GOAT - விஜய்யை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்திய வெங்கட் பிரபு.. GOAT படத்துக்காக தரமான சம்பவம்
சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய் நடித்துவரும் திரைப்படம் GOAT (Greatest Of All Time). யுவன் ஷங்கர் இசையமைக்கிறார். முதன்முறையாக விஜய்யும் வெங்கட் பிரபுவும் இணைந்திருப்பதால் கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையில் விஜய் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த சூழலில் படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
பீஸ்ட்: வாரிசு தோல்விக்கு பிறகு லியோ படத்தில் நடித்தார் விஜய். தொடர்ந்து இரண்டு படங்கள் தோல்வியடைந்ததால் லியோவை ரொம்பவே நம்பியிருந்தார். ஆனால் அந்தப் படமும் விமர்சன ரீதியாக அடி வாங்கியது. இதற்கிடையே வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்று லியோ படம் நடந்துகொண்டிருக்கும்போதே அறிவிப்பு வெளியானது. அதன்படி ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. புதிய கீதை படத்துக்கு விஜய் நடிக்கும் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

நட்சத்திர பட்டாளம்: இப்படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மீனாட்சி செளத்ரி, மைக் மோகன், ஜெயராம், பிரேம்ஜி அமரன், வைபவ் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. லியோ படம் சறுக்கலை சந்தித்ததால் கண்டிப்பாக இந்தப் படம் ஹிட்டடித்து விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற வேண்டும் என விஜய்யும், அவரது ரசிகர்களும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
சம்பவம் உறுதி?: கண்டிப்பாக தங்களது நம்பிக்கை பொய்க்காது என்பதே விஜய் ரசிகர்களின் கருத்து. ஏனெனில் முதன்முறையாக வெங்கட் பிரபு விஜய்யுடன் இணைகிறார். அவரது இயக்கம் என்றாலே படம் படு ஜாலியாக நகரும். விஜய்க்கும் அந்த மாதிரியான ஜானர் செட் ஆகும். அதனால் இந்த முறை மிஸ் ஆகாது என கூறுகின்றனர். அதேபோல் அஜித்துக்கு எப்படி மங்காத்தா படத்தின் மூலம் தரமான சம்பவத்தை செய்தாரோ அதேபோல் இப்படத்தின் மூலமும் விஜய்யை வைத்து தரமான சம்பவம் செய்வார் என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர்.
Kanguva: GOAT ஸ்டைலில் கங்குவா அப்டேட்... விஜய் ரூட்டில் சூர்யா கொடுக்கும் சர்ப்ரைஸ் ட்ரீட்!
GOAT: படத்துக்கு என்ன பெயர் வைக்கப்படும் என பலரும் ஆவலோடு காத்திருந்தனர். அதன்படி படத்துக்கு GOAT (The Greatest Of All Time) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது யாருமே எதிர்பார்க்காத ஒரு பெயராக அமைந்திருக்கிறது. முக்கியமாக ஒரு துறையில் சாதித்த லெஜெண்டுகளை GOAT என்று அழைக்கும் வழக்கம் உலகம் முழுவதும் இருக்கிறது. எனவே கண்டிப்பாக இந்தப் படம் விஜய்க்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமையும். அது பெயரிலேயே தெரிகிறது என்கிறார்கள் ரசிகர்கள்.
என்ன கதை?: படத்திலிருந்து இரண்டு போஸ்டர்கள் ஆங்கில புத்தாண்டையொட்டி வெளியாகின. அதில் விஜய் படு இளமையாக காட்சியளிக்கிறார். முக்கியமாக இரண்டு தோற்றங்களில் அவர் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. ஏற்கனவே இந்தப் படம் டைம் ட்ராவல் ஜானரில் உருவாகிவருவதாக கூறப்படுகிறது. எனவே டபுள் ஆக்ஷனை வைத்து டைம் ட்ராவல் ஜானரை எப்படி வெங்கட் பிரபு அணுகியிருப்பார் என்ற எதிர்பார்ப்பும் பலரிடமும் இருக்கிறது. ஒருசிலரோ, டைம் ட்ராவல் செய்து ஒரு விஜய் இன்னொரு விஜய்யை சந்திப்பார். அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து ஒரு பிரச்னையை முடித்து வைப்பார்கள் என்று இப்போதே கதையை பற்றிய தங்களது கணிப்புகளை வெளியிட தொடங்கியிருக்கின்றனர்.
மகிழ்ச்சியில் விஜய்: இந்நிலையில் இப்படம் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி GOAT படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் நடந்துவருவதாக கூறப்படுகிறது. இதனை முடித்துவிட்டு ராஜஸ்தான் செல்லவிருக்கிறதாம் படக்குழு. அங்கு வைத்து இறுதிக்கட்ட ஷுட்டிங்கை முடிக்க வெங்கட் பிரபு திட்டமிட்டிருப்பதாகவும் கிட்டத்தட்ட ஒரு மாதம் அங்கு படக்குழு முகாமிட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அநேகமாக மார்ச் மாத இறுதிக்குள் படத்தின் ஷூட்டிங் பணிகள் முடியலாம் என திரைத்துறையில் பேச்சு ஓடுகிறது. இதில் விஷயம் என்னவென்றால் தான் கொடுத்த தேதிக்குள்ளேயே படத்தின் ஷூட்டிங்கை வெங்கட் பிரபு முடிக்கவிருப்பதாலும்; அவரது அணுகுமுறை பிடித்துவிட்டதாலும் மகிழ்ச்சியில் இருக்கும் விஜய் இன்னொரு படத்தையும் வெங்கட் பிரபுவுக்கு கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











