ஏ சான்றிதழ் படத்தை குழந்தையோடு பார்த்த அமைச்சர்.. ஜனநாயகன் படத்துக்காக விதிமீறல்.. கோர்த்துவிட்ட ரசிகர்

சென்னை: விஜய் - ஹெச்.வினோத் கூட்டணியில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் ஏ சான்றிதழ் பெற்று நேற்று திரையரங்குகளில் வெளியானது. 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தியேட்டரில் அனுமதி இல்லை என்ற விதி இருக்கும் சூழலில்; அமைச்சர் ராஜீவ் தன் குழந்தையை அழைத்து வந்து படம் பார்த்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய சூழலில்; ஒன்றிய தணிக்கை வாரியத்திடம் கோர்த்து விடப்பட்டிருக்கிறார்.

விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் பல தடைகளை தாண்டி நேற்று வெளியானது. இதற்கிடையே படத்துக்கு ஏ சான்றிதழைத்தான் தணிக்கை அதிகாரிகள் கொடுத்தார்கள். ஏற்கனவே சான்றிதழ் கிடைத்ததே பெரிய விஷயமாக இருந்ததால்; இந்த சான்றிதழை வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொண்டார்கள். எனவே ஜனநாயகன் படத்தை 18 வயதுக்குள் இருப்பவர்கள் தியேட்டருக்கு வந்து பார்க்க முடியாத சூழ்நிலை நிலவியது. பல குழந்தைகள் கதறியெல்லாம் அழுத வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகின.

Jana Nayagan A Certificate Row CBFC Responds After Minister Watches Film With Child
Photo Credit:

களைகட்டிய தியேட்டர்கள்: இப்படி பல விஷயங்களுக்கு மத்தியில் ஜனநாயகன் நேற்று திரையரங்குகளில் வெளியானது. ஒன் லாஸ்ட் டான்ஸை பார்ப்பதற்காக விஜய் ரசிகர்கள் தியேட்டரில் குவிந்தார்கள். அவர்கள் மட்டுமின்றி தவெக அமைச்சர்களும் தங்கள் மாண்புமிகு பட்டத்தை ஓரமாக வைத்துவிட்டு; முழுக்க முழுக்க விஜய் ரசிகர்களாகவே மாறி தியேட்டருக்கு சென்றிருந்தார்கள். சில எம்.எல்.ஏக்கள் எல்லாம் விடுமுறை கேட்டுவிட்டதாக ரிலீஸுக்கு முன்னர் அலப்பறையை கூட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read
விஜய் படம் பார்த்து குடும்பத்துடன் அழுத தம்பி விக்ராந்த்.. மகன் இவ்ளோ பெருசா வளர்ந்துட்டாரே!
விஜய் படம் பார்த்து குடும்பத்துடன் அழுத தம்பி விக்ராந்த்.. மகன் இவ்ளோ பெருசா வளர்ந்துட்டாரே!

கதறி அழுத அமைச்சர்: நேற்று படத்தின் முதல் காட்சியை புதுக்கோட்டையில் பார்த்த அமைச்சர் பர்வேஸ்; இனிமேல் விஜய்யை திரையில் பார்க்க முடியாதே என மனதுக்குள் நினைத்துக்கொண்டு கதறி கதறி அழுதார். மேலும் ஒரு அமைச்சரும் அழுதார். அவர்களது இந்த அழுகையை பார்த்து பலரும் சோஷியல் மீடியாவில் சிரித்தார்கள். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இது போன்ற கூத்துக்கள் எல்லாம் அரங்கேறுகிறது என்று பலரும் நொந்துகொண்டார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.

Recommended For You
நான் ஹீராவை காதலிக்கத்தானே செய்தேன்.. ஏன் மறைக்கணும்?.. அஜித்குமார் அதிரடி.. இப்படி சொல்லிருக்காரே?
நான் ஹீராவை காதலிக்கத்தானே செய்தேன்.. ஏன் மறைக்கணும்?.. அஜித்குமார் அதிரடி.. இப்படி சொல்லிருக்காரே?

விதிமீறிய அமைச்சர்: சூழல் இப்படி இருக்க ஏ சான்றிதழ் கிடைத்துவிட்டதால் 18 வயதுக்குட்பட்டவர்களை தியேட்டருக்குள் விடக்கூடாது என்ற விதியும் அமலுக்கு வந்தது. ஆனால், தவெகவை சேர்ந்த அமைச்சர் ராஜீவ் ராமநாதபுரத்தில் ஒரு தியேட்டரில் குடும்பத்துடன் ஜனநாயகன் முதல் நாள் முதல் காட்சியை பார்த்தார். அப்போது அவர் தன் பிள்ளையையும் அழைத்து வந்தார். இதை பார்த்த பலரும், சட்டங்கள் எல்லாம் சாமானியர்களுக்கு மட்டும்தானா? அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இலலியா? என கேள்வி எழுப்பினார்கள்.

கோர்த்துவிட்ட ரசிகர்கள்: மேலும், மாற்றம் மாற்றம் என்று வந்தவர்களே ஒரு சின்ன சட்டத்தைக்கூட பின்தொடர்வதில்லை; அப்படி இருக்கையில் இவர்களால் என்ன மாற்றம் வந்துவிடப்போகிறது என்ற கேள்வியும் எழ தொடங்கியிருக்கின்றன. இந்நிலையில் தன் குழந்தையுடன் அமைச்சர் படம் பார்த்த வீடியோவை ட்விட்டரில் ஷேர் செய்து ஒன்றிய தணிக்கை வாரியத்தை ரசிகர் ஒருவர் Tag செய்திருந்தார். அதற்கு, எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்ததற்கு நன்றி.. Noted.. கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் வந்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X