Jailer Audio Launch - உயிர கொடுக்க கோடி பேரு.. வெறும் 15 நொடிகள்தான்.. ஜெயிலர் பாஸ்கள் காலி
சென்னை: Jailer Audio Launch (ஜெயிலர் ஆடியோ லான்ச்) வெறும் 15 நொடிகளில் ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கான பாஸ்கள் காலியாகியிருக்கின்றன.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். இதற்கு முன்னர் அவர் நடித்த இரண்டு படங்களும் சறுக்கியதால் ஜெயிலர் படம் மூலம் கம்பேக் கொடுக்க வேண்டும் என்ற ஆவலில் இருக்கிறார் அவர். அதேபோல் நெல்சன் திலீப்குமாரும் பீஸ்ட் படத்தில் விட்டதை ஜெயிலரில் பிடிக்க வேண்டும் என்ற முழு வேகத்தில் பணியாற்றியிருப்பதாக கூறப்படுகிறது.

ரஜினி கொடுத்த ஐடியா?: இந்தப் படத்தில் கொஞ்சம்கூட மிஸ் ஆகக்கூடாது என ரஜினியும், நெல்சனும் திட்டமிட்டதாக திரை வட்டாரத்தில் படம் ஆரம்பித்தபோது பேச்சு எழுந்தது. குறிப்பாக ரஜினிகாந்த் கூடுதல் கவனத்துடன் இந்தப் படத்தை அணுகியதாகவும், ஜெயிலரை பான் இந்தியா படமாக வெளியிட வேண்டும் எனவுன்; அதற்காக பிற மொழி ஸ்டார்களை களமிறக்க வேண்டும் என அவர்தான் ஐடியா கொடுத்ததாகவும் பேச்சு எழுந்தது.
முத்துவேல் பாண்டியன்: இந்தப் படத்தில் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதனால் ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் நெல்சனின் டார்க் காமெடி ஜானரும் இந்தப் படத்தில் இருக்கும் நம்பப்படுவதால் ரசிகர்களுக்கு முழு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை என்கிறது படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரம்.
Jailer Audio Launch - ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழா.. இலவச பாஸ்கள் ரெடி.. இது செமயா இருக்கே இரண்டு சிங்கிள்கள்: படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்போடு ஒரு க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டது. அதனையடுத்து சில வாரங்களுக்கு முன்னர் காவலா என்ற சிங்கிளும். அடுத்ததாக ஹுக்கும் என்ற சிங்கிளும் வெளியானது. இரண்டு பாடல்களுமே பக்கா வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக இரண்டாவது சிங்கிளான ஹுக்கும் ரஜினி ரசிகர்களுக்கு கொண்டாட்டமான பாடலாக அமைந்துவிட்டது.
ஆடியோ லான்ச்: இந்தச் சூழலில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஜூலை 28ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது. இதில் படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக 1000 பாஸ்கள் இலவசமாக வழங்கப்படும் என்று நேற்று அறிவித்திருந்தது சன் பிக்சர்ஸ்.
15 நொடிகளில் காலி: இன்று மதியம் 1 மணிக்கு Http://Jailer.Sunpictures.in/ என்ற இணையதள முகவரியில் பாஸ்களை பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சரியாக 1 மணிக்கு பாஸுக்கான பதிவு தொடங்கியது. அது தொடங்கிய வெறும் 15 நொடிகளில் அனைத்து பாஸ்களும் காலியாகிவிட்டன. இதனைப் பார்த்த ரசிகர்கள் தமிழ்நாட்டில் ரஜினிக்கு இன்னமும் மாஸ் குறையவில்லை என்பதை இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் என சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











