என் குடும்பத்தை கெடுத்த எஸ்.ஐ. மனோஜை டிரான்ஸ்பர் செய்தால் போதாது: தாடி பாலாஜி
Recommended Video

சென்னை:
தன் குடும்பத்தை நாசமாக்கிய எஸ்.ஐ. மனோஜை டிரான்ஸ்பர் செய்தால் மட்டும் போதாது என்று தாடி பாலாஜி தெரிவித்துள்ளார்.
தாடி பாலாஜி தன்னை அடித்து துன்புறுத்துவதாக நித்யா மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் தாடி பாலாஜி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

பிரச்சனை
உதவி போலீஸ் கமிஷனர் சுப்பிரமணியன் விசாரணைக்கு வருமாறு அழைத்ததால் வந்தேன். எனக்கும், மனைவி நித்யாவுக்கும் இடையேயான பிரச்சனை குறித்து விசாரணை நடத்தினார்கள்.

கடும் நடவடிக்கை
என் குடும்ப வாழ்க்கையை பிரச்சனையாக்கிய எஸ்.ஐ. மனோஜ் குமார் சென்னையில் இருந்து திருச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது போதாது. அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கோரிக்கை
என் குடும்பத்தை கெடுத்த மனோஜ் குமாரின் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். என் குடும்பத்தை போன்று அவர் இனி எந்த குடும்பத்தையும் நாசமாக்காத வகையில் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷனரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.

நித்யா
நித்யாவுடனான பிரச்சனையை நீதிமன்றம் மூலம் தீர்ப்பேன். என் மகளை நன்றாக படிக்க வைப்பேன். ரூ. 40 லட்சம் செலவு செய்து கட்டிய வீட்டை நானே சேதப்படுத்துவேனா?. நான் என் வீட்டை சேதப்படுத்தவில்லை. எனக்கு அங்கீகாரம் கொடுத்தது சினிமா தான். என்னை சினிமா தான் வாழ வைக்கிறது என்றார் தாடி பாலாஜி.


Click it and Unblock the Notifications











