ஜேசன் சஞ்சய் வெல்வாரா மாட்டாரா?.. விஜய்யின் சித்தியுடைய கணிப்பு இதுதான்.. என்னவென்று பாருங்க

சென்னை: விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் சந்தீப் கிஷனை ஹீரோவாக வைத்து சிக்மா என்ற படத்தை இயக்கியிருக்கிறார். படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. சமீபத்தில் வெளியான படத்துடைய டீசருக்கும் டீசண்ட்டான வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விஜய்யின் சித்தியும், நடிகர் விக்ராந்த்தின் தாயுமான ஷீலா; தனது பேரன் ஜேசன் குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கிறார்.

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய். போக்கிரி, வேட்டைக்காரன் பட பாடல்களில் சில நொடிகள் ஸ்க்ரீனில் தலை காண்பித்த அவர்; நிச்சயம் அவரது தந்தை மாதிரி பெரிய ஹீரோவாக வருவார் என்றுதான் ரசிகர்கள் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் நடிப்பில் ஈடுபாடு காண்பிக்காத அவர்; இயக்கத்தின் மீது ஆசைப்பட்டு கனடா நாட்டில் அதுதொடர்பான படிப்பை படித்தார். படித்துக்கொண்டிருக்கும்போதே சில குறும்படங்களை இயக்கி அங்கே கவனத்தையும் ஈர்த்ததாக கூறப்படுகிறது.

Jason Sanjay s Sigma Gains Huge Expectations Vijay s Aunt Sheela Speaks Proudly
Photo Credit:

இயக்குநராக அறிமுகம்: படிப்பை முடித்துவிட்டு யாரிடமும் உதவி இயக்குநராகவெல்லாம் பணியாற்றவில்லை ஜேசன். அவரிடம் இருந்த கதை லைகா நிறுவனத்துக்கு பிடித்துப்போக அவரை இயக்குநராக அறிமுகமாக்க முடிவு செய்து; அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டது. அவர் இயக்குநராக ஃபிக்ஸ் செய்யப்பட்டாலும்; ஹீரோவாக யாரும் கமிட்டாகாமல் இருந்தார்கள். எக்கச்சக்க நடிகர்களிடம் அவர் கதை சொன்னாலும்; அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை என்றே கூறப்பட்டது.

மதுரை பற்றி அஜித் சொன்னது.. சாப்பிடும்போது பட்ட அசிங்கம்.. சூரி ஓபன் டாக்.. எவ்வளவு பட்டிருக்காரு பாருங்க

சிக்மா ஜேசன்: சூழல் இப்படி இருக்க ஒருவழியாக ஜேசன் சஞ்சய் சொன்ன கதை நடிகர் சந்தீப் கிஷனுக்கு பிடித்துப்போக; அவர் இயக்கத்தில் நடிக்க ஒத்துக்கொண்டார். அவரையடுத்து தம்பி ராமைய்யா, ராஜு சுந்தரம் உள்ளிட்டோர் எல்லாம் ஜேசனின் படத்துக்குள் வந்தார்கள். எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். படத்துக்கு சிக்மா என்று பெயர் வைக்கப்பட்டது. சத்தமே இல்லாமல் பல நாடுகளில் ஷூட்டிங்கை நடத்தினார் அவர். படத்தில் பணியாற்றியவர்கள் எல்லாம் அவரை ஏகபோகமாக புகழ்ந்து தள்ளிவிட்டார்கள்.

டீசருக்கு சுமார் வரவேற்பு: படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் அவர் இப்போது இருக்கிறாராம். படத்தின் டீசர் சமீபத்தில்தான் வெளியானது. டீசரை பார்க்கையில், கண்டிப்பாக இது பக்கா கமர்ஷியல் பேக்கேஜாக உருவாகியிருப்பது தெரிகிறது. அதுமட்டுமின்றி படம் நிச்சயம் ஹிட்டடிக்கும் என்றும் விஜய்யின் ரசிகர்கள் நம்பிக்கையுடன் சொல்ல ஆரம்பித்திருக்கிறர்கள். விரைவில் படம் ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் ஜேசன் பற்றி விஜய்யின் சித்தியும், நடிகர் விக்ராந்த்தின் தாயுமான ஷீலா தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசியிருக்கும் விஷயங்கள் கவனத்தை ஈர்த்திருக்கின்றன.

ஷீலா பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "என் பேரன் ஜேசன் சஞ்சய். பாலைவிட ஏடுதான் இனிக்கும் என்று என் அப்பா சொல்வார். அதுமாதிரி பிள்ளைகளைவிட அவர்களுடைய பிள்ளைகள்தான் ரொம்ப சந்தோஷம். கண்டிப்பாக ஜேசன் வெல்வார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. நிச்சயம் ஜெயிப்பார். ஏனென்றால் அதே ஜீன், ரத்தம்தான் அவருக்குள்ளும் இருக்கிறது. இளைய தளபதிக்கு கொடுத்த வரவேற்பு மாதிரியே அவரது பையனுக்கும் ரசிகர்கள் கொடுத்துவிடுவார்கள். அடுத்தது அவர் பாட்டுக்கு வந்துவிடுவார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X