தளபதி 69 ஹீரோயின் இவங்கதானா?.. அட வெற்றி கூட்டணியா இருக்கே.. ரசிகர்கள் மகிழ்ச்சி

சென்னை: சென்னை: விஜய் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. அப்படம் விமர்சன ரீதியாக அடி வாங்கி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிப்பதற்கு கமிட்டானார். படத்துக்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது. இந்தச் சூழலில் விஜய்யின் கடைசி படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

விஜய் நடிப்பில் வெளியான லியோ விமர்சன ரீதியாக அடிவாங்கியது. எனவே அதனை சரிசெய்யும் பொறுப்பில் இருக்கிறார் அவர். அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் அவர். வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக வெளியான கஸ்டடி படம் படுதோல்வியை சந்தித்தது. இருந்தாலும் எப்படி விஜய் அவர் இயக்கத்தில் நடிக்க எப்படி ஒத்துக்கொண்டார் என்ற சந்தேகம் விஜய் ரசிகர்களிடையே எழுந்தது. ஆனால் கஸ்டடி ரிலீஸுக்கு முன்னதாகவே விஜய்யிடம் கதை சொல்லி வெங்கட் பிரபு ஓகே வாங்கிவிட்டாராம்.

Here are the New Details about Vijays Thalapathy 69 Movie Heroine

GOAT: படத்துக்கு GOAT (Greatest Of All Time) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், அஜ்மல், ஜெயராம், பிரேம்ஜி, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். பிரசாந்த் நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழில் ரீ என்ட்ரி கொடுப்பதாலும், விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி முதன்முறையாக இணைந்திருப்பதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருக்கிறது.

விறுவிறு ஷூட்டிங்: படத்தின் பூஜை சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் போடப்பட்டு அங்கு ஒரு பாடல் காட்சியும் ஷூட் செய்யப்பட்டது. அதனையடுத்து தாய்லாந்து, துருக்கி நாடுகளில் ஷூட்டிங் நடத்தப்பட்டது. தொடர்ந்து வேறு ஒரு லொக்கேஷனில் ஷூட்டிங் நடத்த படக்குழு திட்டமிட்டது. ஆனால் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு ஆகியோரின் சகோதரி பவதாரிணி உயிரிழந்ததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் தொடங்கி நடந்துவருகிறது.

நான் நடித்த அந்தப் படம்.. தம்பியே பார்த்துவிட்டான்.. என்ன நடந்தது தெரியுமா?.. ஷகீலா சொன்ன ஷாக் தகவல்


தமிழக வெற்றி கழகம்: சூழல் இப்படி இருக்க சமீபத்தில் விஜய் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டு, தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்குவதாக தெரிவித்தார். மேலும் மக்கள் பணியில் ஈடுபடவிருப்பதால் இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடிப்பேன் என்றும், 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடும் என்றும் அறிவித்திருந்தார். விஜய்யின் அரசியல் எண்ட்ரி அவரது ரசிகர்களிடையே சந்தோஷத்தை கொடுத்தாலும் படம் நடிக்கமாட்டேன் என்று அவர் கூறியது கொஞ்சம் வருத்தத்தை கொடுத்திருக்கிறது.

கடைசி படம்: விஜய்யின் கடைசி படம் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. அதன்படி அந்தப் படத்தை வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ், அட்லீ, ஹெச்.வினோத் ஆகிய நான்கு பேரில் ஒருவர் இயக்குவார்கள் என்றும்; அநேகமாக அந்த வாய்ப்பை வெற்றிமாறன் தட்டி செல்ல வாய்ப்புகள் அதிகம் என்றும் கோலிவுட்டில் பேச்சு ஒன்று கடந்த சில நாட்களாகவே ஓடியது. முக்கியமாக அந்தப் படத்துக்காக வாடிவாசல் படத்தை மேற்கொண்டு தாமதப்படுத்துவதாகவும் தகவல்கள் வெளியாகின.

Here are the New Details about Vijays Thalapathy 69 Movie Heroine


யார் ஹீரோயின்: சூழல் இப்படி இருக்க அந்தப் படத்தை வெற்றிமாறன் இயக்கமாட்டார் கார்த்திக் சுப்புராஜ் அல்லது ஆர்.ஜே. பாலாஜி ஆகியோரில் ஒருவர் இயக்குவார் என்றும் சொல்லப்பட்டது. இந்நிலையில் படத்தின் ஹீரோயின் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இப்டத்தில் சமந்தா ஹீரோயினாக நடிக்கவிருப்பதாக பேச்சு எழுந்திருக்கிறது. ஏற்கனவே இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து கத்தி, தெறி உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X