Vijay - பல மணிநேரம் பேச்சு.. விஜய்யை அரசியலுக்கு அழைத்ததே நான்தான்.. கமல் ஹாசன் பெருமிதம்
சென்னை: தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார் விஜய். நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமலும் போட்டியிடாமலும் இருக்கப்போகும் தவெக 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்கவிருக்கிறது. விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.
விஜய் ரசிகர் மன்றம் என்று இருந்ததை ஏறத்தாழ 15 வருடங்களுக்கு முன்னதாக விஜய் மக்கள் இயக்கம் என்று மாற்றினார் விஜய். அதன் மூலம் பொதுமக்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகளை செய்யப்பட்டன. இதனையடுத்து விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து கூறிவந்தனர். ஆனால் விஜய் மௌனம் சாதித்திருந்தார். அதேசமயம் நலத்திட்ட உதவிகள் செய்வதை விஜய் மக்கள் இயக்கம் நிறுத்தவில்லை. எனவே விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று கணிக்கப்பட்டது.

அரசியல் என்ட்ரி: இந்தச் சூழலில் விஜய்யின் அரசியல் பிரவேசம் சமீபத்தில் நடந்தது. எந்த வித அலப்பறையும் இல்லாமல் சிம்ப்பிளாக தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் தனது அரசியல் வருகையை அறிவித்தார். அதன்படி கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் வேலைகளும் தொடங்கிவிட்டன. விஜய்யின் இந்த அதிரடி முடிவின் காரணமாக விஜய் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
மக்களவைத் தேர்தலுக்கு நோ: கட்சியை இப்போது ஆரம்பித்தாலும் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை; எந்தக் கட்சிக்கும் ஆதரவும் இல்லை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்து போட்டியிடவே அதிகளவு வாய்ப்புகள் இருப்பதாக பெரும்பாலானோர் கூறிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவுக்கு நோ: விஜய்யின் அரசியல் வருகை அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறதுதான். ஆனால் அவர் சினிமாவிலிருந்து ஒதுங்குவது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற நடிகர்களின் ரசிகர்கள்கூட விஜய் சினிமாவிலிருந்து ஒதுங்குவதை அவ்வளவாக விரும்பவில்லை. சிறந்த எண்ட்டெர்டெயினர் விஜய். அதற்குள் அவரது ERA முடிந்துவிட்டதா என்று நம்ப முடியாமல் சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுவதையும் பார்க்க முடிகிறது.
Vishal - விஷாலுக்கு தொடரும் உடல்நல பிரச்னை?.. உதவி செய்ய இறங்கியிருக்கிறாரா சிம்பு?
கமல் ஹாசன் பேச்சு: இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல் ஹாசன், “நடிப்பிலிருந்து ஒதுங்கி விஜய் அரசியலுக்கு வருவது அவரது தனிப்பட்ட முடிவு. விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று சொன்னது நான்தான். அவரை அரசியலுக்கு முதன்முதலாக வரவேற்றதும் நான்தான்” என்றார்.
உருவாகுமா கூட்டணி: கமல் ஹாசனின் இந்தப் பேச்சு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது. முக்கியமாக அரசியலுக்கு வர சொன்னதே தான் என்று கமல் ஹாசன் சொல்லியிருப்பதால் ஒருவேளை தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகமும், மக்கள் நீதி மய்யமும் கூட்டணி அமைத்து போட்டியிடுமோ என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











