Nayanthara Private Jet - நயன்தாராவின் பிரைவேட் ஜெட்.. விலை எவ்வளவு தெரியுமா?.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்

மும்பை: Nayanthara Private Jet (நயன்தாரா பிரைவேட் ஜெட்) நடிகை நயன்தாரா புதிய பிரைவேட் ஜெட் வாங்கியிருப்பதாகவும் அதுகுறித்த விலையும் தெரியவந்திருக்கிறது.

தமிழ் சினிமாவிலிருந்து தனது திரை வாழ்க்கையை தொடங்கியவர் நயன்தாரா. அழகு மட்டுமின்றி திறமையும் கொண்டிருப்பதால் அவரை தமிழ் திரையுலகம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறது. காதல் விவகாரங்களில் சிக்கி பல தனிப்பட்ட தாக்குதல்களை சந்தித்தவர் அவர். ஆனால் அதையெல்லாம் கண்டு அஞ்சாமல் ஃபீனிக்ஸ் பறவையாக மீண்டெழுந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார்.

Here is the details about Nayantharas Private Jet Price

திருமணம்: நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவனை காதலித்த நயன் கடந்த வருடம் அவரை திருமணம் செய்துகொண்டார். பிறகு வாடகை தாய் மூலம் இரண்டு மகன்களை பெற்றுக்கொண்டனர். உயிர், உலக் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. திருமணம் செய்து குழந்தை பெற்றாலும் தனது நடிப்பு பயணத்தை தீவிரமாக தொடர்ந்துவருகிறார் நயன் தாரா.

ஹிந்தியில் என்ட்ரி: இத்தனை வருடங்கள் தமிழ், தெலுங்கில் கலக்கி அவர் தற்போது ஜவான் படத்தின் முலம் ஹிந்தியில் என்ட்ரி ஆகியிருக்கிறார். அட்லீ இயக்கத்தில் உருவாகியிருக்கும் அந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்தார் இந்தப் படம் வெற்றி பெற்றால் பாலவுட்டிலும் ஒரு பெரிய ரவுண்டு வரலாம் என்று கணக்கு போட்டிருந்தார்.

Nayanthara: இந்த க்ரீமை தடவினால் வயசே ஆகாதா.. நயன்தாராவின் புதிய தொழில்.. விளம்பரம் வந்துடுச்சு!

சூப்பர் நயன்: அவர் எதிர்பார்த்தபடியே ஜவான் படம் சூப்பர் ஹிட்டடித்திருக்கிறது. அதிலும் நயன்தாராவின் நடிப்பு அப்ளாஸை அள்ளியிருக்கிறது. பில்லா படத்துக்கு பிறகு ஆக்‌ஷன் காட்சிகளில் பட்டையை கிளப்பியிருக்கிறார். இந்தப் படத்தில் சில பல குறைகள் கூறப்பட்டாலும் பெரும்பாலானோர் சொன்ன பொதுவான விஷயம் நயனின் நடிப்புதான். அவரை இப்படி பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டதாக கூறினர் ரசிகர்கள்.

புதிய ஜெட்: இந்நிலையில் நடிகை நயன்தாரா புதிய ஜெட் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது அவர் ஏற்கனவே ஜெட் வாங்கியிருக்கிறார் என்று தகவல் வெளியானாலும் அது அவரது சொந்த ஜெட்டா இல்லையா என்பது குறித்து தெரியாமல் இருந்தது. இந்த சூழலில் அது அவரது சொந்த ஜெட் என்றும் அந்த ஜெட்டின் விலை குறித்தும் தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அந்த ஜெட்டின் விலை 50 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. மேலும் நயன்தாராவின் மொத்த சொத்து மதிப்பு 200 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X