ஜாய் கிரிஸில்டா - மாதம்பட்டி ரங்கராஜ் மகன் செம சேட்டையோ?.. செம ஆக்டிவ் ப்பா.. சுத்தி போடுங்க
சென்னை: ஜாய் கிரிஸில்டாவும், மாதம்பட்டி ரங்கராஜும் சில வருடங்களுக்கு முன்பு ரகசிய திருமணம் செய்துகொண்டார்கள். திருமணம் முடிந்ததும் அதிலிருந்து ரங்கராஜ் முயன்றதாகவும்; அதன் காரணமாக இதனை வெளியே கொண்டு வருகிறேன் என்று சொல்லியும் அதிரடி செயலில் ஈடுபட்டார் ஜாய். நீண்ட இழுபறிக்கு பிறகு இந்தப் பிரச்னை சமீபத்தில் முடிவுக்கு வந்தது.
பிரபல சமையல் கலைஞர் மற்றும் நடிகராக ஜொலிப்பவர் மாதம்பட்டி ரங்கராஜ். அவர் ஏற்கனவே ஸ்ருதி என்பவரை மணந்திருந்தார். அதனையடுத்து முதல் மனைவிக்கு தெரியாமல் ரகசியமாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவையும் திருமணம் செய்துகொண்டார். திருமணம் செய்துகொண்டபோது கிரிஸில்டா கர்ப்பமாக இருந்திருக்கிறார். அவரிடமிருந்து ரங்கராஜ் விலகுவதற்கு முயல; ஜாயோ காவல் துறையில் புகார் அளித்து ரங்கராஜுக்கு செக் வைத்தார்.

வளர்ந்த பிரச்னை: அதற்குப் பிறகு கிரிஸில்டாவின் வாய்க்கு பூட்டு போட நீதிமன்றம் சென்றார் மாதம்பட்டி. அங்கே நீதிமன்றம் குட்டு வைத்து அனுப்பியது. அதனையடுத்து தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் மகளிர் ஆணையத்தில் நடந்த விசாரணையில் ஆஜரானார். அப்போது டி.என்.ஏ டெஸ்ட் எடுத்து; பிறந்திருக்கும் குழந்தை என்னுடையதுதான் என்பதை நிரூபித்தால்; காலம் முழுக்க அந்த ஆண் குழந்தையை பார்த்துக்கொள்ள தயார் எனவும் அறிவித்திருந்தார்.
ஓய்ந்த பிரச்னை: இருப்பினும் டி.என்.ஏ சோதனையில் கலந்துகொள்ளாமல் தவிர்த்துவந்த அவர்; எப்படியோ கலந்துகொண்டார். அப்போது அந்தக் குழந்தை அவருக்கு பிறந்தது என்பது உறுதியானது. இதன் காரணமாக சிந்துபாது கதை போல் நீண்டுகொண்டிருந்த அவர்களது பிரச்னை முடிவுக்கு வந்தது. இந்தப் போராட்டத்தில் வென்றதற்காக ஜாய் கிரிஸில்டாவுக்கு அனைவருமே தங்களது வாழ்த்துகளை கூறினார்கள். அவரும் ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்துவருகிறார்.
ஸ்ருதியுடன் பிரச்னை: இந்தப் பிரச்னை ஓய்ந்த சில நாட்களிலேயே ஜாய்க்கும், ஸ்ருதிக்கும் சோஷியல் மீடியாவில் பிரச்னைகள் மீண்டும் உருவாக தொடங்கின. இரண்டு பேரும் மாற்றி மாற்றி மறைமுகமாக போஸ்ட்டுகளை போட்டு தாக்கி கொண்டார்கள். பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை திடீரென அவர்கள் அப்படி தாக்கி போட்டுக்கொள்ளும் போஸ்ட்டுகளை நிறுத்திக்கொண்டார்கள். ரங்கராஜை பொறுத்தவரை இரண்டு பேரிடமும் இப்போது அனுசரனையோடு இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
ட்ரெண்டாகும் புகைப்படங்கள்: ஜாய் கிரிஸில்டாவும் சமீபத்திகூட, 'என்னுடைய கணவர் என்னிடமும், என் மகனிடமும் ரொம்பவே பாசமாக இருக்கிறார்' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தன்னுடைய மகன் ராகா ரங்கராஜின் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார் ஜாய். கையில் பிளேட்டையும், டம்ளரையும் வைத்துகொண்டு சேட்டை செய்யும்படியான போஸ் கொடுத்திருக்கிறார் ராகா. அப்படியே ரங்கராஜின் முக சாயல் தென்படவும் ஆரம்பித்துவிட்டது. இந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், பையன் செம சேட்டை போல; சீக்கிரம் சுத்தி போடுங்க என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
