பொங்கல் ரேஸில் இருக்கும் படங்கள் இவை தான்.. ஃபைனல் லிஸ்ட் உள்ளே.. ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். இதனாலேயே ரசிகர்களுக்கு மேற்கொண்டு அந்த பண்டிகை கொண்டாட்டமாக இருக்கும். சூழல் இப்படி இருக்க இந்த வருட பொங்கல் ரேஸில் இருக்கும் படங்களை இதில் பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் தீபாவளி, பொங்கல் என்றால் எக்கச்சக்க படங்கள் ரிலீஸானது உண்டு. ஆனால் இப்போது 5 படங்கள் ரிலீஸாவதே குதிரை கொம்பாக இருக்கிறது. சூழல் இப்படி இருக்க இந்த வருட பொங்கலுக்கு எந்தெந்த படங்கள் ரிலீஸாகும் என ஃபைனல் ஆகாமல் இருந்தன. தற்போது இந்த வருட பொங்கல் ரேஸில் இருக்கும் படங்களின் இறுதி லிஸ்ட்டை பார்க்கலாம்.

Here is the Full Details about Pongal Release Tamil Movies

அயலான்: பொங்கல் ரேஸில் முதலில் இருப்பது சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் அயலான் திரைப்படம், ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படமானது முதலில் தீபாவளிக்கு வெளியாவதாக இருந்தது. ஆனால் சில பணிகள் பாக்கி இருந்ததாலும், வேறு சில சிக்கல்கள் இருந்ததாலும் இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போனது. இந்த சூழலில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸாகிறது அயலான்.

Kamal - கமல் ஹாசனின் காதலை பிரித்தது நடிகையின் அம்மாவா?.. பல வருடங்கள் கழித்து வெளியான சீக்ரெட்

கேப்டன் மில்லர்: அயலானுக்கு அடுத்ததாக எதிர்பார்ப்பை சம்பாதித்திருக்கும் படம் என்றால் அது கேப்டன் மில்லர். தியாகராஜா குமாரராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்து சாணிக்காயிதம், ராக்கி படங்களை இயக்கி கவனம் ஈர்த்த அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இதில் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இப்படமும் கடந்த டிசம்பர் மாதமே ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸாகிறது.

மெரி கிறிஸ்துமஸ்: தமிழில் வெரைட்டியாக நடித்துவரும் விஜய் சேதுபதி நடித்திருக்கும் படம்தான் மெரி கிறிஸ்துமஸ். இதில் கத்ரீனா கைஃப் ஹீரோயினாக நடித்திருக்கிறார். அந்தாதூன் படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் படத்தை இயக்கியிருக்கிறார். ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்தப் படம் பொங்கல் ரேஸில் இணைந்தது. இப்படமும் ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸாவது குறிப்பிடத்தக்கது.

Bigg boss tamil 7: கசக்கி தூக்கி எறிஞ்சிட்டீங்க.. விஷ்ணுவை நேரடியாக தாக்கிய பூர்ணிமா!

மிஷன் - சாப்டர் 1: தெய்வதிருமகள், தாண்டவம், கிரீடம், மதராசபட்டினம் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஏ.எல்.விஜய் இயக்கியிருக்கும் படம்தான் மிஷன் - சாப்டர் 1. பல வருடங்களாக ஒரு வெற்றிக்கு ஏங்கிக்கொண்டிருக்கும் அருண் விஜய் நடித்திருக்கிறார். எமி ஜாக்சனும் நீண்ட காலத்துக்கு பிறகு இப்படத்தின் மூலம் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படமும் ஜனவரி 12ஆம் தேதி திரைக்கு வருகிறது. இப்படி நான்கு படங்கள் பொங்கல் ரேஸில் இருப்பதை இதுவரை கன்ஃபார்ம் செய்திருக்கின்றன.
அதேசமயம் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கும் லால் சலாம் படமும் பொங்கலுக்குத்தான் ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் திடீரென படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் மட்டும் கொஞ்சம் அப்செட்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X