விஜய் பப்ளிக்காக குடிப்பாரா?.. ஹோட்டலிலேயே அவர் அப்படித்தான்.. பிரபலம் சொன்ன சீக்ரெட்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சரும், நடிகருமான விஜய் சில நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் இருக்கும் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு சென்றார். அப்போது அவரே காரை ஓட்டி சென்றார். அந்த சமயத்தில் அவர் சீட்டுக்கு அருகே காருக்குள் ஒரு கிளாஸ் இருப்பது போன்று ஒரு புகைப்படம் வைரலானது. மேலும் அந்த கிளாஸில் இருந்தது மதுதான் என்றும் சிலர் தொடர்ந்து கூறிவருகிறார்கள். இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் வி.கே.சுந்தரின் பதிவு ஒன்று கவனத்தை ஈர்த்திருக்கிறது.

கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு கார் ஓட்டி சென்றபோது முதலமைச்சரும், நடிகருமான விஜய் குடித்தார் என்று சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன. இதுகுறித்து பிரபல பத்திரிகையாளர் வி.கே. சுந்தர் தனது முகநூல் பக்கத்தில், "இரண்டு நாட்களாக சோசியல் மீடியாவில் முதல்வர் விஜய் பத்தி ஒரு பஞ்சாயத்து ஓடிட்டு இருக்கு கர்நாடகாவில் இருக்கும் மூகாம்பிகை கோவிலுக்கு போயிட்டு வரும்போது, முதல்வர் விஜய் அவரது காரை அவரே ஓட்டிட்டு வந்தார். எனக்கு தெரிந்து இப்படி எந்த மாநில முதல்வரும் செல்ஃப் டிரைவிங்கில் ரோட் ஷோ போனதில்லை என்று நினைக்கிறேன்!

Vijay Drinking While Driving Journalist VK Sundar Dismisses Viral Mookambika Temple Photo Controversy
Photo Credit:

ஃபோட்டோஷாப்: முதல் முறையாக அதை உடைத்து... விஜய்,ஒரு லாங் டிரைவ் ஓட்டிட்டு வந்தது சோசியல் மீடியா முழுக்க செம வைரல். உடனே ஒரு போட்டோ ஷாப் குரூப். விஜய் கார் ஒட்டும் போது சரக்கு போட்டுகிட்டே ஓட்டினார் என்று ஒரு போட்டோ போடுகிறார்கள். விஜய் கார் ஓட்டுகிறார்.கார் கண்ணாடி வழியாக முன்புறம் கான்வாய் போகிறது. காரில் இருக்கும் ஹேண்ட் பிரேக் இருக்கிற இடத்தில் பக்கத்தில் ஒரு யூஸ் அண்ட் த்ரோ கிளாசில் சரக்கு இருக்கிற மாதிரி போட்டோ ஷாப் பண்ணிப் போட்டு புலங்காகிதம் அடைகிறார்கள். போட்டோ ஷாப் பார்ட்டிகளுக்கு இரண்டு விசயம் புரியவில்லை! ஹை எண்டு கார்களில் கப் ஹோல்டர், பாட்டில் ஹோல்டர் எங்கிருக்கும் என்பதும் தெரியவில்லை.

Also Read
அஜித்தின் சம்பள பிரச்னை தீரணுமா?.. இதை செய்தால் போதும்.. ஐடியா சொல்லும் திருப்பூர் சுப்ரமணியம்
அஜித்தின் சம்பள பிரச்னை தீரணுமா?.. இதை செய்தால் போதும்.. ஐடியா சொல்லும் திருப்பூர் சுப்ரமணியம்

சாரி விஜய் அண்ணா: தவிர, ஹோல் சேலில் வாங்கினால் ஒரு கிளாஸ் ஐம்பது பைசா மட்டுமே பெறக்கூடிய ஒரு சாதாரண கிளாசில் சரக்கு குடித்தபடியே ஓட்டுகிறார். என்பது போல் போட்டு... சில அறிவாளிகள், எத்தனை கோடி விலையுள்ள காராக இருந்தாலும் கடைசி நேரத்தில் நம்ம ஆள்தான் கை கொடுப்பான் என்ற கமெண்ட் வேற?! பொது வாழ்க்கைக்கு வந்து, அதுவும் முதல்வராக இருக்கிற விஜய், இந்த மாதிரி பொது வெளியில் போகும் போது இப்படி குடிச்சிட்டு போவார் அப்படிங்கற இந்த கற்பனை இருக்குல்ல : அதுக்குதான் இந்த சம்பவம். விஜய்ண்ணா ஸாரி, இந்த இடத்தில் சொல்லி ஆக வேண்டிய நெருக்கடி.

பூவே உனக்காக: விஜய் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த பிறகு நிறைய அப்ஸ் அண்ட் டவுன்ஸ் இருந்தது அவருக்கும் தெரியும்: அவரது ரசிகர்களுக்கும் தெரியும்.விஜயின் கேரியரில் முதல் முறையாக உச்சம் தொட்ட படம்- இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த 'பூவே உனக்காக'. சூப்பர் குட் தயாரிப்பில் வெளிவந்த படம். அந்தப் படத்துக்கான சக்ஸஸ் மீட் 100 feet ரோட்டில் இருக்கிற அம்பிகா எம்பையர் ஹோட்டலில் அப்போது நடந்தது. இப்போது அந்த ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறுவதில்லை. என் செட்டு ஆட்கள் இன்னபிற நண்பர்களுக்கு இந்த மீட் பற்றிய ஞாபகம் இருக்கும் என்று நம்புகிறேன்.

செம பார்ட்டி: அந்த ஃப்ளோரில் நுழைந்தவுடன் எதிர்த்த மாதிரி இருக்கிற ஹாலில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேருக்கும் சக்ஸஸ் பார்ட்டி போகுது... அதுக்கு இடதுபுறம் இருந்த சின்ன ஹாலில் ஆர்டிஸ்ட் அண்ட் டெக்னிஷியன் பார்ட்டி. இயக்குனர் விக்ரமன் முதல் படம் தொடங்கி எனக்கு நல்ல அறிமுகம். அதை ஏற்படுத்திக் கொடுத்தவர் நண்பர் மெளனம் ரவி. இயக்குனர் என்னை அவருக்கு நெருக்கமான இடத்தில் வைத்துக் கொண்டது அவரது பேரன்பு.

விஜய், எஸ்.ஏ.சி என்ட்ரி: பார்ட்டி போய்க்கொண்டிருக்கிறது... விஜயும் அவரது அப்பா எஸ்ஏசியும் என்ட்ரி. மொத்த ஹோட்டலும் பரபரப்பாக மாறிவிட்டது. இயக்குனர் விக்ரமன், என்னை சின்ன ஹாலில் கூடவே வைத்திருந்தார். எல்லோரும் உற்சாகமாக இருந்த போதுதான் இந்த எண்ட்ரி. நான் தம் அடிக்க வெளியில் போயிருந்த நேரம் அது. விஜய் வந்தது எனக்குத் தெரியாது! பத்திரிகையாளர்கள் இருக்கும் ஹாலுக்குள் நுழைந்து எல்லோருக்கும் கை கொடுத்து நன்றி சொல்லிவிட்டு, சின்ன ஹாலில் விக்ரமன் பக்கத்தில் எஸ்.ஏ.ராஜ்குமார்... அடுத்த சீட்டில் விஜய்.

விக்ரமன் வற்புறுத்தினார்: ட்ரிங்க்ஸ் சாப்பிடச் சொல்லி எவ்வளவோ கேட்டுப் பார்க்கிறார் இயக்குனர் விக்ரமன். எனக்குப் பழக்கம் இல்லை என்று மறுக்கிறார் விஜய். ஒரு கட்டத்துக்கு மேல் டேபிள் மேனர்ஸ் கருதி ஒரு பியர் சொல்கிறார். விஜயின் டேபிளுக்கு முன்னாள் கொண்டு வந்து கிளாசில் சர்வ் செய்யப்பட்டு விட்டது. இதற்கு நடுவே இயக்குநர் என்னைக் கூப்பிட்டு, சுந்தர் நம்ம ஆளுங்க இருக்கிற ஏரியாவில் ஏதும் குறை இருக்கான்னு ஒரு ரவுண்டு பார்த்திட்டு வந்திருங்க என்னை பத்திரிகையாளர்கள் இருக்கும் ஹாலுக்கு அனுப்பியிருந்தார். நானும் முடித்துவிட்டு வந்து என்னிடத்தில் செட்டிலாகிட்டேன்.

அவர் அப்படித்தான்: விஜய் அங்கே இருப்பதை நான் கவனிக்க வில்லை! "என்ன விஜய் சாப்பிடலையா!" என்ற குரல் கேட்டு திரும்பிப் பார்த்த போதுதான் நான் அவரைக் கவனித்தேன். "ட்ரிங்க்ஸ் அடிக்கும் பழக்கம் இல்லை" என்று சொன்னார் விஜய். "சுந்தர், நம்ம ஆளுதான் சாப்பிடுங்க" என்று இயக்குனர் எவ்வளவோ சொல்லியும் விஜய் அந்த பியரைத் தொடவே இல்லை! பூவே உனக்காக படம் வந்து இருபது வருஷம் ஆச்சு. ஒரே ஒரு பத்திரிகையாளன் இருந்த போதே தன் இமேஜ் பற்றி ஜாக்கிரதையாக இருந்த விஜய், ஒரு மாநிலத்தின் CM ஆக இருக்கக் கூடிய சூழலில்... உங்க போட்டோ ஷாப்புக்கு ஒரு அளவு வேணாமா" என குறிப்பிட்டிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X