ஜன நாயகன் டிக்கெட் 2500 ரூபாய்.. விஜய்யின் ஒன் லாஸ்ட் டைம் டான்ஸை பார்க்க முண்டியடிக்கும் ஃபேன்ஸ்!
சென்னை: ஜன நாயகன் படத்துக்கான டிக்கெட் முன்பதிவு கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது முதலே ரசிகர்கள் மற்றும் பெரிய நிறுவனங்கள் என போட்டிப் போட்டு டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் 60 ரூபாயில் இருந்து அதிகபட்சம் 190 ரூபாய்க்கே டிக்கெட் விற்பனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆனால், இந்தியாவில் ஒரு தியேட்டரில் அதிகபட்சமாக 2500 ரூபாய்க்கு ஜன நாயகன் டிக்கெட் விற்பனையாகி உள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ்நாட்டில் தான் இன்னமும் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களாக இருந்தாலும் பெரிதாக டிக்கெட் விலைகளை உயர்த்தாமல் உள்ளனர். ஆனால், பெங்களூரு, மும்பை போன்ற மற்ற நகரங்களில் எல்லாம் டிக்கெட் விலை 800 முதல் 1000 ரூபாய்க்கு மேல் உள்ளது.
அதிரடி ஹவுஸ்ஃபுல்: தளபதி விஜய் டைட்டில் கார்டு பார்க்கவே உலகளவில் உள்ள விஜய் ரசிகர்கள் முதல் நாள் முதல் ஷோவை பார்க்க முண்டியடிப்பது வாடிக்கை. புக் மை ஷோவில் டிக்கெட் விற்பனை தொடங்கியதுமே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து சர்வர் கிராஷ் ஆகிவிடும். இந்நிலையில், இப்போ மாண்புமிகு முதலமைச்சர் விஜய் என்கிற டைட்டில் கார்டுடன் ஜன நாயகன் வெளியாகவுள்ள நிலையில், டிக்கெட்டுகள் அதிரடியாக விற்கப்பட்டு வருகின்றன.
2500 ரூபாய் டிக்கெட்: கர்நாடகாவை சேர்ந்த கேவிஎன் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், நரேன், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஜன நாயகன் படத்துக்கு இந்தியாவிலேயே அதிகபட்சமாக 2500 ரூபாய்க்கு ஒரு டிக்கெட்டை பெங்களூருவில் உள்ள சினிபொலிஸ் - சாந்திநிகேதன் சினிமாஸ் விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த தியேட்டரில் ரெக்லைனர் சீட்கள் இருப்பதால் செம வசதியாக ரசிகர்கள் படத்தை பார்க்க முடியும் என்பதால் இந்த விலை என்று கூறுகின்றனர்.
3 நாளில் பாக்ஸ் ஆபீஸ் வேட்டை ஆரம்பம்: ஜன நாயகன் திரைப்படத்துக்கான டிக்கெட் முன்பதிவுகள் பல இடங்களில் முதல் காட்சிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து ஹவுஸ் ஃபுல் ஆகியுள்ளன. முதல் நாள் ஷோவுக்கான டிக்கெட்டுகளும் விரைவில் விற்றுத் தீர்ந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் 3 நாட்களில் ஜன நாயகன் படம் பாக்ஸ் ஆபீஸ் வேட்டை நடத்தப் போவதாக கேவிஎன் தற்போது புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. செகண்ட் கட் டிரைலர் வெளியிட வேண்டும் என்றும் ப்ரோமோ காட்சிகளை வெளியிட்டால் புரமோஷனுக்கு நல்லா இருக்கும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications

