குண்டம்மானு விஜய் சார் சொன்னாரு.. எல்லாமே மாறிடுச்சு.. ரோபோ சங்கர் மகள் இந்திரஜா ஓபன் டாக்
சென்னை: நடிகரின் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா. இவர் பிகில் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனையடுத்து விருமன் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர்; சில வருடங்களுக்கு முன்பு கார்த்திக் என்பவரை திருமணமும் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். இந்நிலையில் இந்திரஜா விஜய் குறித்து பேசிய விஷயம் ஒன்று கவனத்தையும் ஈர்த்திருக்கிறது; சர்ச்சையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
சின்னத்திரையில் கலக்கிக்கொண்டிருந்த ரோபோ சங்கர்; தனுஷ் மூலம் வெள்ளித்திரைக்கு வந்தார். முதல் படத்திலேயே தன்னுடைய திறமையை காண்பிக்க; அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்புகள் வந்துகொண்டே இருந்தன. செம பிஸி நடிகராக இருந்த அவர்; கடந்த வருடத்தில் உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இதற்கிடையே சங்கரின் மகள் இந்திரஜாவும் சினிமாவில்தான் நடித்துவருகிறார்.

இந்திரஜா சினிமாவில்: அவர் அட்லீ இயக்கத்தில் விஜய் ஹீரோவாக நடித்த பிகில் படத்தில்தான் அறிமுகமானார். அதில் அவர் ஏற்றிருந்த பாண்டியம்மாள் என்கிற கேரக்டர் பெரிய வரவேற்பை பெற்றது. அதேசமயம் படம் படுதோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்திரஜா கேரக்டர் நன்றாக வெளிச்சமடைந்ததால் தொடர்ச்சியாக படங்களில் நடித்தார். அந்தவகையில் விருமன் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர்; இப்போதும் சில படங்களை கைகளில் வைத்திருக்கிறாராம்.
திருமண்ம் செய்துகொண்ட இந்திரஜா: அவர் சில வருடங்களுக்கு முன்பு கார்த்திக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகனும் பிறந்திருக்கிறார். தந்தை இழப்பிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்த இந்திரஜா இப்போது தனது மகன் வடிவத்தில் தந்தையை பார்த்துவருகிறார். ரொம்பவே பொறுப்போடும், அக்கறையோடும் தனது மகனை அவர் வளர்த்துவருவது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் அவர் விஜய் குறித்து பேசிய விஷயம் ட்ரெண்டாகியுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், "பிகில் திரைப்படத்தின்போது, உன்னை குண்டம்மா என்று கூப்பிடலாமா என என்னிடம் விஜய் கேட்டார். உடனே நான்,'சார் உங்கள் வாயிலிருந்து இந்த வார்த்தையை கேட்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். பரவாயில்லை சார் நீங்கள் அந்த வார்த்தையை சொன்னால்; இனிமேல் அது பாடி ஷேமிங் வார்த்தையாக இருக்காது. செல்லமான வார்த்தையாக மாறும் என கூறினேன்.
கோபம் வரவில்லை: அதேபோல் குண்டாக இருக்கும் நிறைய பேர் என்னிடம் வந்து, 'அக்கா இப்போதெல்லாம் குண்டம்மா என்று கூப்பிட்டால் கோபம் வருவதில்லை. செல்லமாக கூப்பிடுவது மாதிரிதான் இருக்கிறது. ஏனெனில் எங்கள் தளபதி வாயிலிருந்து அந்த வார்த்தை வந்துவிட்டது என சொல்கிறார்கள். இப்படி அந்த வார்த்தைக்கு டிரான்சிஷன் கொடுத்தது அவர்தான்" என்றார். முன்னதாக பிகில் படம் வந்தபோதே இந்திரஜாவை குண்டம்மா என்று உருவகேலி செய்திருக்கவே கூடாது; விஜய் ஒரு முன்னணி நடிகராக இருந்துகொண்டு இப்படி செய்வது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என பலரும் கண்டித்தார்கள்.
நார்மலைஸ் செய்யும் இந்திரஜா?: தற்போது இந்த வீடியோவை பார்த்த சில ரசிகர்களோ,'விஜய் மீது இருக்கும் அன்பின் மிகுதியால் இதையெல்லாம் இந்திரஜா நார்மலைஸ் செய்கிறார். உருவ கேலி செய்வது எப்படி செல்லமாக கூப்பிடுவது மாதிரி இருக்கும். இதெல்லாம் ரொம்ப ஓவர்' என்று கண்டித்து கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
