விஜய்யும், சங்கீதாவும் ஜேசன் சஞ்சய்யை கூப்பிட வரும்போது.. பிரபலம் சொன்ன சூப்பர் விஷயம்
சென்னை: ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியிருக்கும் சிக்மா திரைப்படம் ஜூலை 31ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். தமன் இசையமைத்திருக்கிறார். லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. கண்டிப்பாக தந்தை மாதிரியே இவரும் சினிமாவில் பெரிய இடத்துக்கு செல்வார் என்ற நம்பிக்கையிலும் இருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.
விஜய்க்கும், சங்கீதாவுக்கும் திருமணம் நடந்து இப்போது விவாகரத்தில் வந்து நிற்கிறது. தன் கணவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து டைவர்ஸ் கோரியிருக்கிறார் சங்கீதா. இந்த விஷயத்தில் மகன் ஜேசன் சஞ்சய்யும், மகள் திவ்யா சாஷாவும் தங்களது தாய் பக்கம்தான் நிற்கிறார்கள் என பனையூர் மற்றும் நீலாங்கரைக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள். கடந்த சில வருடங்களாகவே அவர்கள் விஜய்யுடன் டச்சில் இல்லை என்றும் கூறுகிறார்கள்.

விஜய் செல்லவில்லையா?: அவர்களின் இந்தக் கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக; கடந்த சில வருடங்களில் அதாவது 2021க்கு பிறகு பிள்ளைகளுடன் சேர்ந்த மாதிரி விஜய் இருக்கும் ஒரு புகைப்படத்தைகூட பார்க்க முடியவில்லை. அதுமட்டுமின்றி லண்டனில் சாஷா பட்டம் வாங்கியபோதுகூட விஜய் அந்த இடத்தில் இல்லை. ஜேசன் சஞ்சய்தான் தந்தை ஸ்தானத்தில் இருந்து அங்கே கவனித்துக்கொண்டார். இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது சங்கீதாவுக்குத்தான் பிள்ளைகளின் சப்போர்ட் இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிறது.
சஞ்சய் படம்: அதுமட்டுமின்றி ஜேசன் சஞ்சய் இயக்கப்போவதாக அறிவிப்பு வந்தபோதுகூட விஜய் வாழ்த்து தெரிவிக்கவில்லை. ஆகமொத்தம் தந்தை - மகனுக்கு இடையே சில விஷயங்கள் சரியில்லை என்பதை புரிந்துகொள்ளலாம். தன்னை சுற்றி பிரச்னைகள் இருந்தாலும்; சஞ்சய் தன்னுடைய இலக்கில் தெளிவாகவும், தீர்க்கமாகவும் இருந்தார். எப்படியோ சிக்மா படத்தின் ஷூட்டிங்கையும் முடித்து ஜூலை 31ஆம் தேதி ரிலீஸ் செய்வதற்கும் ரெடியாகிவிட்டார்.
சூப்பர் வீடியோ: படத்தின் ரிலீஸ் நெருங்க நெருங்க சஞ்சய் பற்றிய செய்திகள் அதிகம் உலா வருகின்றன. சமீபத்தில்கூட துணை நடிகர் ஜெமினி மணி; ஜேசன் சஞ்சய்யை சந்தித்தபோது எடுத்த வீடியோவை பகிர்ந்துகொண்டார். அந்த வீடியோவில், நடிகரின் மகனுடன் சஞ்சய் ஜாலியாக பேசிக்கொண்டிருந்தார். இந்நிலையில் அதே நடிகர் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருக்கிறார்.
ஜெமினி மணி பேட்டி: அந்தப் பேட்டியில் பேசிய ஜெமினி மணி, "அடையாறில்தான் ஜேசன் சஞ்சய் ஐந்தாம் வகுப்போ, ஆறாம் வகுப்போ படித்தார். நான் ஜெமினியில் வேலை செய்தேன். எங்கள் எம்.டியின் மகனை கூப்பிட அந்த ஸ்கூலுக்கு நான் போவேன். வாரத்தில் இரண்டு நாட்களோ, மூன்று நாட்களோ மகனை பிக்கப் செய்ய விஜய் வந்துவிடுவார். யாருமே அவரை பார்க்க முடியாது. கார் கண்ணாடி வழியாக எதுவும் தெரியாது.
சங்கீதா வந்தால்: விஜய்யுடன் சங்கீதாவும் வருவார். அப்படி வந்தால் மேடம் இறங்கி ஸ்கூல் கேட் வரை வந்து சஞ்சய்யை அழைத்துக்கொண்டு காருக்கு செல்வார். விஜய் ட்ரைவர் சீட்டில்தான் இருப்பார். ரொம்ப அரிதாகத்தான் விஜய் மட்டும் வருவார். ஒருநாள் செக்யூரிட்டி அசந்த நேரத்தில் ஜேசன் சஞ்சய்யை தூக்கிவிட்டேன்.
சைகையில் பேசினோம்: அவர் என் முதுகில் அடிக்க ஆரம்பித்துவிட்டார். பையனை தூக்கிக்கொண்டு விஜய் காரிடம் சென்றேன். அவர் கதவை தெரிந்து,'என்ன இது' என சைகையில் கேட்டார்; நானும், 'உங்களை பார்க்கத்தான்' என சைகையில் சொல்லிவிட்டு வந்தேன். அவரும் சிரித்துவிட்டு போய்விட்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications
