நான் ஹீராவை காதலிக்கத்தானே செய்தேன்.. ஏன் மறைக்கணும்?.. அஜித்குமார் அதிரடி.. இப்படி சொல்லிருக்காரே?

சென்னை: அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி,குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களுமே சுமார் ரக படங்கள்தான். அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை அஜித்தேகூட தயாரிக்கலாம் என்றும்; விரைவில் அதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்றும் தெரிகிறது. இந்நிலையில் ஏகேவின் அதிரடியான பேட்டி ஒன்று கவனத்தை ஈர்த்திருக்கிறது.

அஜித்குமாருக்கென்று பெரும் ரசிகர் படை இருக்கிறது. ரசிகர் மன்றங்களை அவர் கலைத்தாலும் அவருக்கான ரசிகர்கள் குறையவே இல்லை. தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோவுக்கு அதிக அளவு ஓபனிங் வசூல் கிடைப்பது அஜித்துக்கு மட்டும்தான். மன்றங்களை கலைத்தாலும் அவர் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் வெறி பிடித்த அன்பை பார்த்து ஒட்டுமொத்த தமிழ்நாடும் மிரண்டு போகும் என்பதுதான் உண்மை. அந்த அளவுக்கு தனக்கான ரசிகர்களை பலமாக வைத்திருக்கிறார் அவர்.

Ajith Kumar on Dating Heera Why Should I Hide My Love Throwback Interview Goes Viral
Photo Credit:

விடாமுயற்சி: கடைசியாக அவரது நடிப்பில் இரண்டு படங்கள் கடந்த வருடத்தில் ரிலீஸாகின. மிகப்பெரிய எதிர்பார்ப்பையுமே அவ்விரு படங்களும் சம்பாதித்திருந்தன. ஆனால் பெரும்பாலான ரசிகர்களை ஏமாற்றிவிட்டது படம். அதேசமயம் விடாமுயற்சி திரைப்படம் இப்போது அனைவருக்கும் பிடிக்காது; இன்னும் சில வருடங்களில் எல்லோராலும் கொண்டாடப்படும் பாருங்கள் என்பது ஏகே ரசிகர்களின் தீவிர நம்பிக்கையாக இருக்கிறது. அடுத்ததாகவும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்தான் ஏகே சிக்கவிருக்கிறார்.

Also Read
Jana Nayagan Blue Sattai Maran Review - ஜனநாயகன் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்.. வெரி ராங் ப்ரோ.. சிதைச்சிட்டாரு
Jana Nayagan Blue Sattai Maran Review - ஜனநாயகன் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்.. வெரி ராங் ப்ரோ.. சிதைச்சிட்டாரு

கார் ரேஸ்: ஒருபக்கம் பிஸியாக நடித்துவரும் அஜித்குமார் மறுபக்கம் துபாயில் நடைபெற்ற கார் ரேஸிலும் தனது டீமோடு கலந்துகொண்டார். அந்தப் போட்டியில் வெற்றியும் பெற்றுவிட்டார். இதனையடுத்து அஜித்துக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்தார்கள். அப்போதிருந்து உற்சாகம் உச்சமாகி தன்னுடைய கார் ரேஸ் டீமுடன் பல நாடுகளில் நடக்கும் பந்தயங்களில் சென்று கலந்துகொண்டு வெற்றியும் பெறுகிறார். அவர் ரேஸில் சாதித்தாலும் அடிக்கடி சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் அவருக்கான படையின் ஆசையாக இருக்கிறது.

Recommended For You
விஜய் படம் பார்த்து குடும்பத்துடன் அழுத தம்பி விக்ராந்த்.. மகன் இவ்ளோ பெருசா வளர்ந்துட்டாரே!
விஜய் படம் பார்த்து குடும்பத்துடன் அழுத தம்பி விக்ராந்த்.. மகன் இவ்ளோ பெருசா வளர்ந்துட்டாரே!

முதல் காதல்: இதற்கிடையே பெர்சனல் வாழ்க்கையிலும் அஜித் பெரும்பாலும் க்ளீன் இமேஜையே வைத்திருப்பவர். முதலில் நடிகை ஹீராவை 90களில் தீவிரமாக காதலித்தார். ஆனால் சில காரணங்களால் இரண்டு பேரும் பிரிந்துவிட்டார்கள். அதனையடுத்து அமர்க்களம் படத்தில் நடித்தபோது ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் ஹீராவுடனான காதல் குறித்து ஏகே கொடுத்த த்ரோபேக் பேட்டி ஒன்று மீண்டும் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

அஜித்குமாரின் பேட்டி: அவர் அந்தப் பேட்டியில், "'நீ ஒரு நடிகன். உணர்வுகளை எல்லாம் இப்படி திறந்த புத்தகம் ஆக்கக்கூடாது; இப்படியெல்லாம் இருக்கக்கூடாது என நிறைய பேர் சொல்கிறார்கள். ஏன் அப்படி என்று எனக்கு புரியவில்லை. இமேஜ் என்றால் என்ன? நான் ஏன் என்னை பற்றி யாரிடமும் சொல்லாமல் மறைத்திட வேண்டும்?.. நானும் ஹீராவும் காதல் செய்தோம் என்று எல்லோரிடமும் சொன்னேன். காதல்தானே செய்தேன். அது உயர்ந்த விஷயம்தானே! அதற்கு பிறகு சில விஷயங்கள் எங்களுக்குள் ஒத்துவரவில்லை பிரிந்துவிடலாம் என முடிவு செய்தோம்" என்றிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X