கண் கலங்கி நாகார்ஜுனாவிடம் நேராகவே சொல்லிவிட்டார்.. சமந்தா பற்றி ஓபனாக பேசிய பத்திரிகையாளர்
சென்னை: நடிகை சமந்தா நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சில வருடங்கள் சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை திடீரென பிரிவில் முடிந்தது. இதனையடுத்து சமந்தா தன்னுடைய கரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். ஆனால் திடீரென்று அவருக்கு மையோசிடிஸ் நோய் வந்து அதிலிருந்து மீண்டார். தொடர்ந்து சாகுந்தலம், குஷி ஆகிய இரண்டு படங்களில் நடித்த அவர் குட்டி பிரேக் எடுத்தார்.சூழல் இப்படி இருக்க நாக சைதன்யா நடிகை சோபிதாவை விரைவில் திருமணம் செய்யவிருக்கிறார்.
முன்னணி நடிகையான சமந்தா தெலுங்கில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ரீமேக்கில் நடித்தபோது நாக சைதன்யாவை காதலித்தார். இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் அவர்களது திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து நடிப்பில் தீவிரம் காட்டி வந்தார் சமந்தா. ஆனால் திடீரென கடந்த 2021ஆம் ஆண்டு நாங்கள் இருவரும் பிரிகிறோம் என்று நாக சைதன்யாவும், சமந்தாவும் சமூக வலைதளத்தில் அறிவித்தனர். அதற்கான காரணங்களாக பல யூகங்கள் சொல்லப்படுகின்றன.

பிஸியான சமந்தா: திருமண முறிவுக்கு பிறகு தனது கரியரில் தீவிர கவனம் செலுத்திவந்தார் சமந்தா. அந்தவகையில் தமிழில் அவர் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்தார். மேலும் தெலுங்கில் வெளியான புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார். அந்தப் பாடலில் நடனம் ஆடிய பிறகு அவருக்கென்று ரசிகர் கூட்டம் பெருக ஆரம்பித்தது. மேலும் ஹாலிவுட் படம் ஒன்றிலும் நடிப்பதற்கு கமிட்டானார் சமந்தா.
மையோசிடிஸ்: சமந்தாவின் கரியர் கிராஃப் உச்சம் சென்றுகொண்டிருந்தபோது அவருக்கு மையோசிடிஸ் என்னும் நோய் வந்தது. அரிய வகை நோயான அதிலிருந்து மீள்வதற்கு சிகிச்சை எடுத்த சமந்தா ஒருவழியாக அந்த நோயிலிருந்து வெளியே வந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் தனது இரண்டாவது இன்னிங்ஸில் அவர் நடித்த சாகுந்தலம், குஷி ஆகிய இரண்டு படங்களுமே தோல்வியை சந்தித்தன. சூழல் இப்படி இருக்க சினிமாவிலிருந்து குட்டி பிரேக் எடுப்பதாக கூறி வாங்கிய அட்வான்ஸை திருப்பி கொடுத்தார். இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
நாக சைதன்யா - சோபிதா திருமணம் நடக்கவிருக்கும் இடம் எது தெரியுமா?.. வெளியான லேட்டஸ்ட் தகவல்
நாக சைதன்யா நிச்சயதார்த்தம்: இந்தச் சூழலில் சமீபத்தில் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவுக்கும், நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. ஒருபக்கம் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவரகள்; மறுபக்கமோ சமந்தா விரைவில் இன்னொரு திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கோரிக்கையையும் ரசிகர்கள் வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
சேகுவேரா பேட்டி: இந்நிலையில் சமந்தா குறித்து பத்திரிகையாளர் சேகுவேரா பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது. தனியார் யூட்யூப் சேனல் ஒன்றிடம் பேசிய அவர், “தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து சமந்தாவை பேச்சு வருகிறது. தெலுங்கு நடிகர் ஒருவரிடம் சமந்தா 25 கோடி ரூபாய் கடன் கேட்டதாக சொல்வதெல்லாம் பொய். சட்டப்பூர்வமாக விவாகரத்து வாங்கிவிட்டால் நல்லது என்று நாக சைதன்யா, சமந்தா ஆகிய இருவருமே நினைத்தார்கள். அதன்படி விவாகரத்தையும் வாங்கிக்கொண்டார்கள். சமந்தாவுக்கு 200 கோடி ரூபாய் கொடுக்க நாகார்ஜுனா தரப்பு ரெடியாக இருந்தது. ஆனால் சமந்தாவோ நாகார்ஜுனவிடமே நேரடியாக எனக்கு இது வேண்டாம் என்று கண்ணீரோடு சொல்லிவிட்டார்’ என்றார்.


Click it and Unblock the Notifications











