விஜய் எடுத்த முதல் ஸ்டெப் மாதிரியே தனுஷும்.. அதே நாளில் செஞ்சுருக்காரே.. ஒருவேளை நடக்குமோ?

சென்னை: நடிகராக இருந்த விஜய் இப்போது தமிழ்நாடு முதலமைச்சராகியிருக்கிறார். அது பல நடிகர்களுக்கு அரசியல் ஆசையை அதிகப்படுத்தியதாகவே தோன்றுகிறது. அந்தவகையில் திருவள்ளூரில் நேற்று தனுஷ் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக ரத்த தான முகாம் நடைபெற்றது. அப்போது அவர் பேசிய விஷயங்கள் எல்லாம் அவரது அரசியல் பிரவேசம் நடைபெறுமோ என்ற பேச்சையும் உருவாக்கியிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் கட்சி போட்டியிட்டு 108 தொகுதிகளில் வென்றது. அதனையடுத்து தேர்தலுக்கு முன்னர் திமுகவுடன் கூட்டணியில் இருந்த விசிக, காங்கிரஸ், இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு முதலமைச்சரானார் விஜய். மேலும் இடதுசாரிகள் தவிர்த்து மற்ற கட்சியினருக்கு தன்னுடைய அமைச்சரவையில் இடத்தையும் கொடுத்திருக்கிறார். அவரது செயல்பாடு பாராட்டையும், விமர்சனத்தையும் ஒரேசேர பெற்றது.

Is Dhanush Following Vijay s Political Path Fan Welfare Event Sparks Fresh Speculation
Photo Credit:

தைரியமான நடிகர்கள்: விஜய் தேர்தலை சந்தித்தபோது அவரால் பத்து சீட்டுகளுக்கு மேலே வெல்ல முடியாது என்றுதான் எல்லோருமே கணித்தார்கள். ஆனால் அவரோ முதலமைச்சரே ஆகிவிட்டார். இதை பார்த்து ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஆச்சரியப்பட்டது. அதுமட்டுமின்றி பல நடிகர்களுக்கு அரசியல் வருவதற்கான ஆசையையும் அதிகப்படுத்தியிருக்கிறது. லாரன்ஸ் தன் அரசியல் வருகையை அறிவித்துவிட்டாலும்; ரஜினி ஸ்டைலில் இன்னும் தேதியை குறிப்பிடாமல் இருக்கிறார்.

Also Read
மாமனாரின் அரசியல் கனவை நிறைவேற்றும் தனுஷ்.. மக்களே உஷார்னு எச்சரிக்கை கொடுக்கும் ப்ளூ சட்டை மாறன்
மாமனாரின் அரசியல் கனவை நிறைவேற்றும் தனுஷ்.. மக்களே உஷார்னு எச்சரிக்கை கொடுக்கும் ப்ளூ சட்டை மாறன்

தனுஷின் மூவ்: இப்போது தனுஷை சுற்றியும் அந்தப் பேச்சு எழுந்திருக்கிறது. அதாவது, நாளை தனுஷ் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனையொட்டி திருவள்ளூரில் தனுஷ் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக ரத்த தான முகாம் நடைபெற்றது. அதில் தனுஷும் கலந்துகொண்டார். மேலும் தன்னுடைய ரசிகர்கள், ரசிகைகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் செய்தார். விழாவில் பேசிய தனுஷ், தேசிய விருது சர்ச்சை குறித்து பேசினார். மேலும், இது கூட்டம் இல்லை குடும்பம்.

Recommended For You
என் பொண்ணு மாசமா இருக்கா.. தயவுசெஞ்சு விட்டுடுங்க கதறிய அம்மா.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
என் பொண்ணு மாசமா இருக்கா.. தயவுசெஞ்சு விட்டுடுங்க கதறிய அம்மா.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

நோக்கம் உண்டு: இந்தக் கூட்டத்துக்கு ஒரு நோக்கமும், ஒற்றுமையும் உண்டு என தெரிவித்திருந்தார். அவரது பேச்சை வைத்து பலரும்; கண்டிப்பாக தனுஷ் அரசியலுக்கு வருவார் என்று அடித்து கூறுகிறார்கள். மேலும், அதனால்தான் அவர் கொடியெல்லாம் அறிமுகப்படுத்தி; நலத்திட்ட உதவிகளை எல்லோரும் தெரியும்படி செய்ய ஆரம்பித்திருக்கிறார் என கருத்துக்கள் தெரிவித்துள்ளனர். ஒருதரப்பினரோ தனுஷ் அரசியலுக்கு வந்தால் ஒன்றுமே கிடைக்காது என்றும் அடித்து சொல்கிறார்கள்.

அதே நாள்: இந்நிலையில் இன்னொரு விஷயமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, விஜய் முதலமைச்சரானதற்கு காரணமான விஷயங்களில் ஒன்று அவரது நலத்திட்ட உதவிகளும்தான். அதனை விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் இயக்கம் ஆரம்பித்து நலத்திட்ட உதவிகளை செய்தார்.

இந்நிலையில் முதன்முதலில் 2009ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதிதான் மக்கள் இயக்கத்தை தொடங்கினார் விஜய். தற்போது அதே மாதத்தில் ஒரு நாள் முன்னதாக ஜூலை 26ஆம் தேதி தனுஷும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதை தீவிரமாக செய்ய தொடங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த இரண்டு புள்ளிகளையும் இணைத்திருக்கும் ரசிகர்களோ, தனுஷும் விஜய் வழியில் வரப்போகிறாரோ என்ற சந்தேகத்தை வலுவாக எழுப்புகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X