40 வயதில் ஓய்வு பெற நினைத்தேன்: குண்டை தூக்கிப் போட்ட ஏ.ஆர். ரஹ்மான்
Recommended Video

சென்னை: 40 வயதில் ஓய்வு பெற நினைத்ததாக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஏமி ஜாக்சன், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள 2.0 படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கூறிய விஷயம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

[செல்போன் வச்சிருக்கும் ஒவ்வொருத்தனும் கொலைகாரனுங்க: மிரட்டும் 2.0 ட்ரெய்லர் ]
நீங்கள் இசையமைத்த படங்களில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று இசையமைப்பாளர் அனிருத் வீடியோ பதிவு மூலம் ரஹ்மானிடம் கேட்டார். அதற்கு ரஹ்மான் கூறியதாவது,
எனக்கு பிடித்த நடிகர் ரஜினிகாந்த். தனது கடின அழைப்பு, ஆன்மீகம் மூலம் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளார். 11 வயதில் உழைக்கத் துவங்கினேன். 40 வயதில் ஓய்வு பெற நினைத்தேன். ஆஸ்கர் எல்லாம் வாங்கியாச்சு, ஓய்வு பெற்றுவிடலாம் என்று நினைத்தேன்.
ரஜினியின் உழைப்பை பார்த்த பிறகு ஓய்வு பெறும் முடிவை மாற்றிக் கொண்டேன். அவர் இந்த வயதிலும் கடினமாக உழைப்பது எனக்கு இன்ஸ்பிரேஷனாக உள்ளது என்றார்.


Click it and Unblock the Notifications











