வாவ்.. போன தடவை விஜய்சேதுபதி.. இந்த முறை யார் தெரியுமா? அடுத்த லைவ் பேட்டிக்கு தயாரான உலகநாயகன்!
சென்னை: விஜய்சேதுபதியை தொடர்ந்து, உலகநாயகன் கமல்ஹாசனுடன் பிரபல இசையமைப்பாளர் இன்ஸ்டாகிராம் லைவில் கலந்துரையாடப் போகிறார்.
தலைவன் இருக்கின்றான் டைட்டிலில், சினிமா பையன் அபிஷேக் ராஜா ஒருங்கமைக்கும் இன்ஸ்டாகிராம் லைவ் நிகழ்ச்சியில், விஜய்சேதுபதி கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அருமையாக பதில் அளித்தார் நடிகர் கமல்ஹாசன்.
இந்நிலையில், இதன் அடுத்த முயற்சியாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், கமல் கலந்து கொள்ளும் லைவ் பேட்டி இந்த முறை இன்ஸ்டாகிராம் மட்டுமின்றி டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கிலும் நடைபெற போகிறது.
நிர்வாணமாக அலையும் பெண்.. கீழே கேமராவை வைத்து.. ராம் கோபால் வர்மாவின் நேக்டு ட்ரெயிலர் இதான்!

கமலும் விஜய்சேதுபதியும்
கடந்த மே 2ம் தேதி விஜய்சேதுபதி மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் கலந்து கொண்ட இன்ஸ்டாகிராம் லைவ் வீடியோ வைரலாக பேசப்பட்டது. நூறு படங்களை பார்த்தால் கிடைக்கும் சினிமா அறிவை, நடிகர் கமல்ஹாசனின் இந்த ஒரு மணி நேர நேரலை நிகழ்ச்சி கொடுத்ததாக பலரும் கமெண்ட் செய்திருந்தனர்.

கேள்விகளுடன் விஜய்சேதுபதி
கமல் அசால்ட்டா தான் நடிச்ச பல அற்புதமான படங்கள் பற்றி பதில் சொல்வார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். அவரிடம், இன்னும் பல மறைந்திருக்கும் ரகசியங்களை துல்லியமாக நோட் பண்ணி கேள்விகளாக, பயந்த மாதிரியும், பணிவுடனும் பல கேள்விகளை கேட்ட விஜய்சேதுபதிக்கும் பாராட்டுக்கள் குவிந்தன.

அடுத்த லைவ்
தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் விஜய்சேதுபதி நடிக்க உள்ளார். அதே போல அந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க உள்ளார். இந்நிலையில், அடுத்த லைவ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் உடன் ஏ.ஆர். ரஹ்மான் கலந்து கொள்ள உள்ளதாக ரஹ்மான் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது.

எப்போது
வரும் வியாழக்கிழமை ஜூன் 11ம் தேதி மாலை 5 மணிக்கு இன்ஸ்டாகிராம் லைவ்வில் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கலந்து உரையாடும் லைவ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. டர்மெரிக் மீடியா, ராஜ்கமல் நிறுவனம் மற்றும் சினிமா பையன் அபிஷேக் ராஜா இணைந்து இந்த நிகழ்ச்சியை வழங்குகின்றனர்.

நடுவுல வராத
கமல் மற்றும் விஜய்சேதுபதி பேசிய லைவ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ஓப்பன் பண்ணா யூடியூப் சேனலை நடத்தும் அபிஷேக் ராஜா, அந்த லைவ்வின் போது, அடிக்கடி அவரும் வந்து கமலிடம் சில கேள்விகளை கேட்டு, தனது இருப்பைக் காட்டிக் கொண்டார். அதற்காக அவரை கலாய்த்து பல மீம்களும் ட்ரோல்களும் குவிந்தன. இந்நிலையில், இந்த லைவ்வில் நீங்கள் தயவு செய்து வராதீங்க என நெட்டிசன்கள் ட்ரோல் செய்யத் தொடங்கி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











