Jananayagan: வாங்கி வெச்ச FDFS டிக்கெட்டுக்கு வேலை வந்தாச்சு.. ஜன நாயகன் ரிலீஸ் தேதி இதோ.. One Last Dance

சென்னை: முதலமைச்சர் விஜய் நடித்த ஜன நாயகன படம் வரும் 23ஆம் தேதி அதாவது ஜூலை மாதம் 23ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என்ற தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் ஏற்கனவே வாங்கி வைத்த படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டிற்கு வேலை வந்துவிட்டது என்று ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.

Also Read
ஜனநாயகனை எப்போது வேண்டுமானாலும் ரிலீஸ் பண்ணுங்க.. இதை முதலில் செல்லுங்க? ரசிகர்களின் மதிப்புமிக்க கேள்வி
ஜனநாயகனை எப்போது வேண்டுமானாலும் ரிலீஸ் பண்ணுங்க.. இதை முதலில் செல்லுங்க? ரசிகர்களின் மதிப்புமிக்க கேள்வி

Jana Nayagan to Release on July 23 Official Announcement Sends Vijay Fans Into Celebration

அரசியலில் முழு கவனம் செலுத்தி வரும் முதலமைச்சர் விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படமாக 'ஜன நாயகன்' பார்க்கப்படுவதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது.

ஏற்கனவே சிறப்பு காட்சிக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வைத்திருந்த ரசிகர்கள், "இனி காத்திருப்பதற்கு முடிவு வந்துவிட்டது", "முதல் நாள் முதல் காட்சி உறுதி", "வேலைக்கு லீவ் சொல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு" என்று உற்சாகமாக பதிவிட்டு வருகின்றனர். பலர் தங்களது அலுவலக விடுப்பையும் இப்போதே திட்டமிட்டு வருவதாக சமூக வலைதளங்களில் பதிவுகள் குவிந்து வருகின்றன.

ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக உறுதியானதால், இன்னும் சில நாட்களில் புது டிரெய்லர், புரமோஷன் நிகழ்ச்சிகள் மற்றும் முன்பதிவு குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 'ஜன நாயகன்' திரைப்படத்தின் ஹைப் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது.கே.வி.என் புரெடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், நாசர், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்து உருவாகி உள்ள, இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் எல்லாம் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதேபோல் படத்தின் டிரைலரும் ரிலீஸ் செய்யப்பட்ட காலகட்டத்தில் உலக அளவில் டிரெண்ட் ஆனது.

கூடுதல் விலை: படத்தின் புக்கிங் ஓபன் ஆனதுமே ரசிகர்கள் பலரும் போட்டி போட்டுக் கொண்டு டிக்கெட்டுகளை வாங்கினர். அதுவும் விஜய் படம் என்றால் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் என்பது ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்களால் சந்தை மதிப்பை விட கூடுதல் விலைக்கு விற்கப்படும். அதாவது 200 ரூபாய் டிக்கெட் என்பது இரண்டாயிரம், மூன்றாயிரம், ஐந்தாயிரம் என விற்பனை செய்யப்பட்டது. சட்டப்படி இது தவறு என்றாலும் ரசிகர்கள் விஜய் மீது வைத்திருக்கும் பிரியத்தை அவரது ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்களே தவறாக பயன்படுத்தி ஆதாயம் தேடுகிறார்கள். இது தொடர்பாக முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் விலைக்கு பேரம் பேசிய ஆடியோக்கள் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே இணையத்தில் கசிந்தது அனைவருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Read more about: vijay thalapathy vijay politics
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X