முந்தானை முடிச்சு படத்தில் பாக்யராஜ் செய்த தரமான சம்பவம்.. எல்லாத்தையும் உடைச்சாரு பாஸ்

சென்னை: பாக்யராஜ் இன்று தனது 73வது வயதில் உடல்நல குறைவால் உயிரிழந்தார். நேற்று முன்தினம்கூட குஷ்பு மகளுக்கு நடந்த திருமணத்தில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று திடீரென அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு அவரது உயிரை எடுத்திருக்கிறது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் இது உச்சக்கட்ட அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியிருக்கிறது.

தமிழ் சினிமாவில் மறக்கவே முடியாத படைப்பாளிகளில் ஒருவர் பாக்யராஜ். முதலில் நாடகங்கள் போட்டுக்கொண்டிருந்த அவருக்கு பாரதிராஜாவுடனான பழக்கத்தால் சினிமாவுக்குள் வந்தார். 16 வயதினிலே,கிழக்கே போகும் ரயில்,சிகப்பு ரோஜாக்கள் ஆகிய படங்களில் எல்லாம் வசனகர்த்தாவாகவும், கதாசிரியராகவும் முக்கியமான பொறுப்பை வகித்தார். அவரும் தன்னை பயன்படுத்திக்கொண்டு தொடர்ந்து வளர்த்துக்கொண்டார்.

K Bhagyaraj Passes Away at 73 The One Scene That Proved Why He Was Tamil Cinema s Screenplay King
Photo Credit:

இயக்குநர் பாக்யராஜ்: ஒருகட்டத்தில் படங்கள் இயக்க தொடங்கிய பாக்யராஜ்; முதல் படமான சுவர் இல்லாத சித்திரங்கள் திரைப்படத்தை இயக்கினார். அந்த தலைப்பு சென்ட்டிமென்ட்டாக ஒத்து வராது என்று பலரும் சொல்லியும் கேட்காத அவர்; அந்த தலைப்போடேயே படத்தையும் எடுத்தார். ஒரு படத்தின் வெற்றிக்கு சென்ட்டிமென்ட்டைவிடவும்; திரைக்கதையும், கதையும்தான் சூப்பராக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் அப்படம் ஹிட்டடித்தது. தொடர்ச்சியாக அப்படி அவர் ஹிட் படங்களை கொடுத்தார்.

Also Read
பாக்யராஜை மிரட்டிய ஊர்வசி.. ஒன்னும் சொல்ல முடியாமல் தவித்த திரைக்கதை மன்னன்.. பாவம்
பாக்யராஜை மிரட்டிய ஊர்வசி.. ஒன்னும் சொல்ல முடியாமல் தவித்த திரைக்கதை மன்னன்.. பாவம்

திரைக்கதை மன்னன்: எல்லோராலும் அவர் திரைக்கதை மன்னன் என்று புகழப்படுபவர். அவர் தன்னுடைய திரைக்கதையில் சுவாரஸ்யத்தையும், எதார்த்தத்தையும் சரியான கலவையில் கொடுத்து அசரடிப்பவர். அதுமட்டுமின்றி தன்னுடைய ஸ்க்ரீன் ப்ளே மூலம் பல மரபுகளையும் உடைத்தவர். அவரது ஸ்க்ரீன் ப்ளே உதாரணமாக வைத்துக்கொண்டு உழைக்கும் இயக்குநர்கள் இன்னமும் இங்கே இருக்கத்தான் செய்கிறார்கள்.

முந்தானை முடிச்சு: அவரது படங்களில் முக்கியமான படம் முந்தானை முடிச்சு. ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான அப்படத்தில் ஊர்வசி ஹீரோயினாக அறிமுகமாகியிருந்தார். மனைவியை இழந்து குழந்தை வைத்துக்கொண்டிருக்கும் ஒருவரது வாழ்க்கையில்; பெண் ஒருவர் எப்படி இடம்பிடிக்கிறார் என்பதுதான் ஒன்லைன். இந்த ஒன்லைனை வைத்துக்கொண்டு அவர் அந்தப் படத்துக்கு அவ்வளவு நேர்த்தியாக திரைக்கதை அமைத்திருப்பார்.

ஃபார்முலா செட் செய்த பாக்யராஜ்: முக்கியமாக அந்தப் படத்தின் இடைவேளை காட்சி. ஹீரோவை காதலிக்கும் காதலி அவரை அடைய வேண்டும் என்பதற்காக எந்த எல்லை வேண்டுக்குமானாலும் செல்வார் என்று ஒன்று இருக்கிறதல்லவா. அதை முழுமையாக சொல்லியவர் அவர்தான். அதாவது, தன் மீது பாலியல் வன்கொடுமை பழியை சுமத்திய ஊர்வசியை; அவர் சொல்வது உண்மையென்றால் இந்தக் குழந்தையை தாண்ட சொல்லுஙகள் என பாக்யராஜ் சொல்வார்.

ஊர்வசியும் எந்த சலனமும் இல்லாமல்; தன்னுடைய காதலுக்காக அந்த குழந்தையை கீழே போட்டு தாண்டிவிடுவார். அது அப்போதைக்கு திரையரங்குகளில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தின. ஒரு பெண் தன்னுடைய எண்ணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார் என்பதை வீரியமாக அனைவருக்கும் பதிய வைத்தார். இப்படியும் தைரியமாக சில மரபுகளை உடைக்கும்படி சீன்களை வைக்கலாம் எனவும் உணர்த்தினார்.

அதுமட்டுமின்றி கதை டிஸ்கஷனில் இதை பேசியபோது, இப்படி ஒரு சீனை இடைவேளை காட்சியில் வைத்தால்; எல்லோரும் அத்தோடு வீட்டுக்கு போய்விடுவார்கள் என உதவி இயக்குநர்கள் எல்லாம் சொல்ல; அதையெல்லாம் யோசிக்காமல் ரொம்பவே தைரியமாக அந்த சீனை வைத்திருந்தார். படமும் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. இப்படி எந்த சென்ட்டிமென்ட்டையும் தன்னுடைய படங்களுக்குள் நுழைய விடாமல் தடுத்த பெருமை அவருக்கு உண்டு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X