமா?
வதந்தி: சூழல் இப்படி இருக்க நேற்று ஒரு தகவல் காட்டுத்தீ போல் பரவியது. அதாவது இன்ஸ்டாகிராமில் விக்னேஷ் சிவனை நயன் அன்ஃபாலோ செய்துவிட்டார். இரண்டு பேரும் பிரியவிருக்கிறார்கள் என்று கூறப்பட்டது. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய சூழலில் விக்னேஷ் சிவன் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார். அதில், தனது 9 ஸ்கின் நிறுவனத்துக்காக போஸ் கொடுக்கும் புகைப்படத்தை வைத்திருக்கிறார். இதன் மூலம் விக்கியும், நயனும் பிரிகிறார்கள் என்பது வதந்தி என உறுதியாகியிருப்பதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











